< 詩篇 69 >
1 大衛的詩,交與伶長。調用百合花。 上帝啊,求你救我! 因為眾水要淹沒我。
௧சோஷனீம் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். தேவனே, என்னைக் காப்பாற்றும்; வெள்ளங்கள் என்னுடைய ஆத்துமாவரை பெருகிவருகிறது.
2 我陷在深淤泥中,沒有立腳之地; 我到了深水中,大水漫過我身。
௨ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, ஆழமான தண்ணீரில் இருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
3 我因呼求困乏,喉嚨發乾; 我因等候上帝,眼睛失明。
௩நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என்னுடைய தொண்டை வறண்டுபோனது; என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது, என்னுடைய கண்கள் பூத்துப்போனது.
4 無故恨我的,比我頭髮還多; 無理與我為仇、要把我剪除的,甚為強盛。 我沒有搶奪的,要叫我償還。
௪காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்; வீணாக எனக்கு எதிரிகளாகி என்னை அழிக்கவேண்டும் என்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதானது.
5 上帝啊,我的愚昧,你原知道; 我的罪愆不能隱瞞。
௫தேவனே, நீர் என்னுடைய புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என்னுடைய குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
6 萬軍的主-耶和華啊, 求你叫那等候你的,不要因我蒙羞! 以色列的上帝啊, 求你叫那尋求你的,不要因我受辱!
௬சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னால் வெட்கப்பட்டுப் போகாமலிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் வெட்கமடையாதிருப்பார்களாக.
௭உமக்காக நிந்தையைச் சகித்தேன்; அவமானம் என்னுடைய முகத்தை மூடினது.
8 我的弟兄看我為外路人; 我的同胞看我為外邦人。
௮என்னுடைய சகோதரர்களுக்கு வேற்று மனிதனும், என்னுடைய தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
9 因我為你的殿心裏焦急,如同火燒, 並且辱罵你人的辱罵都落在我身上。
௯உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
10 我哭泣,以禁食刻苦我心; 這倒算為我的羞辱。
௧0என்னுடைய ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாக முடிந்தது.
௧௧சணலாடையை என்னுடைய உடையாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன்.
௧௨வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்; மதுபானம் குடிக்கிறவர்களின் பாடலானேன்.
13 但我在悅納的時候向你-耶和華祈禱。 上帝啊,求你按你豐盛的慈愛, 憑你拯救的誠實應允我!
௧௩ஆனாலும் யெகோவாவே, உதவிக்காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
14 求你搭救我出離淤泥, 不叫我陷在其中; 求你使我脫離那些恨我的人, 使我出離深水。
௧௪நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களிடத்திலிருந்தும் ஆழமான தண்ணீர்களில் இருந்தும் நான் நீங்கும்படி செய்யும்.
15 求你不容大水漫過我, 不容深淵吞滅我, 不容坑坎在我以上合口。
௧௫வெள்ளங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன்னுடைய வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.
16 耶和華啊,求你應允我! 因為你的慈愛本為美好; 求你按你豐盛的慈悲回轉眷顧我!
௧௬யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கண்ணோக்கியருளும்.
17 不要掩面不顧你的僕人; 我是在急難之中,求你速速地應允我!
௧௭உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாகச் செவிகொடுத்தருளும்.
18 求你親近我,救贖我! 求你因我的仇敵把我贖回!
௧௮நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைசெய்யும்; என்னுடைய எதிரிகளுக்காக என்னை மீட்டுவிடும்.
19 你知道我受的辱罵、欺凌、羞辱; 我的敵人都在你面前。
௧௯தேவனே நீர் என்னுடைய நிந்தையையும் என்னுடைய வெட்கத்தையும் என்னுடைய அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என்னுடைய எதிரிகள் எல்லோரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
20 辱罵傷破了我的心, 我又滿了憂愁。 我指望有人體恤,卻沒有一個; 我指望有人安慰,卻找不着一個。
௨0நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனும் இல்லை.
21 他們拿苦膽給我當食物; 我渴了,他們拿醋給我喝。
௨௧என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள், என்னுடைய தாகத்திற்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
22 願他們的筵席在他們面前變為網羅, 在他們平安的時候變為機檻。
௨௨அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாக இருக்கட்டும்.
23 願他們的眼睛昏矇,不得看見; 願你使他們的腰常常戰抖。
௨௩அவர்களுடைய கண்கள் காணாதபடி இருளாகட்டும்; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடச்செய்யும்.
24 求你將你的惱恨倒在他們身上, 叫你的烈怒追上他們。
௨௪உம்முடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.
25 願他們的住處變為荒場; 願他們的帳棚無人居住。
௨௫அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
26 因為,你所擊打的,他們就逼迫; 你所擊傷的,他們戲說他的愁苦。
௨௬தேவனே நீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.
27 願你在他們的罪上加罪, 不容他們在你面前稱義。
௨௭அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.
28 願他們從生命冊上被塗抹, 不得記錄在義人之中。
௨௮ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பெயரோடே அவர்கள் பெயர் எழுதப்படாதிருப்பதாக.
29 但我是困苦憂傷的; 上帝啊,願你的救恩將我安置在高處。
௨௯நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
௩0தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, அவரை நன்றி சொல்லி மகிமைப்படுத்துவேன்.
31 這便叫耶和華喜悅,勝似獻牛, 或是獻有角有蹄的公牛。
௩௧கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, இதுவே யெகோவாவுக்குப் பிரியமாக இருக்கும்.
32 謙卑的人看見了就喜樂; 尋求上帝的人,願你們的心甦醒。
௩௨சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இருதயம் வாழும்.
௩௩யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணிக்கமாட்டார்.
௩௪வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.
35 因為上帝要拯救錫安,建造猶大的城邑; 他的民要在那裏居住,得以為業。
௩௫தேவன் சீயோனைக் காப்பாற்றி, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
36 他僕人的後裔要承受為業; 愛他名的人也要住在其中。
௩௬அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்; அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அதில் குடியிருப்பார்கள்.