< 诗篇 120 >
1 上行(或作登阶,下同)之诗。 我在急难中求告耶和华, 他就应允我。
௧ஆரோகண பாடல். என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2 耶和华啊,求你救我脱离说谎的嘴唇和诡诈的舌头!
௨யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.
3 诡诈的舌头啊,要给你什么呢? 要拿什么加给你呢?
௩வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
௪பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
௫ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும், கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!
௬சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
௭நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.