< Psalmi 10 >

1 LAMED Zašto, Jahve, stojiš daleko, zašto se skrivaš u dane tjeskobe?
யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
2 Obijesni bezbožnik jadnika goni, u zamke ga hvata koje mu postavi.
துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
3 Bezbožnik se pohlepom hvali, NUN lakomac psuje i Jahvu prezire.
துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.
4 Bezbožnik zbori u obijesti svojoj: “Ne, istrage nema! TÓa ni Boga nema!” I u tome sva mu je misao.
துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.
5 Puti su mu svagda uspješni, na sudove tvoje on i ne misli, sve protivnike svoje prezire.
அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன; தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான்.
6 U srcu veli: “Neću posrnuti! Ni u kojem koljenu neću biti nesretan.”
நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
7 PE Usta mu puna kletve, lukavstva i prijevare, pod jezikom njegovim muka i nesreća.
அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
8 U zasjedi čuči pokraj ograda, potajno ubija nevina, AJIN očima siromaha vreba.
கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து, மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.
9 U zaklonu sjedi k'o lav u pećini, vreba da opljačka jadnika i da ga povuče u mrežu.
தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
10 Pritajen čuči na zemlji, od nasilja mu siromasi padaju.
௧0திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
11 U srcu svome veli: “ZÓaboravi Gospod, odvrati lice i nikoga ne vidi!”
௧௧தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து, எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்; தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.
12 KOF Ustani, Gospode Bože, podigni ruku, ne zaboravi siromaha.
௧௨யெகோவாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறக்காமலிரும்.
13 Zašto da bezbožnik prezire Boga, zašto da kaže u srcu: “Neće kazniti!”
௧௩துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து, நீர் கேட்டு விசாரிப்பதில்லை; என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்?
14 REŠ Jer ti vidiš, gledaš jad i nevolju, u ruci je mjeriš. Siromah se tebi predaje, ubogu ti si pomoć!
௧௪அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும், துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
15 ŠIN Pakosnu grešniku satri mišicu, kazni mu pakost da je više ne bude!
௧௫துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.
16 Jahve je kralj u vijeke vjekova, iz zemlje njegove nestat će pogana.
௧௬யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.
17 TAU Počuj, o Jahve, čežnju siromašnih, okrijepi im srce, uho prikloni:
௧௭யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர்.
18 da zaštitiš pravo ubogih i tlačenih, da straha više ne zadaje čovjek zemljanÄi.
௧௮மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல், தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.

< Psalmi 10 >