< 以西结书 20 >
1 第七年五月初十日,有以色列的几个长老来求问耶和华,坐在我面前。
௧பாபிலோனின் சிறையிருப்பின் ஏழாம் வருடத்து ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியிலே இஸ்ரவேலின் மூப்பர்களில் சிலர் யெகோவாவிடம் விசாரிக்கும்படி வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.
௨அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
3 “人子啊,你要告诉以色列的长老说,主耶和华如此说:你们来是求问我吗?主耶和华说:我指着我的永生起誓,我必不被你们求问。
௩மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மூப்பர்களுடன் பேசி, அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என்னிடம் விசாரிக்கவந்தீர்களோ? நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடுக்கமாட்டேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்.
4 人子啊,你要审问审问他们吗?你当使他们知道他们列祖那些可憎的事,
௪மனிதகுமாரனே, நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ? வழக்காட மனதிருந்தால், நீ அவர்கள் தகப்பன்மார்களுடைய அருவருப்புகளை அவர்களுக்கு காட்டி, அவர்களை நோக்கி:
5 对他们说,主耶和华如此说:当日我拣选以色列,向雅各家的后裔起誓,在埃及地将自己向他们显现,说:我是耶和华—你们的 神。
௫யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளிலே யாக்கோபு வம்சத்து மக்களுக்கு நான் வாக்கு கொடுத்து, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று வாக்களித்தேன்.
6 那日我向他们起誓,必领他们出埃及地,到我为他们察看的流奶与蜜之地;那地在万国中是有荣耀的。
௬நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து அழைப்பேன் என்றும், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும் எல்லா தேசங்களின் சிங்காரமுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்துவிடுவேன் என்றும் அந்த நாளிலே வாக்களித்து,
7 我对他们说,你们各人要抛弃眼所喜爱那可憎之物,不可因埃及的偶像玷污自己。我是耶和华—你们的 神。
௭உங்களில் அவரவர் தங்களுடைய கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் அசுத்தமான சிலைகளால் உங்களைத் தீட்டுப்படுத்தாமல் இருப்பீர்களாக; உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அவர்களுடன் சொன்னேன்.
8 他们却悖逆我,不肯听从我,不抛弃他们眼所喜爱那可憎之物,不离弃埃及的偶像。 “我就说,我要将我的忿怒倾在他们身上,在埃及地向他们成就我怒中所定的。
௮அவர்களோ, என்னுடைய சொல்லைக் கேட்கமனதில்லாமல் எனக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அவரவர் தங்களுடைய கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் அசுத்தமான சிலைகளை விடாமலும் இருந்தார்கள்; ஆதலால் எகிப்துதேசத்தின் நடுவிலே என்னுடைய கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படி என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
9 我却为我名的缘故没有这样行,免得我名在他们所住的列国人眼前被亵渎;我领他们出埃及地,在这列国人的眼前将自己向他们显现。
௯ஆகிலும் நான் என்னை இவர்களுக்கு வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என்னுடைய பெயர் பரிசுத்தக்குலைச்சலாகாதபடி, இவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, என்னுடைய பெயருக்காக கிருபைசெய்தேன்.
௧0ஆகையால் நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்தில் அழைத்துவந்து,
11 将我的律例赐给他们,将我的典章指示他们;人若遵行就必因此活着。
௧௧என்னுடைய கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என்னுடைய நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனிதன் அவைகளால் பிழைப்பான்.
12 又将我的安息日赐给他们,好在我与他们中间为证据,使他们知道我—耶和华是叫他们成为圣的。
௧௨நான் தங்களைப் பரிசுத்தம்செய்கிற யெகோவா என்று அவர்கள் அறியும்படி, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாக இருப்பதற்கான என்னுடைய ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
13 以色列家却在旷野悖逆我,不顺从我的律例,厌弃我的典章(人若遵行就必因此活着),大大干犯我的安息日。 “我就说,要在旷野将我的忿怒倾在他们身上,灭绝他们。
௧௩ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் எனக்கு விரோதமாக துரோகம் செய்தார்கள்; என்னுடைய கட்டளைகளின்படியே மனிதன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடக்காமல், என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள்; ஆதலால் அவர்களை அழிப்பதற்காக வனாந்திரத்திலே என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
14 我却为我名的缘故,没有这样行,免得我的名在我领他们出埃及的列国人眼前被亵渎。
௧௪ஆகிலும் நான் இவர்களைப் புறப்படச்செய்ததைக் கண்ட அந்நியமக்களுடைய கண்களுக்கு முன்பாக என்னுடைய பெயர் பரிசுத்தக்குலைச்சலாகாதபடி, என்னுடைய பெயருக்காக கிருபைசெய்தேன்.
