< 2 Samuelova 18 >

1 Potom David pobroji narod što bijaše s njim i postavi nad njima tisućnike i stotnike.
தாவீது தன்னோடு இருந்த மக்களைக் கணக்கிட்டுப்பார்த்து, அவர்கள்மேல் 1,000 பேருக்கு தலைவர்களையும், 100 பேருக்கு தலைவர்களையும் ஏற்படுத்தி,
2 Zatim podijeli vojsku na tri skupine: jednu trećinu predade Joabu, drugu trećinu Abišaju, sinu Sarvijinu, bratu Joabovu, a treću trećinu Itaju iz Gata. Tada David reče narodu: “I ja ću s vama u rat.”
பின்பு தாவீது படைகளில் மூன்றில் ஒரு பிரிவை யோவாபின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைச் செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைக் கித்தியனான ஈத்தாயின் கையிலுமாக அனுப்பி: நானும் உங்களோடு புறப்பட்டு வருவேன் என்று ராஜா இராணுவங்களுக்குச் சொன்னான்.
3 Ali se narod usprotivi: “Ne smiješ ti ići. Jer ako mi i pobjegnemo, neće nitko na to obraćati pažnju, ili ako nas i pola izgine, neće se na to obraćati pažnja; ali ti sam vrijediš kao nas deset tisuća. Osim toga, bolje je da budeš pripravan da nam iz grada pomogneš.”
மக்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் ஓடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் இறந்துபோனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பத்தாயிரம்பேருக்கு சமமானவர்; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாக இருக்கும் என்றார்கள்.
4 A kralj im odgovori: “Učinit ću sve što vam se čini dobro.” I kralj stade kod vrata dok je vojska izlazila po stotinama i tisućama.
அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாகத் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா நகர வாசலின் ஓரத்திலே நின்றான்; மக்கள் எல்லோரும் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.
5 A Joabu, Abišaju i Itaju dade zapovijed: “Čuvajte mi mladića Abšaloma!” I sav je narod čuo da je kralj tako zapovjedio svim vojvodama za Abšaloma.
ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: வாலிபனான அப்சலோமை எனக்காக மெதுவாக நடத்துங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக் குறித்து தலைவர்களுக்கெல்லாம் கட்டளையிட்டதை மக்கள் எல்லோரும் கேட்டிருந்தார்கள்.
6 Tako vojska iziđe za boj spremna pred Izraela i bitka se zametnu u Efrajimovoj šumi.
மக்கள் வெளியே இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் புறப்பட்டபின்பு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
7 Izraelsku vojsku potukoše Davidovi ljudi; i velik poraz bijaše u onaj dan: dvadeset tisuća mrtvih.
அங்கே இஸ்ரவேல் மக்கள் தாவீதின் வீரர்களுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டார்கள்; அங்கே அந்த நாளிலே இருபதாயிரம்பேர் சாகத்தக்கதாக பேரழிவு உண்டானது.
8 Boj se proširio po svemu onom kraju i više je ljudi onoga dana progutala šuma nego mač.
யுத்தம் அந்த தேசம் எங்கும் பரவியது; அந்த நாளில் பட்டயத்தால் இறந்த மக்களைவிட, காடு பட்சித்துப்போட்ட மக்கள் அதிகம்.
9 Abšalom slučajno zapade u ruke Davidovim ljudima. Abšalom je jahao na mazgi, a mazga naiđe pod grane velika hrasta, tako te je Abšalomu glava zapela o grane i on osta viseći između neba i zemlje, dok je mazga ispod njega otišla dalje.
அப்சலோம் தாவீதின் வீரர்களை சந்திக்க நேர்ந்தது; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை தள்ளிப்போனது.
10 Vidje to neki čovjek i javi Joabu govoreći: “Upravo sam vidio Abšaloma gdje visi o jednom hrastu.”
௧0அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலி மரத்திலே தொங்குவதைப் பார்த்தேன் என்றான்.
11 A Joab odvrati čovjeku koji mu je to javio: “Kad si ga vidio, zašto ga na mjestu nisi sastavio sa zemljom? Moja bi onda bila dužnost da ti dam deset srebrnih šekela i jedan pojas!”
