< Mudre Izreke 4 >
1 Slušajte, djeco, pouku očevu i pazite kako biste spoznali mudrost,
பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்; கவனமாயிருந்து புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
2 jer dobar vam nauk dajem: ne prezrite moga naputka.
நான் உங்களுக்கு நல்ல ஆலோசனையைத் தருகிறேன், எனவே நீங்கள் எனது போதனைகளைக் கைவிடாதிருங்கள்.
3 I ja sam bio sin u svoga oca i nježan jedinac u svoje matere;
நான் எனது தகப்பனுக்குச் செல்ல மகனாய், என் தாய்க்கு அருமையான ஒரே பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
4 i mene je on učio i govorio mi: “Zadrži moje riječi u svojem srcu, poštuj moje zapovijedi i živjet ćeš.
அப்பொழுது என் தகப்பன் எனக்குப் போதித்துச் சொன்னதாவது: “நான் சொல்லும் வார்த்தைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்; நீ என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது நீ வாழ்வாய்.
5 Steci mudrost, steci razbor, ne smeći ih s uma i ne odstupi od riječi mojih usta.
ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்; எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு.
6 Ne ostavljaj je i čuvat će te; ljubi je i obranit će te.
நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்; அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும்.
7 Početak je mudrosti: steci sebi mudrost i svim svojim imanjem steci razboritost.
ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்; உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
8 Veličaj je i uzvisit će te; donijet će ti čast kad je prigrliš.
நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும்.
9 Stavit će ti ljupki vijenac na glavu, i obdarit će te krasnom krunom.”
அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும், அது உனக்கு சிறப்புமிக்க மகுடத்தைக் கொடுக்கும்.”
10 Poslušaj, sine moj, primi moje riječi i umnožit će se godine tvojeg života.
என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்.
11 Poučih te putu mudrosti, navratih te na prave staze;
நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி, நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன்.
12 neće ti se zapletati koraci kad staneš hoditi; potrčiš li, nećeš posrnuti.
நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது; நீ ஓடும்போது இடறி விழமாட்டாய்.
13 Čvrsto se drži pouke, ne puštaj je, čuvaj je, jer ona ti je život.
அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே; அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு.
14 Ne idi stazom opakih i ne stupaj putem zlikovaca.
கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே.
15 Ostavi ga, ne hodi njime; kloni ga se i zaobiđi ga.
அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே; அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல்.
16 Jer oni ne spavaju ako ne učine zla, i san im ne dolazi ako koga ne obore.
ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்; யாரையாவது விழப்பண்ணும்வரை அவர்கள் நித்திரை செய்யமாட்டார்கள்.
17 Jer jedu kruh opačine i piju vino nasilja.
அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு, வன்முறையின் மதுவைக் குடிக்கிறார்கள்.
18 A pravednička je staza kao svjetlost svanuća, koja je sve jasnija do potpunog dana.
நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது.
19 A put je opakih kao mrkli mrak: ne znaju o što će se spotaknuti.
ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது; அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள்.
20 Sine moj, pazi na moje riječi, prigni uho svoje mojim besjedama.
என் மகனே, நான் சொல்வதைக் கவனி; நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு.
21 Ne gubi ih nikad iz očiju, pohrani ih usred srca svoga.
அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்;
22 Jer su život onima koji ih nalaze i ozdravljenje svemu tijelu njihovu.
அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்; அவை மனிதரின் முழு உடலுக்கும் நலனளிக்கும்.
23 A svrh svega, čuvaj svoje srce, jer iz njega izvire život.
எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும்.
24 Drži daleko od sebe lažna usta i udalji od sebe usne prijevarne.
வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று, சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு.
25 Nek' tvoje oči gledaju u lice i neka ti je pogled uvijek prav.
உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்; உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து.
26 Pazi na stazu kojom kročiš i neka ti svi putovi budu pouzdani.
உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்; அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும்.
27 Ne skreći ni desno ni lijevo, drži svoj korak daleko oda zla.
நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே; உன் கால்களைத் தீமையிலிருந்து விலக்கிக்கொள்.