< 詩篇 50 >
1 亞薩的詩。 大能者上帝-耶和華已經發言招呼天下, 從日出之地到日落之處。
௧ஆசாபின் பாடல். வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
௨அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
3 我們的上帝要來,決不閉口。 有烈火在他面前吞滅; 有暴風在他四圍大颳。
௩நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; அவருக்கு முன்பு அக்கினி அழியும்; அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும்.
௪அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
5 說:招聚我的聖民到我這裏來, 就是那些用祭物與我立約的人。
௫பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
6 諸天必表明他的公義, 因為上帝是施行審判的。 (細拉)
௬வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா)
7 我的民哪,你們當聽我的話! 以色列啊,我要勸戒你; 我是上帝,是你的上帝!
௭என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.
8 我並不因你的祭物責備你; 你的燔祭常在我面前。
௮உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
௯உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
10 因為,樹林中的百獸是我的, 千山上的牲畜也是我的。
௧0எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
11 山中的飛鳥,我都知道; 野地的走獸也都屬我。
௧௧மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
12 我若是飢餓,我不用告訴你, 因為世界和其中所充滿的都是我的。
௧௨நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
௧௩நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
14 你們要以感謝為祭獻與上帝, 又要向至高者還你的願,
௧௪நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி;
15 並要在患難之日求告我; 我必搭救你,你也要榮耀我。
௧௫ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
16 但上帝對惡人說:你怎敢傳說我的律例, 口中提到我的約呢?
௧௬தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
௧௭அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
18 你見了盜賊就樂意與他同夥, 又與行姦淫的人一同有分。
௧௮நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
௧௯உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது.
௨0நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
21 你行了這些事,我還閉口不言, 你想我恰和你一樣; 其實我要責備你,將這些事擺在你眼前。
௨௧இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
22 你們忘記上帝的,要思想這事, 免得我把你們撕碎,無人搭救。
௨௨தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
23 凡以感謝獻上為祭的便是榮耀我; 那按正路而行的,我必使他得着我的救恩。
௨௩நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.