< ⲚⲒⲔⲞⲢⲒⲚⲐⲒⲞⲤ Ⲃ ̅ 7 >
1 ⲁ̅ ⳿ⲉⲟⲩⲟⲛⲧⲁⲛ ⲟⲩⲛ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛⲛⲁⲓⲱϣ ⲛⲁⲙⲉⲛⲣⲁϯ ⲙⲁⲣⲉⲛⲧⲟⲩⲃⲟⲛ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁ ⲑⲱⲗⲉⲃ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲛⲧⲉ ⳿ⲧⲥⲁⲣⲝ ⲛⲉⲙ ⲟⲩⲡⲛ̅ⲁ̅ ⲉⲛϫⲱⲕ ⳿ⲙⲡⲓⲧⲟⲩⲃⲟ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϯϩⲟϯ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
௧இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, சரீரத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுத்தமானவைகளும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடு நிறைவாக்குவோம்.
2 ⲃ̅ ϣⲟⲡⲧⲉⲛ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲙⲡⲉⲛϭⲓ ⳿ϩⲗⲓ ⳿ⲛϫⲟⲛⲥ ⳿ⲙⲡⲉⲛⲧⲁⲕⲉ ⳿ϩⲗⲓ ⳿ⲙⲡⲉⲛϥⲉϫ ⳿ϩⲗⲓ.
௨எங்களுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுங்கள்; நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை, யாரையும் கெடுக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை.
3 ⲅ̅ ⲛⲁⲓϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲁⲛ ⲕⲁⲧⲁ ⲟⲩϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲙ⳿ⲡϩⲁⲡ ⲁⲓⲉⲣϣⲟⲣⲡ ⲅⲁⲣ ⳿ⲛϫⲟⲥ ϫⲉ ⲧⲉⲧⲉⲛⲭⲏ ϧⲉⲛ ⲡⲉⲛϩⲏⲧ ⳿ⲉⲉⲣ⳿ϣⲫⲏⲣ ⳿ⲙⲙⲟⲩ ⲛⲉⲙ ⳿ⲉⲉⲣ⳿ϣⲫⲏ ⲣ ⳿ⲛⲱⲛϧ.
௩உங்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களோடு மரிக்கவும் பிழைக்கவும் எங்களுடைய இருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
4 ⲇ̅ ⲟⲩⲟⲛ⳿ⲛⲧⲏⲓ ⳿ⲛⲟⲩⲛⲓϣϯ ⳿ⲙⲡⲁⲣⲣⲏⲥⲓⲁ ϩⲁⲣⲱⲧⲉⲛ ⲟⲩⲟⲛ⳿ⲛⲧⲏⲓ ⳿ⲛⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛϣⲟⲩϣⲟⲩ ⳿ⲉϫⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲁⲓⲙⲟϩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲧⲉⲧⲉⲛⲛⲟⲙϯ ⲁⲓⲉⲣϩⲟⲩ⳿ⲟ ϧⲉⲛ ⲡⲓⲣⲁϣⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲉⲛϩⲟϫϩⲉϫ ⲧⲏⲣϥ.
௪அதிக தைரியத்தோடு உங்களோடு பேசுகிறேன்; உங்களைக்குறித்து அதிகமாக மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான எல்லா உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாக இருக்கிறேன்.
5 ⲉ̅ ⲕⲉ ⲅⲁⲣ ⲉⲧⲁⲛ⳿ⲓ ⳿ⲉ⳿ⲑⲙⲁⲕⲉⲇⲟⲛⲓ⳿ⲁ ⳿ⲙⲡⲉ ⲧⲉⲛⲥⲁⲣⲝ ϭⲓ ⳿ϩⲗⲓ ⳿ⲛ⳿ⲙⲧⲟⲛ ⲁⲗⲗⲁ ⲉⲛϩⲉϫϩⲱϫ ϧⲉⲛ ϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ⲥⲁⲃⲟⲗ ϩⲁⲛϣⲱⲛⲧ ⲥⲁϧⲟⲩⲛ ϩⲁⲛϩⲟϯ.
