< ⳰ⳘⲠⲈⲦⲢⲞⲤ Ⲁ ̅ 5 >
1 ⲁ̅ ⲛⲓ⳿ⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ ⲉⲧϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ϯϯ ϩⲟ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉⲧⲉⲛ⳿ϣⲫⲏⲣ ⳿ⲙ⳿ⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ ⲟⲩⲟϩ ⳿ⲙⲙⲉⲑⲣⲉ ⳿ⲛⲧⲉ ⲛⲓ⳿ⲙⲕⲁⲩϩ ⳿ⲛⲧⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲟⲩⲟϩ ⳿ⲛ⳿ϣⲫⲏⲣ ⳿ⲙⲡⲓⲱⲟⲩ ⲉⲑⲛⲁϭⲱⲣⲡ ⳿ⲉⲃⲟⲗ.
௧உங்களில் உள்ள மூப்பர்களுக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்குள்ளவனாக இருக்கிற நான் புத்திசொல்லுகிறது என்னவென்றால்:
2 ⲃ̅ ⳿ⲁⲙⲟⲛⲓ ⳿ⲙⲡⲓⲟϩⲓ ⲉⲧϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⲉⲣⲉⲧⲉⲛϭⲓ ⳿ⲙⲡⲟⲩϣⲓⲛⲓ ϧⲉⲛ ⲟⲩϭⲓ⳿ⲛϫⲟⲛⲥ ⲁⲛ ⲁⲗⲗⲁ ϧⲉⲛ ⲟⲩⲟⲩⲱϣ ⳿ⲛϩⲏⲧ ⲕⲁⲧⲁ ⲫϯ ⲟⲩⲇⲉ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧⲁϥϫⲓⲣ ⲁⲛ ⲁⲗⲗⲁ ϧⲉⲛ ⲟⲩⲣⲱⲟⲩⲧϥ ⳿ⲛϩⲏⲧ.
௨உங்களிடம் உள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாக இல்லை, மனப்பூர்வமாகவும், அவலட்சணமான ஆதாயத்திற்காகவும் இல்லை, உற்சாக மனதோடும்,
3 ⲅ̅ ⲟⲩⲇⲉ ⲁⲛ ϫⲉ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲓ ⳿ⲛ⳪ ⳿ⲉⲛⲓ⳿ⲕⲗⲏ ⲣⲟⲥ ⲁⲗⲗⲁ ⲁⲣⲓⲧⲩⲡⲟⲥ ⳿ⲙⲡⲓⲟϩⲓ.
௩சுதந்திரத்தை பெருமையோடு ஆளுகிறவர்களாக இல்லை, மந்தைக்கு முன்மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
4 ⲇ̅ ⲟⲩⲟϩ ⲉϣⲱⲡ ⲁϥϣⲁⲛⲟⲩⲟⲛϩϥ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲡⲓϫⲱϫ ⳿ⲙⲙⲁⲛ⳿ⲉⲥⲱⲟⲩ ⲧⲉⲧⲉⲛⲛⲁϭⲓ ⳿ⲙⲡⲓ⳿ⲭⲗⲟⲙ ⳿ⲛⲁⲑⲗⲱⲙ ⳿ⲛⲧⲉ ⳿ⲡⲱⲟⲩ.
௪அப்படி செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமை குறையாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்.
5 ⲉ̅ ⲡⲁⲓⲣⲏϯ ⲛⲓϧⲉⲗϣ⳿ⲓⲣⲓ ⲙⲁϭⲛⲉϫⲱⲧⲉⲛ ⳿ⲛⲛⲓϧⲉⲗⲗⲟⲓ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ϫⲉⲗ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲙⲡⲓⲑⲉⲃⲓⲟ ⳿ⲛϩⲏⲧ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲛⲉⲧⲉⲛ⳿ⲉⲣⲏ ⲟⲩ ϫⲉ ⲫϯ ⳿ϥϯ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉ⳿ϩⲣⲉⲛ ⲛⲓ ϭⲁⲥⲓϩⲏⲧ ⳿ϥϯ ⳿ⲛⲟⲩ⳿ϩⲙⲟⲧ ⳿ⲛⲛⲏⲉⲧⲑⲉⲃⲓⲏⲟⲩⲧ.
௫அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; “பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”
6 ⲋ̅ ⲙⲁⲑⲉⲃⲓ⳿ⲉ ⲑⲏⲛⲟⲩ ϧⲁ ϯϫⲓϫ ⲉⲧ⳿ⲁⲙⲁϩⲓ ⳿ⲛⲧⲉ ⲫϯ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥϭⲉⲥ ⲑⲏⲛⲟⲩ ϧⲉⲛ ⳿ⲡⲥⲏⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲡⲓϫⲉⲙ⳿ⲡϣⲓⲛⲓ.
௬ஆகவே, குறித்தக் காலத்திலே தேவன் உங்களை உயர்த்துவதற்காக, அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கி இருங்கள்.
7 ⲍ̅ ⲡⲉⲧⲉⲛⲣⲱⲟⲩϣ ⲧⲏⲣϥ ⲟⲩⲁϩϥ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲟⲩⲏⲓ ⳿ⲥⲉⲣⲙⲉⲗⲓⲛ ⲛⲁϥ ϧⲁⲣⲱⲧⲉⲛ.
