< Ezekiel 42 >
1 A zatim me povede na sjever, u vanjsko predvorje, i dovede me do prostorija nasuprot ograđenom prostoru, nasuprot zdanju prema sjeveru.
௧பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிமுற்றத்திலே புறப்படச்செய்து, பிரத்தியேகமான இடத்திற்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.
2 Pročelje im sa sjeverne strane bijaše dugo sto lakata, a široko pedeset lakata.
௨நூறு முழ நீளத்திற்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அந்த இடத்தின் அகலம் ஐம்பது முழம்.
3 Nasuprot vratima unutrašnjeg predvorja i nasuprot pločniku vanjskoga predvorja bijahu hodnici jedan prema drugome na tri boja.
௩உள்முற்றத்தில் இருந்த இருபது முழத்திற்கு எதிராகவும் வெளிமுற்றத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள மரநடை மேடைகள் இருந்தது.
4 Pred prostorijama bijaše prolaz prema unutrašnjosti - deset lakata širok i sto lakata dugačak. Vrata im bijahu okrenuta na sjever.
௪உள்பக்கத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.
5 Gornje prostorije, jer im prostor oduzimahu hodnici, bijahu manje od donjih i srednjih.
௫உயர இருந்த அறைவீடுகள் அகலம் குறைவாக இருந்தது; நடை மரகூரைகள் கீழே இருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவே இருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாக இருந்தது.
6 Jer bijahu na tri boja, ali ne imahu stupova kao u predvorju. Zato gornje prostorije bijahu uže od donjih i srednjih.
௬அவைகள் மூன்று அடுக்குகளாக இருந்தது; முற்றங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைவிட அகலம் குறைவாக இருந்தது.
7 Vanjski zid, duž klijeti, prema vanjskom predvorju, ispred klijeti, bijaše dugačak pedeset lakata.
௭வெளியே அறைவீடுகளுக்கு எதிரே வெளிமுற்றத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
8 Jer dužina klijetima vanjskoga predvorja bijaše pedeset lakata, a onima pred Hekalom sto lakata.
௮வெளிமுற்றத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்திற்கு முன்னே நூறு முழமாக இருந்தது.
9 U tih prostorija bijaše ulaz s istoka onomu tko im prilazi iz vanjskog predvorja.
௯கிழக்கே வெளிமுற்றத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் நுழைகிற நடை அவைகளின் கீழே இருந்தது.
10 Po širini zida predvorja prema istoku, pred ograđenim prostorom i pred samim zdanjem, bijaše još prostorijÄa.
௧0கீழ்த்திசையான முற்றத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்திற்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.
11 Pred njima bijaše prolaz kao ispred klijeti smještenih prema sjeveru: jednake dužine i jednake širine; i svi im izlazi, raspored i vrata bijahu jednaki.
௧௧அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாக இருந்தது.
12 Bili su kao ulazi u klijeti što bijahu prema jugu: ulaz na početku svakog prolaza, nasuprot zidu zdanja, prema istoku onomu tko bi u njih ulazio.
௧௨தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கிழக்கு திசையில் அவைகளுக்குப் நுழையும் இடத்திலே ஒழுங்கான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசல் இருந்தது.
13 I reče mi: “Sjeverne i južne prostorije ispred ograđenog prostora jesu prostorije Svetišta: ondje svećenici koji prilaze Jahvi blaguju najveće svetinje. Oni će ovdje odlagati najveće svetinje, prinose, okajnice i naknadnice, jer je to mjesto sveto.
௧௩அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்திற்கு முன்பாக இருக்கிற வடக்குப் பக்கமான அறைவீடுகளும், தெற்குப் பக்கமான அறைவீடுகளும், பரிசுத்த அறைவீடுகளாக இருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர்கள் அங்கே மகா பரிசுத்தமானதையும் உணவுபலியையும், பாவநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த இடம் பரிசுத்தமாக இருக்கிறது.
14 A kad svećenici budu ulazili, neće izlaziti iz Svetišta u vanjsko predvorje, nego će tu ostavljati odjeću u kojoj bijahu službu služili, jer je sveta, i oblačiti drugu odjeću da bi se mogli približiti mjestu određenu za narod.”
௧௪ஆசாரியர்கள் உள்ளே நுழையும்போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளிமுற்றத்திற்கு வராததற்கு முன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து, அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிவைப்பார்கள்; அந்த ஆடைகள் பரிசுத்தமானவைகள்; வேறே ஆடைகளை அணிந்துகொண்டு, மக்களின் முற்றத்திலே போவார்கள் என்றார்.
15 Izmjerivši unutrašnjost Doma, izvede me na istočna vrata i izmjeri sve uokolo.
௧௫அவர் உள்வீட்டை அளந்து முடிந்தபின்பு, கிழக்கு திசைக்கு எதிரான வாசல்வழியாக என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச் சுற்றிலும் அளந்தார்.
16 Mjeračkom trskom izmjeri istočnu stranu: bijaše pet stotina trska, mjeračkih trska,
௧௬கிழக்குதிசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறு கோலாக இருந்தது.
17 a zatim se okrenu i izmjeri sjevernu stranu: bijaše pet stotina trska, mjeračkih trska.
௧௭வடக்கு திசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறு கோலாக அளந்தார்.
18 Tada se okrenu na južnu stranu i izmjeri: pet stotina trska, mjeračkih trska.
௧௮தெற்கு திசைப்பக்கத்தை அளவு கோலால் ஐந்நூறு கோலாக அளந்தார்.
19 Potom se okrenu na zapadnu stranu i izmjeri: pet stotina trska, mjeračkih trska.
௧௯மேற்கு திசைப் பக்கத்திற்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாக அளந்தார்.
20 On izmjeri zid na sve četiri strane uokolo: bijaše pet stotina trska dugačak i pet stotina širok. Odvajao je sveto mjesto od nesvetoga.
௨0நான்கு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசப்படுத்தும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.