15 并且我在旷野向他们起誓,必不领他们进入我所赐给他们流奶与蜜之地(那地在万国中是有荣耀的);
௧௫ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய அசுத்தமான சிலைகளைப் பின்பற்றி அவர்கள் என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய கட்டளைகளில் நடக்காமற்போய், என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால்,
16 因为他们厌弃我的典章,不顺从我的律例,干犯我的安息日,他们的心随从自己的偶像。
௧௬நான் வாக்குத்தத்தம்செய்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லா தேசங்களின் அழகாக இருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவதில்லை என்று வனாந்திரத்தில் வாக்களித்தேன்.
17 虽然如此,我眼仍顾惜他们,不毁灭他们,不在旷野将他们灭绝净尽。
௧௭ஆகிலும் அவர்களை அழிக்காதபடி, என்னுடைய கண் அவர்களைத் தப்பவிட்டது; நான் அவர்களை வனாந்திரத்தில் அழிக்கவில்லை.
18 “我在旷野对他们的儿女说:不要遵行你们父亲的律例,不要谨守他们的恶规,也不要因他们的偶像玷污自己。
௧௮வனாந்திரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்களுடைய பெற்றோர்களின் முறைமைகளில் நடக்காமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய அசுத்தமான சிலைகளால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்.
19 我是耶和华—你们的 神,你们要顺从我的律例,谨守遵行我的典章,
௧௯உங்களுடைய தேவனாகிய யெகோவா நானே; நீங்கள் என்னுடைய கட்டளைகளில் நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,
20 且以我的安息日为圣。这日在我与你们中间为证据,使你们知道我是耶和华—你们的 神。
௨0என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று நீங்கள் அறியும்படி அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாக இருக்கும் என்றேன்.
21 只是他们的儿女悖逆我,不顺从我的律例,也不谨守遵行我的典章(人若遵行就必因此活着),干犯我的安息日。 “我就说,要将我的忿怒倾在他们身上,在旷野向他们成就我怒中所定的。
௨௧ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விரோதமாக எழும்பினார்கள்; என்னுடைய கட்டளைகளின்படியே மனிதன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப் போட்டார்கள்; ஆகையால் வனாந்திரத்திலே என்னுடைய கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
22 虽然如此,我却为我名的缘故缩手没有这样行,免得我的名在我领他们出埃及的列国人眼前被亵渎。
௨௨ஆகிலும் நான் என்னுடைய கையைத்திருப்பி, நான் இவர்களை புறப்படச்செய்ததைக் கண்ட அந்நியமக்களுடைய கண்களுக்கு முன்பாக என் பெயர் பரிசுத்தக்குலைச்சலாகாதபடி, என்னுடைய பெயருக்காக கிருபைசெய்தேன்.
23 并且我在旷野向他们起誓,必将他们分散在列国,四散在列邦;
௨௩ஆனாலும் அவர்கள் என்னுடைய நியாயங்களின்படி செய்யாமல், என்னுடைய கட்டளைகளை வெறுத்து, என்னுடைய ஓய்வு நாட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் தகப்பன்மார்களின் அசுத்தமான சிலைகளின்மேல் நோக்கமாக இருந்தபடியாலும்,
24 因为他们不遵行我的典章,竟厌弃我的律例,干犯我的安息日,眼目仰望他们父亲的偶像。
௨௪நான் அவர்களைப் அந்நியமக்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களிலே தூற்றிப்போடுகிறதற்கு வனாந்திரத்திலே வாக்கு கொடுத்தேன்.
25 我也任他们遵行不美的律例,谨守不能使人活着的恶规。
௨௫ஆகையால் நன்மைக்கு ஏதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கு ஏதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
26 因他们将一切头生的经火,我就任凭他们在这供献的事上玷污自己,好叫他们凄凉,使他们知道我是耶和华。
௨௬நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.
