< 何西阿書 3 >

1 耶和華對我說:「你再去愛一個淫婦,就是她情人所愛的;好像以色列人,雖然偏向別神,喜愛葡萄餅,耶和華還是愛他們。」
பின்பு யெகோவா என்னை நோக்கி: அந்நிய தெய்வங்களை மதித்து, திராட்சைரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் மக்கள்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்பிற்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு பெண்ணை நேசித்துக்கொள் என்று சொன்னார்.
2 我便用銀子十五舍客勒,大麥一賀梅珥半,買她歸我。
அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் வாங்கி,
3 我對她說:「你當多日為我獨居,不可行淫,不可歸別人為妻,我向你也必這樣。」
அவளை நோக்கி: நீ விபசாரம் செய்யாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாட்கள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
4 以色列人也必多日獨居,無君王,無首領,無祭祀,無柱像,無以弗得,無家中的神像。
இஸ்ரவேல் மக்கள் அநேகநாட்களாக ராஜாவும், அதிபதியும் இல்லாமலும், பலியும், சிலையும் இல்லாமலும், ஏபோத்தும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.
5 後來以色列人必歸回,尋求他們的上帝-耶和華和他們的王大衛。在末後的日子,必以敬畏的心歸向耶和華,領受他的恩惠。
பின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பி, தங்கள் தேவனாகிய யெகோவாவையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் யெகோவாவையும், அவருடைய தயவையும் நாடி நடுக்கத்துடன் வருவார்கள்.

< 何西阿書 3 >