< 詩篇 16 >
1 大衛的金詩。 上帝啊,求你保佑我, 因為我投靠你。
௧தாவீதின் மிக்தாம் என்னும் பாடல். தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
2 我的心哪,你曾對耶和華說:你是我的主; 我的好處不在你以外。
௨என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி: தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர், என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்;
3 論到世上的聖民,他們又美又善, 是我最喜悅的。
௩பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய்.
4 以別神代替耶和華的, 他們的愁苦必加增; 他們所澆奠的血我不獻上; 我嘴唇也不提別神的名號。
௪அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
5 耶和華是我的產業, 是我杯中的分; 我所得的,你為我持守。
௫யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர்.
6 用繩量給我的地界,坐落在佳美之處; 我的產業實在美好。
௬நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.
7 我必稱頌那指教我的耶和華; 我的心腸在夜間也警戒我。
௭எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்; இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.
8 我將耶和華常擺在我面前, 因他在我右邊,我便不致搖動。
௮யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
9 因此,我的心歡喜,我的靈快樂; 我的肉身也要安然居住。
௯ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்.
10 因為你必不將我的靈魂撇在陰間, 也不叫你的聖者見朽壞。 (Sheol )
௧0என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol )
11 你必將生命的道路指示我。 在你面前有滿足的喜樂; 在你右手中有永遠的福樂。
௧௧வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.