27 “人子啊,你要告诉以色列家说,主耶和华如此说:你们的列祖在得罪我的事上亵渎我;
௨௭ஆகையால் மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மக்களுடன் பேசி, அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களுடைய தகப்பன்மார்கள் இன்னும் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்து, என்னைத் சபித்தார்கள்.
28 因为我领他们到了我起誓应许赐给他们的地,他们看见各高山、各茂密树,就在那里献祭,奉上惹我发怒的供物,也在那里焚烧馨香的祭牲,并浇上奠祭。
௨௮அவர்களுக்குக் கொடுப்பேன் என்று வாக்குகொடுத்த தேசத்திலே நான் அவர்களை நுழையச்செய்த பின்பு, அவர்கள் உயர்ந்த ஒரு மேட்டையும் தழைத்த ஒரு மரங்களையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்களுடைய பலிகளைச் செலுத்தி, அந்த இடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்களுடைய காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்களுடைய தூபங்களைக் காட்டி, தங்களுடைய பானபலிகளை ஊற்றினார்கள்.
29 我就对他们说:你们所上的那高处叫什么呢?(那高处的名字叫巴麻直到今日。)
௨௯அப்பொழுது நான் அவர்களை நோக்கி: நீங்கள் போகிற அந்த மேடு என்னவென்று கேட்டேன்; அதினால் இந்த நாள்வரைக்கும் அதற்குப் பாமா என்று பெயர்.
30 所以你要对以色列家说,主耶和华如此说:你们仍照你们列祖所行的玷污自己吗?仍照他们可憎的事行邪淫吗?
௩0ஆகையால் நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களுடைய தகப்பன்மார்களுடைய மார்க்கத்தின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ? அவர்களுடைய அருவருப்புகளை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ?
31 你们奉上供物使你们儿子经火的时候,仍将一切偶像玷污自己,直到今日吗?以色列家啊,我岂被你们求问吗?主耶和华说:我指着我的永生起誓,我必不被你们求问。
௩௧நீங்கள் உங்களுடைய பிள்ளைகளைத் தீ மிதிக்கச்செய்து, உங்களுடைய பலிகளைச் செலுத்துகிறபோது, இந்த நாள் வரைக்கும் அவர்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளாலும் நீங்கள் தீட்டுப்படுவீர்களே; நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடுப்பேனோ? இஸ்ரவேல் மக்களே, நீங்கள் என்னிடத்தில் விசாரிக்கும்படி இடங்கொடுப்பதில்லை என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
32 “你们说:我们要像外邦人和列国的宗族一样,去事奉木头与石头。你们所起的这心意万不能成就。”
௩௨மரத்திற்கும் கல்லுக்கும் ஆராதனை செய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்தின் மக்களின் தேசங்களைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே; உங்களுடைய மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை.
33 主耶和华说:“我指着我的永生起誓,我总要作王,用大能的手和伸出来的膀臂,并倾出来的忿怒,治理你们。
௩௩பலத்த கையினாலும், புயத்தினாலும், ஊற்றப்பட்ட கடுங்கோபத்தினாலும், உங்களை ஆள்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
34 我必用大能的手和伸出来的膀臂,并倾出来的忿怒,将你们从万民中领出来,从分散的列国内聚集你们。
௩௪நீங்கள் மக்களுக்குள் இல்லாதபடி நான் உங்களைப் புறப்படச்செய்து, நீங்கள் சிதறியிருக்கிற தேசங்களில் இல்லாதபடிக்கு நான் உங்களைப் பலத்தகையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட கடுங்கோபத்தினாலும் கூடிவரச்செய்து,
35 我必带你们到外邦人的旷野,在那里当面刑罚你们。
௩௫உங்களைப் புறதேசத்தாரின் வனாந்திரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களுடன் முகமுகமாக வழக்காடுவேன்.
