< 以賽亞書 39 >
1 那時,巴比倫王巴拉但的兒子米羅達‧巴拉但聽見希西家病而痊癒,就送書信和禮物給他。
௧அக்காலத்திலே பலாதானின் மகனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு கடிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
2 希西家喜歡見使者,就把自己寶庫的金子、銀子、香料、貴重的膏油,和他武庫的一切軍器,並所有的財寶都給他們看;他家中和全國之內,希西家沒有一樣不給他們看的。
௨எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமள தைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரண்மனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை.
3 於是先知以賽亞來見希西家王,問他說:「這些人說甚麼?他們從哪裏來見你?」希西家說:「他們從遠方的巴比倫來見我。」
௩அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள் எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்.
4 以賽亞說:「他們在你家裏看見了甚麼?」希西家說:「凡我家中所有的,他們都看見了;我財寶中沒有一樣不給他們看的。」
௪அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.
௫அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தையைக் கேளும்.
6 日子必到,凡你家裏所有的,並你列祖積蓄到如今的,都要被擄到巴比倫去,不留下一樣;這是耶和華說的。
௬இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் முன்னோர்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் அனைத்தும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
7 並且從你本身所生的眾子,其中必有被擄去、在巴比倫王宮裏當太監的。」
௭நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார் என்றான்.
8 希西家對以賽亞說:「你所說耶和華的話甚好,因為在我的年日中必有太平和穩固的景況。」
௮அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன யெகோவாவுடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.