௫எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிற்கு வந்தபோது, எங்களுடைய சரீரத்திற்கு ஓய்வு இல்லாமல், எல்லாப் பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; வெளியே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.
6 ⲋ̅ ⲁⲗⲗⲁ ⲫⲏ⳿ⲉϣⲁϥϯⲛⲟⲙϯ ⳿ⲛⲛⲏⲉⲧⲑⲉⲃⲓⲏⲟⲩⲧ ⲫϯ ⲁϥϯⲛⲟⲙϯ ⲛⲁⲛ ϧⲉⲛ ⳿ⲧⲡⲁⲣⲟⲩⲥⲓⲁ ⳿ⲛⲧⲓⲧⲟⲥ.
௬ஆனாலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன், தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல் செய்தார்.
7 ⲍ̅ ⲟⲩ ⲙⲟⲛⲟⲛ ⲇⲉ ϧⲉⲛ ⲧⲉϥⲡⲁⲣⲟⲩⲥⲓⲁ ⲁⲗⲗⲁ ⲛⲉⲙ ϧⲉⲛ ϯⲕⲉⲛⲟⲙϯ ⲑⲏ ⲉⲧⲁϥⲧⲁϫⲣⲟ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧⲥ ⳿ⲉϫⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲉϥⲧⲁⲙⲟ ⳿ⲙⲙⲟⲛ ⳿ⲉⲡⲉⲧⲉⲛⲙⲉⲓ ⳿ⲛϩⲏⲧ ⲛⲉⲙ ⲡⲉⲧⲉⲛⲣⲓⲙⲓ ⲛⲉⲙ ⲡⲉⲧⲉⲛⲭⲟϩ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱⲛ ϩⲱⲥⲧⲉ ⳿ⲛⲧⲁⲣⲁϣⲓ ⳿ⲛϩⲟⲩ⳿ⲟ.
௭அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்களுடைய வாஞ்சையையும், உங்களுடைய வருத்தத்தையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் பார்த்து, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாகச் சந்தோஷப்பட்டேன்.
8 ⲏ̅ ϫⲉ ⲓⲥϫⲉ ⲁⲓϯ⳿ⲙⲕⲁϩ ⳿ⲛϩⲏⲧ ⲛⲱⲧⲉⲛ ϧⲉⲛ ϯ ⳿ⲉⲡⲓⲥⲧⲟⲗⲏ ⳿ⲛϯⲟⲩⲱⲙ ⳿ⲛ⳿ϩⲑⲏⲓ ⲁⲛ ⲓⲥϫⲉ ⲛⲁⲓⲉⲣ⳿ⲡⲕⲉⲟⲩⲱⲙ ⳿ⲛ⳿ϩⲑⲏⲓ ⲡⲉ ϯⲛⲁⲩ ⲅⲁⲣ ϫⲉ ϯ ⲉⲡⲓⲥⲧⲟⲗⲏ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ϫⲉ ⲓⲥϫⲉ ⲁⲥϯ⳿ⲙⲕⲁϩ ⳿ⲛϩⲏ ⲧ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲡⲣⲟⲥ ⲟⲩⲟⲩⲛⲟⲩ.
௮ஆதலால் நான் கடிதத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்தக் கடிதம் கொஞ்சகாலம் உங்களைத் துக்கப்படுத்தினது என்று பார்த்து நான் வருத்தப்பட்டிருந்தும், இப்பொழுது வருத்தப்படுகிறது இல்லை.
