< 诗篇 147 >

1 你们要赞美耶和华! 因歌颂我们的 神为善为美; 赞美的话是合宜的。
யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.
2 耶和华建造耶路撒冷, 聚集以色列中被赶散的人。
யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.
3 他医好伤心的人, 裹好他们的伤处。
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
4 他数点星宿的数目, 一一称它的名。
அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.
5 我们的主为大,最有能力; 他的智慧无法测度。
நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
6 耶和华扶持谦卑人, 将恶人倾覆于地。
யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.
7 你们要以感谢向耶和华歌唱, 用琴向我们的 神歌颂。
யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
8 他用云遮天,为地降雨, 使草生长在山上。
அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.
9 他赐食给走兽 和啼叫的小乌鸦。
அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
10 他不喜悦马的力大, 不喜爱人的腿快。
௧0அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.
11 耶和华喜爱敬畏他 和盼望他慈爱的人。
௧௧தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார்.
12 耶路撒冷啊,你要颂赞耶和华! 锡安哪,你要赞美你的 神!
௧௨எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
13 因为他坚固了你的门闩, 赐福给你中间的儿女。
௧௩அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
14 他使你境内平安, 用上好的麦子使你满足。
௧௪அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
15 他发命在地; 他的话颁行最快。
௧௫அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.
16 他降雪如羊毛, 撒霜如炉灰。
௧௬பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
17 他掷下冰雹如碎渣; 他发出寒冷,谁能当得起呢?
௧௭அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
18 他一出令,这些就都消化; 他使风刮起,水便流动。
௧௮அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
19 他将他的道指示雅各, 将他的律例典章指示以色列。
௧௯யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
20 别国他都没有这样待过; 至于他的典章,他们向来没有知道。 你们要赞美耶和华!
௨0அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.

< 诗篇 147 >