< 弥迦书 1 >
1 当犹大王约坦、亚哈斯、希西家在位的时候,摩利沙人弥迦得耶和华的默示,论撒马利亚和耶路撒冷。
௧யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரைச்சேர்ந்த மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாகப் பெற்றுக்கொண்டதுமான யெகோவாவுடைய வார்த்தை.
2 万民哪,你们都要听! 地和其上所有的,也都要侧耳而听! 主耶和华从他的圣殿 要见证你们的不是。
௨அனைத்து மக்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; யெகோவாகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாக இருப்பார்.
3 看哪,耶和华出了他的居所, 降临步行地的高处。
௩இதோ, யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.
4 众山在他以下必消化, 诸谷必崩裂, 如蜡化在火中, 如水冲下山坡。
௪மெழுகு நெருப்பிற்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயும்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், மலைகள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.
5 这都因雅各的罪过, 以色列家的罪恶。 雅各的罪过在哪里呢? 岂不是在撒马利亚吗? 犹大的邱坛在哪里呢? 岂不是在耶路撒冷吗?
௫இவை அனைத்தும் யாக்கோபுடைய மீறுதலின் காரணமாகவும், இஸ்ரவேல் வம்சத்தார்களுடைய பாவங்களின் காரணமாகவும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ?
6 所以我必使撒马利亚变为田野的乱堆, 又作为种葡萄之处; 也必将她的石头倒在谷中, 露出根基来。
௬ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சைச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழச்செய்து, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன்.
7 她一切雕刻的偶像必被打碎; 她所得的财物必被火烧; 所有的偶像我必毁灭; 因为是从妓女雇价所聚来的, 后必归为妓女的雇价。
௭அதின் வார்ப்பிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் நொறுக்கப்படும்; அதின் பொருட்கள் அனைத்தும் நெருப்பினால் எரித்துப்போடப்படும்; அதின் சிலைகளை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாகச் செலுத்தப்படும்.
8 先知说:因此我必大声哀号, 赤脚露体而行; 又要呼号如野狗, 哀鸣如鸵鸟。
௮இதனால் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் நிர்வாணமாகவும் நடப்பேன்; நான் நரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.
9 因为撒马利亚的伤痕无法医治, 延及犹大和耶路撒冷我民的城门。
௯அதின் காயம் ஆறாதது; அது யூதாவரை வந்தது: என் மக்களின் வாசலாகிய எருசலேம்வரை வந்து சேர்ந்தது.
10 不要在迦特报告这事, 总不要哭泣; 我在伯·亚弗拉滚于灰尘之中。
௧0அதைக் காத்பட்டணத்திலே அறிவிக்காதீர்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு.
11 沙斐的居民哪,你们要赤身蒙羞过去。 撒南的居民不敢出来。 伯·以薛人的哀哭使你们无处可站。
௧௧சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் நிர்வாணமாக அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாக இருக்காது.
12 玛律的居民心甚忧急,切望得好处, 因为灾祸从耶和华那里临到耶路撒冷的城门。
௧௨மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை யெகோவாவிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.
13 拉吉的居民哪,要用快马套车; 锡安民的罪由你而起; 以色列人的罪过在你那里显出。
௧௩லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே மகளாகிய சீயோனின் பாவத்திற்குக் காரணம்; உன்னிடத்தில் இஸ்ரவேலின் கீழ்ப்படியாமைகள் காணப்பட்டது.
14 犹大啊,你要将礼物送给摩利设·迦特。 亚革悉的众族必用诡诈待以色列诸王。
௧௪ஆகையால் மோர்ஷேத்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு ஏமாற்றமாகப்போகும்.
15 玛利沙的居民哪, 我必使那夺取你的来到你这里; 以色列的尊贵人必到亚杜兰。
௧௫மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு உரிமையாளனை வரச்செய்வேன்; இஸ்ரவேலின் தலைவர்கள் அதுல்லாம் வரை வருவார்கள்.
16 犹大啊,要为你所喜爱的儿女剪除你的头发, 使头光秃,要大大地光秃,如同秃鹰, 因为他们都被掳去离开你。
௧௬உனக்கு அருமையான உன் பிள்ளைகளுக்காக நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள்.