< Jeremija 24 >
1 Jahve mi pokaza, i gle: dvije kotarice smokava stajahu pred Domom Jahvinim, pošto Nabukodonozor, kralj babilonski, odvede iz Jeruzalema i izagna u Babilon Jekoniju, sina Jojakimova, kralja judejskoga, zajedno s knezovima judejskim, kovačima i bravarima.
௧பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் மகனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும், கொல்லரையும், சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் யெகோவா எனக்குக் காண்பித்தார்.
2 U jednoj kotarici bijahu izvrsne smokve, kakve već jesu rane smokve; a u drugoj bijahu pokvarene smokve, tako rđave da se ne mogahu jesti.
௨ஒரு கூடையில் முதல் அறுவடையின் அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்ற கூடையில் சாப்பிடமுடியாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.
3 I Jahve me upita: “Jeremija, što vidiš?” A ja odgovorih: “Smokve! Dobre su vrlo dobre, a loše su vrlo loše - tako loše da nisu za jelo.”
௩யெகோவா என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ சாப்பிடமுடியாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.
4 I dođe mi riječ Jahvina:
௪அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
5 Ovako govori Jahve, Bog Izraelov: “Kao na ove dobre smokve, tako ću milostivo pogledati na sužnje judejske koje sam s ovoga mjesta prognao u zemlju kaldejsku.
௫நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்திற்குச் சிறைப்பட்டுப் போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கீகரிப்பேன்.
6 I milostivo ću svrnuti oči na njih i vratiti ih u ovu zemlju. Ponovo ću ih podići i neću ih više uništiti; opet ću ih posaditi i neću ih više iščupati.
௬அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்திற்குத் திரும்பிவரச்செய்து, அவர்களைக்கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன்.
7 I dat ću im srce da me poznaju da sam ja Jahve, da budu narod moj, a ja Bog njihov, jer će se oni svim srcem svojim opet k meni obratiti.
௭நான் யெகோவா என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.
8 Ali kao s lošim smokvama koje su tako loše da nisu za jelo - da, riječ je Jahvina - tako ću postupiti i sa Sidkijom, kraljem judejskim, s njegovim knezovima i sa svim Jeruzalemcima što preostadoše u ovoj zemlji i s onima što se u Egiptu nastaniše.
௮சாப்பிடமுடியாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்த தேசத்தில் மீதியான எருசலேமின் மக்களையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு,
9 Učinit ću da budu na užas svim kraljevstvima zemaljskim, na sramotu i porugu, na ruglo i kletvu posvuda kamo ih protjeram.
௯அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா தேசங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், பழிச் சொல்லாகவும், சாபமாகவும் வைத்து,
10 I poslat ću na njih mač, glad i kugu dok se ne istrijebe sa zemlje koju dadoh njima i ocima njihovim.”
௧0அவர்களுக்கும் அவர்கள் முற்பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் அவர்கள் இராதபடிக்கு அழியும்வரை, அவர்களுக்குள்ளே பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளை நோயையும் அனுப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.