< 約伯記 18 >

1 書亞人比勒達回答說:
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
2 你尋索言語要到幾時呢? 你可以揣摩思想,然後我們就說話。
“நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
3 我們為何算為畜生, 在你眼中看作污穢呢?
நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?
4 你這惱怒將自己撕裂的, 難道大地為你見棄、 磐石挪開原處嗎?
கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ?
5 惡人的亮光必要熄滅; 他的火焰必不照耀。
துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
6 他帳棚中的亮光要變為黑暗; 他以上的燈也必熄滅。
அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
7 他堅強的腳步必見狹窄; 自己的計謀必將他絆倒。
அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.
8 因為他被自己的腳陷入網中, 走在纏人的網羅上。
அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
9 圈套必抓住他的腳跟; 機關必擒獲他。
கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
10 活扣為他藏在土內; 羈絆為他藏在路上。
௧0அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
11 四面的驚嚇要使他害怕, 並且追趕他的腳跟。
௧௧சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும்.
12 他的力量必因飢餓衰敗; 禍患要在他旁邊等候。
௧௨அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும்.
13 他本身的肢體要被吞吃; 死亡的長子要吞吃他的肢體。
௧௩அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும்.
14 他要從所倚靠的帳棚被拔出來, 帶到驚嚇的王那裏。
௧௪அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும்.
15 不屬他的必住在他的帳棚裏; 硫磺必撒在他所住之處。
௧௫அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும்.
16 下邊,他的根本要枯乾; 上邊,他的枝子要剪除。
௧௬கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும்.
17 他的記念在地上必然滅亡; 他的名字在街上也不存留。
௧௭அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.
18 他必從光明中被攆到黑暗裏, 必被趕出世界。
௧௮அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.
19 在本民中必無子無孫; 在寄居之地也無一人存留。
௧௯அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை.
20 以後來的要驚奇他的日子, 好像以前去的受了驚駭。
௨0அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல, கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள்.
21 不義之人的住處總是這樣; 此乃不認識上帝之人的地步。
௨௧அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.

< 約伯記 18 >