< 詩篇 92 >

1 安息日的詩歌。 稱謝耶和華! 歌頌你至高者的名!
ஓய்வுநாளின் பாடல். யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே, உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும்,
2 用十弦的樂器和瑟, 用琴彈幽雅的聲音, 早晨傳揚你的慈愛; 每夜傳揚你的信實。 這本為美事。
பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
3
காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும்.
4 因你-耶和華藉着你的作為叫我高興, 我要因你手的工作歡呼。
யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன்.
5 耶和華啊,你的工作何其大! 你的心思極其深!
யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
6 畜類人不曉得; 愚頑人也不明白。
மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; மூடன் அதை உணரமாட்டான்.
7 惡人茂盛如草, 一切作孽之人發旺的時候, 正是他們要滅亡, 直到永遠。
துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
8 惟你-耶和華是至高, 直到永遠。
யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர்.
9 耶和華啊,你的仇敵都要滅亡; 一切作孽的也要離散。
யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள்.
10 你卻高舉了我的角,如野牛的角; 我是被新油膏了的。
௧0என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன்.
11 我眼睛看見仇敵遭報; 我耳朵聽見那些起來攻擊我的惡人受罰。
௧௧என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு நேரிடுவதை என்னுடைய காது கேட்கும்.
12 義人要發旺如棕樹, 生長如黎巴嫩的香柏樹。
௧௨நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
13 他們栽於耶和華的殿中, 發旺在我們上帝的院裏。
௧௩யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள் எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள்.
14 他們年老的時候仍要結果子, 要滿了汁漿而常發青,
௧௪யெகோவா உத்தமரென்றும், என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி,
15 好顯明耶和華是正直的。 他是我的磐石,在他毫無不義。
௧௫அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.

< 詩篇 92 >