௧௧அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைப் பார்த்தாயே; பின்பு ஏன் அவனை அங்கேயே வெட்டி, நிலத்தில் விழும்படி செய்யவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு வாரையும் கொடுக்கக் கடமையுள்ளவனாக இருப்பேனே என்றான்.
12 Ali čovjek odgovori Joabu: “I kad bi mi na dlan izbrojio tisuću srebrnih šekela, ne bih digao ruku na kraljeva sina! Čuli smo na svoje uši kako je kralj zapovjedio tebi, Abišaju i Itaju govoreći: 'Čuvajte mi mladića Abšaloma!'
௧௨அந்த மனிதன் யோவாபை நோக்கி: என்னுடைய கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய மகன்மேல் என்னுடைய கையை நீட்டமாட்டேன்; வாலிபனான அப்சலோமை நீங்களே காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.
13 Da sam podmuklo napao na njega izlažući opasnosti svoj život - jer kralju ništa ne ostaje skriveno - onda bi se ti držao po strani.”
௧௩ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவானது இல்லை; ஆதலால், நான் அதைச்செய்தால், என்னுடைய உயிருக்கே எதிராக செய்பவனாவேன், நீரும் எனக்கு எதிராக இருப்பீர் என்றான்.
14 A Joab odvrati: “Neću ja ovdje dangubiti s tobom!” I uze tri sulice u ruke i zabode ih u srce Abšalomu, koji je bio još živ viseći o hrastu.
௧௪பின்பு யோவாப்: நான் இப்படி உன்னோடு பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன்னுடைய கையிலே மூன்று ஈட்டிகளை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடு தொங்கிக்கொண்டிருக்கும்போது, அவனுடைய மார்பிலே குத்தினான்.
15 Nato priđe deset momaka, štitonoša Joabovih, i dotukoše Abšaloma i usmrtiše.
௧௫அப்பொழுது யோவாபின் ஆயுதம் ஏந்தினவர்களான பத்து வீரர்கள் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்று போட்டார்கள்.
16 Tada Joab zapovjedi da zatrube u rog, i vojska prestade progoniti Izraela jer je Joab zaustavio vojsku.
௧௬அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி இராணுவத்தை நிறுத்தியதால், இராணுவம் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பினார்கள்.
17 Potom uzeše Abšaloma, baciše ga u duboku jamu usred šume i navaljaše na nj veliku gomilu kamenja. Izraelci pak pobjegoše svaki svome šatoru.
௧௭அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மிகப் பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.
18 Abšalom bijaše još za života postavio sebi spomenik u Kraljevoj dolini jer mišljaše: “Nemam sina koji bi sačuvao spomen mome imenu.” I nazvao je taj spomenik po svome imenu te se još i danas zove “Abšalomov spomenik”.
௧௮அப்சலோம் உயிரோடு இருக்கும்போது: என்னுடைய பெயரை நினைக்கச்செய்யும்படியாக எனக்கு மகன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன்னுடைய பெயரை சூட்டினான்; அது இந்த நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
19 Ahimaas, Sadokov sin, reče Joabu: “Idem javiti kralju veselu vijest da mu je Jahve pribavio pravdu izbavivši ga iz ruku njegovih neprijatelja.”
௧௯சாதோக்கின் மகனான அகிமாஸ்: யெகோவா ராஜாவை அவர்களுடைய எதிரிகளின் கைக்கு விலக்கி நியாயம் செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் வேகமாக ஓடட்டும் என்றான்.
20 Ali mu Joab reče: “Ne možeš danas biti glasnik vesele vijesti, nego ćeš to biti koji drugi dan; danas ne možeš javiti dobru vijest jer je poginuo kraljev sin.”
௨0யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் மகன் இறந்ததால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,
21 Zatim Joab zapovjedi Etiopljaninu: “Idi javi kralju što si vidio!” Etiopljanin se pokloni Joabu i otrča.
௨௧யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், பார்த்ததை ராஜாவுக்கு அறிவிப்பாயாக என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
22 A Sadokov sim Ahimaas opet zamoli Joaba: “Dogodilo se što mu drago, dopusti da otrčim i ja za Etiopljaninom.” A Joab upita: “Zašto bi trčao, sine moj, kad ti ta vesela vijest neće pribaviti nagrade?”