௭அவர் உங்களை விசாரிக்கிறவராக இருப்பதினால், உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
8 ⲏ̅ ϣⲱⲡⲓ ⲉⲣⲉⲧⲉⲛⲣⲏⲥ ⲟⲩⲟϩ ⲁⲣⲓⲛⲩⲙⲫⲓⲛ ϫⲉ ⲡⲉⲧⲉⲛϫⲁϫⲓ ⲡⲓⲇⲓ⳿ⲁⲃⲟⲗⲟⲥ ⳿ϥⲙⲟϣⲓ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩⲙⲟⲩ⳿ⲓ ⲉϥϩⲉⲙϩⲉⲙ ⲉϥⲕⲱϯ ⳿ⲛⲥⲁ ⳿ⲉⲙⲕ ⲟⲩⲁⲓ.
௮தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருங்கள், விழித்திருங்கள்; ஏனென்றால், உங்களுடைய எதிராளியாகிய பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம்போல யாரை விழுங்கலாமோ என்று தேடிச் சுற்றித்திரிகிறான்.
9 ⲑ̅ ⲫⲏ ⲉⲣⲉⲧⲉⲛⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉϫⲱϥ ⲉⲣⲉⲧⲉⲛⲧⲁϫⲣⲏⲟⲩⲧ ϧⲉⲛ ⲡⲓⲛⲁϩϯ ⲉⲣⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲛⲛⲁⲓϧⲓⲥⲓ ⲛⲁⲓ ⳿ⲡϫⲱⲕ ⳿ⲛⲛⲁⲓ ⳿ⲛⲛⲉⲧⲉⲛ⳿ⲥⲛⲏⲟⲩ ⲉⲧϧⲉⲛ ⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ.
௯விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்தில் உள்ள உங்களுடைய சகோதரர்களும் அப்படிப்பட்டப் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே.
10 ⲓ̅ ⲫϯ ⲇⲉ ⳿ⲛⲧⲉ ⳿ϩⲙⲟⲧ ⲛⲓⲃⲉⲛ ⲫⲏⲉⲧⲁϥⲑⲁϩⲉⲙ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲡⲉϥⲱⲟⲩ ⳿ⲛⲉⲛⲉϩ ϧⲉⲛ Ⲡⲭ̅ⲥ̅ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉⲁⲣⲉⲧⲉⲛϣⲉⲡ ⳿ⲙⲕⲁϩ ⳿ⲛⲟⲩⲕⲟⲩϫⲓ ⳿ⲛⲑⲟϥ ⲉϥ⳿ⲉⲥⲉⲃⲧⲉ ⲑⲏⲛⲟⲩ ⲟⲩⲟϩ ⲉϥ⳿ⲉⲥⲉⲙⲛⲉ ⲑⲏⲛⲟⲩ ⲉϥ⳿ⲉϯϫⲟⲙ ⲛⲱⲧⲉⲛ ⲉϥ⳿ⲉϩⲓⲥⲉⲛϯ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ. (aiōnios )
௧0கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios )
11 ⲓ̅ⲁ̅ ⲫⲱϥ ⲡⲉ ⲡⲓⲁⲙⲁϩⲓ ⲛⲉⲙ ⲡⲓⲱⲟⲩ ϣⲁ ⲉⲛⲉϩ ⲁⲙⲏⲛ. (aiōn )
௧௧அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
12 ⲓ̅ⲃ̅ ⲁⲓ⳿ⲥϧⲁⲓ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧϥ ⳿ⲛⲥⲓⲗⲟⲩⲁⲛⲟⲥ ⲡⲉⲛⲥⲟⲛ ⳿ⲙⲡⲓⲥⲧⲟⲥ ϩⲱⲥ ⲉⲓⲙⲉⲩⲓ ϧⲉⲛ ϩⲁⲛⲕⲟⲩϫⲓ ⲉⲓϯⲛⲟⲙϯ ⲉⲓⲉⲣⲙⲉⲑⲣⲉ ϫⲉ ⲫⲁⲓ ⲡⲉ ⲡⲓ⳿ϩⲙⲟⲧ ⳿ⲛⲧⲉ ⲫϯ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲑⲙⲏ ⲓ ⲫⲁⲓ ⲉⲧⲉⲧⲉⲛⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲛϧⲏⲧϥ.
௧௨உங்களுக்குப் புத்திசொல்லுவதற்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை, தேவனுடைய உண்மையான கிருபைதான் என்று சாட்சியிடுவதற்கும், நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதி, உண்மையுள்ள சகோதரனாக எனக்குத் தோன்றுகிற சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
13 ⲓ̅ⲅ̅ ⳿ⲥϣⲓⲛⲓ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲛϫⲉ ϯ⳿ϣⲫⲉⲣⲓ ⳿ⲛⲥⲟⲧⲡⲓ ⲉⲧϧⲉⲛ ⲃⲁⲃⲩⲗⲱⲛ ⲛⲉⲙ ⲙⲁⲣⲕⲟⲥ ⲡⲁϣⲏⲣⲓ.
௧௩உங்களோடு தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் மகனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
14 ⲓ̅ⲇ̅ ⲁⲣⲓⲁⲥⲡⲁⲍⲉⲥⲑⲉ ⳿ⲛⲛⲉⲧⲉⲛⲉⲣⲏⲟⲩ ϧⲉⲛ ⲟⲩⲫⲓ ⳿ⲛⲧⲉ ϯⲁⲅⲁⲡⲏ ⳿ⲧϩⲓⲣⲏⲛⲏ ⲛⲱⲧⲉⲛ ⲧⲏⲣⲟⲩ ⲛⲏⲉⲧϧⲉⲛ Ⲡⲭ̅ⲥ̅ ⲡⲉⲧⲣⲟⲥ ⲁ̅
௧௪ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடு வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேவிற்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.