9 ⲑ̅ ϯⲛⲟⲩ ⲇⲉ ϯⲣⲁϣⲓ ⲟⲩⲭ ⲟⲧⲓ ϫⲉ ⳿ⲁⲧⲉⲧⲉⲛⲉⲣ⳿ⲙⲕⲁϩ⳿ⲛϩⲏⲧ ⲁⲗⲗⲁ ϫⲉ ⳿ⲁⲧⲉⲧⲉⲛⲉⲣ⳿ⲙⲕⲁϩ⳿ⲛϩⲏⲧ ⲉⲩⲙⲉⲧⲁⲛⲟⲓⲁ ⳿ⲁⲧⲉⲧⲉⲛⲉⲣ⳿ⲙⲕⲁϩ⳿ⲛϩⲏⲧ ⲅⲁⲣ ⲕⲁⲧⲁ ⲫϯ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲧⲉⲛ⳿ϣⲧⲉⲙ ϯⲟⲥⲓ ⳿ⲛ⳿ϩⲗⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲟⲛ.
௯இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக இல்லை, மனம்திரும்புகிறதற்கேற்றத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடி, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
10 ⲓ̅ ⲡⲓ⳿ⲙⲕⲁϩ⳿ⲛϩⲏⲧ ⲅⲁⲣ ⲕⲁⲧⲁ ⲫϯ ⲁϥⲉⲣϩⲱⲃ ⲉⲩⲙⲉⲧⲁⲛⲟⲓⲁ ⲉⲩⲛⲟϩⲉⲙ ⳿ⲛⲁⲑⲟⲩⲱⲙ ⳿ⲛ⳿ϩⲑⲏϥ ⲡⲓ⳿ⲙⲕⲁϩ⳿ⲛϩⲏⲧ ⲇⲉ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ ϣⲁϥⲉⲣϩⲱⲃ ⲉⲩⲙⲟⲩ.
௧0தேவனுக்கேற்ற துக்கம் பின்பு வருத்தப்படுகிறதற்கு ஏதுவாக இல்லாமல் இரட்சிப்பிற்குரிய மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; உலகத்தின் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
11 ⲓ̅ⲁ̅ ϩⲏⲡⲡⲉ ⲅⲁⲣ ⲓⲥ ⲡⲓ⳿ⲙⲕⲁϩ⳿ⲛϩⲏⲧ ⳿ⲉⲧⲁⲣⲉⲧⲉⲛⲁⲓϥ ⲕⲁⲧⲁ ⲫϯ ⲁϥⲉⲣϩⲱⲃ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲛⲟⲩⲙⲏϣ ⳿ⲛ⳿ⲥⲡⲟⲩⲇⲏ ⲁⲗⲗⲁ ⲉⲩⲁⲡⲟⲗⲟⲅⲓ⳿ⲁ ⲁⲗⲗⲁ ⲉⲩⲁⲅⲁⲛⲁⲕⲧⲏⲥⲓⲥ ⲁⲗⲗⲁ ⲉⲩϩⲟϯ ⲁⲗⲗⲁ ⲉⲩⲙⲉⲓ ⳿ⲛϩⲏⲧ ⲁⲗⲗⲁ ⲉⲩⲭⲟϩ ⲁⲗⲗⲁ ⲉⲩϭⲓ⳿ⲙ⳿ⲡϣⲓϣ ⲟⲩⲟϩ ϧⲉⲛ ϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲁⲧⲉⲧⲉⲛⲧⲁϩⲉ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉⲣⲁⲧⲉⲛⲑⲏⲛⲟⲩ ⳿ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲩⲁⲃ ⳿ⲙⲡⲓϩⲱⲃ.
௧௧பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடம் எவ்வளவு வாஞ்சையையும், குற்றம் தீர எவ்வளவு நியாயம் சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கியது. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைக் குற்றமற்றவர்கள் என்று விளங்கப்பண்ணினீர்கள்.
12 ⲓ̅ⲃ̅ ϩⲁⲣⲁ ⲓⲥϫⲉ ⲁⲓ⳿ⲥϧⲁⲓ ⲛⲱⲧⲉⲛ ⲉⲑⲃⲉ ⲫⲏ ⲁⲛ ⳿ⲉⲧⲁϥϭⲓ⳿ⲛϫⲟⲛⲥ ⲟⲩⲇⲉ ⲉⲑⲃⲉ ⲫⲏ ⲁⲛ ⳿ⲉⲧⲁⲩϭⲓⲧϥ ⳿ⲛϫⲟⲛⲥ ⲁⲗⲗⲁ ϫⲉ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲥⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲧⲉⲧⲉⲛ⳿ⲥⲡⲟⲩⲇⲏ ⲑⲁⲓ ⳿ⲉⲧⲉⲧⲉⲛ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱⲛ ϩⲁⲣⲱⲧⲉⲛ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲠ⳪.
