< 诗篇 36 >
1 耶和华的仆人大卫的诗,交与伶长。 恶人的罪过在他心里说: 我眼中不怕 神!
௧இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல். துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.
2 他自夸自媚, 以为他的罪孽终不显露,不被恨恶。
௨அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான்.
3 他口中的言语尽是罪孽诡诈; 他与智慧善行已经断绝。
௩அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
4 他在床上图谋罪孽, 定意行不善的道,不憎恶恶事。
௪அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.
5 耶和华啊,你的慈爱上及诸天; 你的信实达到穹苍。
௫யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.
6 你的公义好像高山; 你的判断如同深渊。 耶和华啊,人民、牲畜,你都救护。
௬உமது நீதி மகத்தான மலைகள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
7 神啊,你的慈爱何其宝贵! 世人投靠在你翅膀的荫下。
௭தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
8 他们必因你殿里的肥甘得以饱足; 你也必叫他们喝你乐河的水。
௮உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
9 因为,在你那里有生命的源头; 在你的光中,我们必得见光。
௯வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
10 愿你常施慈爱给认识你的人, 常以公义待心里正直的人。
௧0உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.
11 不容骄傲人的脚践踏我; 不容凶恶人的手赶逐我。
௧௧பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.
12 在那里,作孽的人已经仆倒; 他们被推倒,不能再起来。
௧௨அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.