< 以賽亞書 31 >
1 禍哉!那些下埃及求幫助的, 是因仗賴馬匹,倚靠甚多的車輛, 並倚靠強壯的馬兵, 卻不仰望以色列的聖者, 也不求問耶和華。
௧உதவி பெறுவதற்காக இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், யெகோவாவை தேடாமலும், எகிப்திற்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர்கள் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ,
2 其實,耶和華有智慧; 他必降災禍, 並不反悔自己的話, 卻要興起攻擊那作惡之家, 又攻擊那作孽幫助人的。
௨அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரச்செய்து, தீமை செய்கிறவர்களின் வீட்டிற்கும், அக்கிரமக்காரருக்கு உதவி செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார்.
3 埃及人不過是人,並不是上帝; 他們的馬不過是血肉,並不是靈。 耶和華一伸手,那幫助人的必絆跌, 那受幫助的也必跌倒,都一同滅亡。
௩எகிப்தியர்கள் தெய்வம் அல்ல, மனிதர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; யெகோவா தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது உதவி செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாக அழிந்துபோவார்கள்.
4 耶和華對我如此說: 獅子和少壯獅子護食咆哮, 就是喊許多牧人來攻擊牠, 牠總不因他們的聲音驚惶, 也不因他們的喧嘩縮伏。 如此,萬軍之耶和華 也必降臨在錫安山岡上爭戰。
௪யெகோவா என்னுடன் சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாகக் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் யெகோவா சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் போர்செய்ய இறங்குவார்.
5 雀鳥怎樣搧翅覆雛, 萬軍之耶和華也要照樣保護耶路撒冷。 他必保護拯救, 要越門保守。
௫பறந்து காக்கிற பறவைகளைப்போல, சேனைகளின் யெகோவா எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதை தப்புவித்துக் காப்பாற்றுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.
6 以色列人哪,你們深深地悖逆耶和華,現今要歸向他。
௬இஸ்ரவேல் மக்களே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள்.
7 到那日,各人必將他金偶像銀偶像,就是親手所造、陷自己在罪中的,都拋棄了。
௭உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி சிலைகளையும், பொன் சிலைகளையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்.
8 亞述人必倒在刀下,並非人的刀; 有刀要將他吞滅,並非人的刀。 他必逃避這刀; 他的少年人必成為服苦的。
௮அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; மனிதனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்திற்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள்.
9 他的磐石必因驚嚇挪去; 他的首領必因大旗驚惶。 這是那有火在錫安、 有爐在耶路撒冷的耶和華說的。
௯அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய யெகோவா சொல்கிறார்.