௧௨எனவே, நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயம் செய்தவனாலும் இல்லை, அநியாயம் செய்யப்பட்டவனாலும் இல்லை, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற வாஞ்சையை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே அப்படி எழுதினேன்.
13 ⲓ̅ⲅ̅ ⲉⲑⲃⲉⲫⲁⲓ ⲁⲩⲑⲉⲧⲡⲉⲛϩⲏⲧ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⲇⲉ ⳿ⲉϫⲉⲛ ⲧⲉⲧⲉⲛⲛⲟⲙϯ ⳿ⲛϩⲟⲩ⳿ⲟ ⲙⲁⲗⲗⲟⲛ ⲁⲛⲣⲁϣⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓⲣⲁϣⲓ ⳿ⲛⲧⲉ ⲧⲓⲧⲟⲥ ϫⲉ ⳿ⲁ ⲡⲉϥⲡⲛ̅ⲁ̅ ⳿ⲙⲧⲟⲛ ⳿ⲉϫⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲧⲏⲣⲟⲩ.
௧௩இதனால் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதல் அடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.
14 ⲓ̅ⲇ̅ ϫⲉ ⲡⲁϣⲟⲩϣⲟⲩ ⳿ⲉⲧⲁⲓⲁⲓϥ ϧⲁⲧⲟⲧϥ ⳿ⲉϫⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲙⲡⲓϣⲓⲡⲓ ⳿ⲙⲙⲟϥ ⲁⲗⲗⲁ ⲕⲁⲧⲁ ⳿ⲫⲣⲏϯ ⳿ⲉⲧⲁⲓⲥⲁϫⲓ ⲛⲉⲙⲱⲧⲉⲛ ⳿ⲛⲥⲏⲟⲩ ⲛⲓⲃⲉⲛ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲑⲙⲏⲓ ⲡⲁⲓⲣⲏϯ ⲟⲛ ⲡⲉⲛϣⲟⲩϣⲟⲩ ⳿ⲉⲧⲁⲛⲁⲓϥ ⳿ⲉϫⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ϧⲁⲧⲉⲛ ⲧⲓⲧⲟⲥ ⲁϥϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲑⲙⲏⲓ.
௧௪இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாக நான் அவனுடன் சொன்ன எதைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சத்தியமாகச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாகச் சொன்னதும் சத்தியமாக விளங்கினதே.
15 ⲓ̅ⲉ̅ ⲟⲩⲟϩ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧϩⲟⲩ⳿ⲟ ⲛⲉϥⲙⲉⲧϣⲁⲛ⳿ⲑⲙⲁϧⲧ ⲥⲉϣⲟⲡ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⲉϥ⳿ⲓⲣⲓ ⳿ⲙ⳿ⲫⲙⲉⲩ⳿ⲓ ⳿ⲛⲧⲉⲧⲉⲛⲙⲉⲧⲣⲉϥⲥⲱⲧⲉⲙ ⲧⲏⲣⲟⲩ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲉⲧⲁⲣⲉⲧⲉⲛϣⲟⲡϥ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ϧⲉⲛ ⲟⲩϩⲟϯ ⲛⲉⲙ ⲟⲩ⳿ⲥⲑⲉⲣⲧⲉⲣ.
௧௫மேலும் நீங்கள் எல்லோரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கும்போது, அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாக இருக்கிறது.
16 ⲓ̅ⲋ̅ ϯⲣⲁϣⲓ ϫⲉ ϧⲉⲛ ϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ϯⲧⲁϫⲣⲏⲟⲩⲧ ⳿ⲛϩⲏⲧ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ.
௧௬எனவே, எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடமான நம்பிக்கை இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறேன்.