36 我怎样在埃及地的旷野刑罚你们的列祖,也必照样刑罚你们。这是主耶和华说的。
௩௬நான் எகிப்துதேசத்தின் வனாந்திரத்தில் உங்களுடைய தகப்பன்மார்களுடன் வழக்காடினதுபோல உங்களோடும் வழக்காடுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
௩௭நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி,
38 我必从你们中间除净叛逆和得罪我的人,将他们从所寄居的地方领出来,他们却不得入以色列地。你们就知道我是耶和华。
௩௮கலகக்காரர்களையும், துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் நுழைவதில்லை; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
39 “以色列家啊,至于你们,主耶和华如此说:从此以后若不听从我,就任凭你们去事奉偶像,只是不可再因你们的供物和偶像亵渎我的圣名。
௩௯இப்போதும் இஸ்ரவேல் மக்களே, நீங்கள் என்னுடைய சொல்லைக்கேட்க மனதில்லாமல் இருந்தால், நீங்கள் போய், அவனவன் தன் தன் அசுத்தமான சிலைகளை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என்னுடைய பரிசுத்த பெயரை உங்களுடைய காணிக்கைகளாலும் உங்களுடைய அசுத்தமான சிலைகளாலும் இனிப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
40 “主耶和华说:在我的圣山,就是以色列高处的山,所有以色列的全家都要事奉我。我要在那里悦纳你们,向你们要供物和初熟的土产,并一切的圣物。
௪0இஸ்ரவேலின் உயரமான மலையாகிய என்னுடைய பரிசுத்த மலையிலே இஸ்ரவேலுடைய எல்லா வம்சத்தாருமாகிய தேசத்திலுள்ள அனைவரும் என்னைச் சேவிப்பார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அங்கே அவர்கள்மேல் பிரியம் வைப்பேன்; அங்கே நீங்கள் பரிசுத்தம்செய்கிற எல்லாவற்றிலும் உங்களுடைய காணிக்கைகளையும் உங்களுடைய முதற்பலன்களையும் செலுத்தும்படி கேட்பேன்.
41 我从万民中领你们出来,从分散的列国内聚集你们,那时我必悦纳你们好像馨香之祭,要在外邦人眼前在你们身上显为圣。
௪௧நான் உங்களை மக்களிலிருந்து புறப்படச்செய்து, நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுகந்த வாசனையினால் நான் உங்கள்மேல் பிரியமாக இருப்பேன்; அப்பொழுது அந்நியஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம் செய்யப்படுவேன்.
42 我领你们进入以色列地,就是我起誓应许赐给你们列祖之地,那时你们就知道我是耶和华。
௪௨உங்களுடைய தகப்பன்மார்களுக்கு கொடுப்பேன் என்று வாக்கு கொடுத்த தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திலே நான் உங்களைத் திரும்பிவரச்செய்யும்போது, நான் யெகோவா என்று நீங்கள் அறிந்துகொண்டு,
43 你们在那里要追念玷污自己的行动作为,又要因所做的一切恶事厌恶自己。
௪௩அங்கே உங்களுடைய எல்லா வழிகளையும் உங்களைத் தீட்டுப்படுத்தின உங்களுடைய எல்லாச் செயல்களையும் நினைத்து, நீங்கள் செய்திருந்த உங்களுடைய எல்லாப் பொல்லாப்புகளுக்காக உங்களை நீங்களே அருவருப்பீர்கள்.
44 主耶和华说:以色列家啊,我为我名的缘故,不照着你们的恶行和你们的坏事待你们;你们就知道我是耶和华。”
௪௪இஸ்ரவேல் மக்களே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்களுடைய கெட்ட செயல்களுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என்னுடைய பெயரினால் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
௪௫யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
46 “人子啊,你要面向南方,向南滴下预言攻击南方田野的树林。
௪௬மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன்னுடைய வசனத்தைப் பொழிந்து, தெற்குபுறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி,
47 对南方的树林说,要听耶和华的话。主耶和华如此说:我必使火在你中间着起,烧灭你中间的一切青树和枯树,猛烈的火焰必不熄灭。从南到北,人的脸面都被烧焦。
௪௭தெற்குதிசைக்காட்டை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தையைக் கேள், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னில் நெருப்பை கொளுத்துவேன்; அது உன்னில் பச்சையான எல்லா மரங்களையும் பட்டுப்போன எல்லா மரங்களையும் எரிக்கும்; ஜூவாலிக்கிற ஜூவாலை அவிக்கப்படமாட்டாது; தெற்கு துவக்கி வடக்குவரையுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும்.
48 凡有血气的都必知道是我—耶和华使火着起,这火必不熄灭。”
௪௮யெகோவாகிய நான் அதைக் கொளுத்தினேன் என்பதை எல்லா மக்களும் காணும்; அது அவிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.
49 于是我说:“哎!主耶和华啊,人都指着我说:他岂不是说比喻的吗?”
௪௯அப்பொழுது நான்: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக்குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.