< 詩篇 29 >

1 大衛的詩。 上帝的眾子啊,你們要將榮耀、能力歸給耶和華, 歸給耶和華!
தாவீதின் பாடல். தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
2 要將耶和華的名所當得的榮耀歸給他, 以聖潔的妝飾敬拜耶和華。
யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.
3 耶和華的聲音發在水上; 榮耀的上帝打雷, 耶和華打雷在大水之上。
யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4 耶和華的聲音大有能力; 耶和華的聲音滿有威嚴。
யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.
5 耶和華的聲音震破香柏樹; 耶和華震碎黎巴嫩的香柏樹。
யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
6 他也使之跳躍如牛犢, 使黎巴嫩和西連跳躍如野牛犢。
அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.
7 耶和華的聲音使火焰分岔。
யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
8 耶和華的聲音震動曠野; 耶和華震動加低斯的曠野。
யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.
9 耶和華的聲音驚動母鹿落胎, 樹木也脫落淨光。 凡在他殿中的,都稱說他的榮耀。
யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
10 洪水泛濫之時,耶和華坐着為王; 耶和華坐着為王,直到永遠。
௧0யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.
11 耶和華必賜力量給他的百姓; 耶和華必賜平安的福給他的百姓。
௧௧யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

< 詩篇 29 >