௨௨சாதோக்கின் மகனான அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பின்பாக நானும் ஓடுகிறேன் என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கும்போது, நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
23 A on ponovi: “Dogodilo se što mu drago, trčat ću!” A Joab mu odvrati: “Trči!” I Ahimaas otrča putem kroz ravnicu i preteče Etiopljanina.
௨௩அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமவெளி நிலத்தின் வழியாக ஓடி கூஷிக்கு முந்திப்போனான்.
24 David je upravo sjedio među dvojim gradskim vratima, a stražar se bio uspeo na krov iznad vrata. Podigavši oči, stražar ugleda čovjeka kako trči sam.
௨௪தாவீது உள் மற்றும் வெளி வாசலின் நடுவாக உட்கார்ந்திருந்தான்; இரவு காவலன் மதில் வாசலின் மேற்கூரையின்மேல் நடந்து, தன்னுடைய கண்களை உயர்த்தி, இதோ, ஒரு மனிதன் தனியே ஓடிவருகிறதைப் பார்த்து,
25 Stražar povika i javi kralju, a kralj mu reče: “Ako je sam, nosi dobar glas na ustima.” Čovjek je dolazio sve bliže.
௨௫கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாக வந்தால், அவனுடைய வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் அருகே ஓடிவரும்போது,
26 Uto stražar ugleda drugoga čovjeka gdje trči. I povika stražar koji je bio nad vratima: “Evo još jednoga čovjeka koji trči sam!” A kralj odvrati: “I taj nosi dobar glas.”
௨௬இரவு காவலன், வேறொருவன் ஓடிவருகிறதைப் பார்த்து: அதோ இன்னொரு மனிதன் தனியே ஓடிவருகிறான் என்று வாயிற்காவலனைக் கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
27 Stražar nastavi: “Prepoznajem trk prvoga čovjeka: trči kao Sadokov sin Ahimaas.” A kralj odvrati: “To je dobar čovjek, dolazi s dobrim glasom.”
௨௭மேலும் இரவு காவலன்; முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனிதன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
28 Ahimaas se približi kralju i pozdravi ga: “Zdravo!” Baci se licem na zemlju pred kraljem i nastavi: “Blagoslovljen Jahve, tvoj Bog, koji je napustio ljude što su digli ruku na moga gospodara i kralja!”
௨௮அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு எதிராகத் தங்கள் கைகளை எடுத்த மனிதர்களை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனான யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
29 A kralj upita: “Je li spašen mladić Abšalom?” A Ahimaas odgovori: “Vidio sam veliku vrevu kad je kraljev sluga Joab slao tvoga slugu, ali ne znam što je bilo.”
௨௯அப்பொழுது ராஜா: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய குழப்பம் இருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.
30 Kralj mu reče: “Odstupi i stani tamo!” On odstupi i stade.
௩0அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.
31 Uto stiže Etiopljanin i progovori: “Neka moj gospodar kralj primi veselu vijest. Jahve ti je danas pribavio pravdu izbavivši te iz ruku svih onih koji su ustali na tebe.”
௩௧இதோ, கூஷி வந்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, நற்செய்தி, இன்று யெகோவா உமக்கு எதிராக எழும்பின எல்லோடைய கைக்கும் உம்மை விலக்கி நியாயம் செய்தார் என்றான்.
32 A kralj upita Etiopljanina: “Je li spašen mladić Abšalom?” A Etiopljanin odgovori: “Neka neprijatelji moga gospodara i kralja i svi koji se dižu na tebe u zloj namjeri - prođu kao taj mladić!”
௩௨அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்த வாலிபனுக்கு நடந்ததுபோல, ராஜாவான என் ஆண்டவனுடைய எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு விரோதமாக எழும்புகிற யாவருக்கும் நடக்கட்டும் என்றான்.
33 Kralj zadrhta, pope se u gornju odaju nad vratima i zaplaka; jecajući govoraše ovako: “Sine Abšalome, sine moj! Sine moj Abšalome! Oh, da sam ja umro mjesto tebe! Abšalome, sine moj, sine moj!”
௩௩அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, நகர வாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகும்போது: என் மகனான அப்சலோமே, என் மகனே, என் மகனான அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக இறந்துபோனால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

< 2 Samuelova 18 >