< 2 Ljetopisa 27 >

1 Jotamu je bilo dvadeset i pet godina kad se zakraljio, a kraljevao je šesnaest godina u Jeruzalemu. Materi mu je bilo ime Jeruša, Sadokova kći.
யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.
2 Činio je što je pravo u Jahvinim očima, sasvim kao otac mu Uzija; samo što nije ušao u Jahvin Hekal. Narod je i dalje bio pokvaren.
அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போல யெகோவாவின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; மக்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
3 Sagradio je Gornja vrata Doma Jahvina; i na Ofelskom zidu mnogo je gradio.
அவன் யெகோவாவுடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டிடங்களையும் கட்டினான்.
4 Podigao je i gradove po Judejskoj gori, a u šumama dvorove i kule.
யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
5 Vojevao je s kraljem Amonovih sinova i pobijedio ih. Amonovi su mu sinovi dali one godine sto srebrnih talenata i deset tisuća kora pšenice i deset tisuća kora ječma. Toliko su mu Amonovi sinovi priložili i druge i treće godine.
அவன் அம்மோனியருடைய ராஜாவோடு போர்செய்து அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோனியர்கள் அவனுக்கு அந்த வருடத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருடத்திலும் அம்மோனியர்கள் அப்படியே அவனுக்கு செலுத்தினார்கள்.
6 Tako se Jotam utvrdio, jer je uredio svoj život pred Jahvom, svojim Bogom.
யோதாம் தன்னுடைய வழிகளைத் தன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக ஒழுங்குபடுத்தியதால் பலப்பட்டான்.
7 Ostala su Jotamova djela i svi njegovi ratovi i putovi zapisani u Knjizi o izraelskim i judejskim kraljevima.
யோதாமின் மற்ற காரியங்களும், அவனுடைய அனைத்து போர்களும், அவனுடைய செயல்களும், இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
8 Bilo mu je dvadeset i pet godina kad se zakraljio. Kraljevao je šesnaest godina u Jeruzalemu.
அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
9 Tada Jotam počinu kod otaca i sahraniše ga u Davidovu gradu. Na njegovo se mjesto zakralji sin mu Ahaz.
யோதாம் இறந்தபின்பு, அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

< 2 Ljetopisa 27 >