< 詩篇 72 >

1 所羅門的詩。 上帝啊,求你將判斷的權柄賜給王, 將公義賜給王的兒子。
தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
2 他要按公義審判你的民, 按公平審判你的困苦人。
அவர் உம்முடைய மக்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
3 大山小山都要因公義使民得享平安。
மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும்.
4 他必為民中的困苦人伸冤, 拯救窮乏之輩, 壓碎那欺壓人的。
மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
5 太陽還存,月亮還在, 人要敬畏你,直到萬代!
சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
6 他必降臨,像雨降在已割的草地上, 如甘霖滋潤田地。
புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
7 在他的日子,義人要發旺, 大有平安,好像月亮長存。
அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
8 他要執掌權柄,從這海直到那海, 從大河直到地極。
ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
9 住在曠野的,必在他面前下拜; 他的仇敵必要舔土。
வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.
10 他施和海島的王要進貢; 示巴和西巴的王要獻禮物。
௧0தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
11 諸王都要叩拜他; 萬國都要事奉他。
௧௧எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள்.
12 因為,窮乏人呼求的時候,他要搭救; 沒有人幫助的困苦人,他也要搭救。
௧௨கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
13 他要憐恤貧寒和窮乏的人, 拯救窮苦人的性命。
௧௩எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார்.
14 他要救贖他們脫離欺壓和強暴; 他們的血在他眼中看為寶貴。
௧௪அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும்.
15 他們要存活。 示巴的金子要奉給他; 人要常常為他禱告,終日稱頌他。
௧௫அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
16 在地的山頂上,五穀必然茂盛; 所結的穀實要響動,如黎巴嫩的樹林; 城裏的人要發旺,如地上的草。
௧௬பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள்.
17 他的名要存到永遠, 要留傳如日之久。 人要因他蒙福; 萬國要稱他有福。
௧௭அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள்.
18 獨行奇事的耶和華-以色列的上帝 是應當稱頌的!
௧௮இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
19 他榮耀的名也當稱頌,直到永遠。 願他的榮耀充滿全地! 阿們!阿們!
௧௯அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
20 耶西的兒子-大衛的祈禱完畢。
௨0ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.

< 詩篇 72 >