< 阿摩司书 1 >
1 当犹大王乌西雅,以色列王约阿施的儿子耶罗波安在位的时候,大地震前二年,提哥亚牧人中的阿摩司得默示论以色列。
௧தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய மகனாகிய ரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனம்கண்டு சொன்ன வார்த்தைகள்.
2 他说:耶和华必从锡安吼叫, 从耶路撒冷发声; 牧人的草场要悲哀; 迦密的山顶要枯干。
௨யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பர்களின் பசும்புல்நிலம் துக்கம் கொண்டாடும்; கர்மேலின் உச்சியும் காய்ந்துபோகும்.
3 耶和华如此说: 大马士革三番四次地犯罪, 我必不免去她的刑罚; 因为她以打粮食的铁器打过基列。
௩யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இரும்புக் கருவிகளினால் போரடித்தார்களே.
4 我却要降火在哈薛的家中, 烧灭便·哈达的宫殿。
௪ஆசகேலின் வீட்டை தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரண்மனைகளை அழித்துவிடும்.
5 我必折断大马士革的门闩, 剪除亚文平原的居民和伯·伊甸掌权的。 亚兰人必被掳到吉珥。 这是耶和华说的。
௫நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இல்லாதபடி அழித்துப்போடுவேன்; அப்பொழுது சீரியாவின் மக்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
6 耶和华如此说: 迦萨三番四次地犯罪, 我必不免去她的刑罚; 因为她掳掠众民交给以东。
௬யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: காசாவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியர்களிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுவதும் சிறையாக்கினார்களே.
௭காசாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரண்மனைகளை அழித்துவிடும்.
8 我必剪除亚实突的居民和亚实基伦掌权的, 也必反手攻击以革伦。 非利士人所余剩的必都灭亡。 这是主耶和华说的。
௮நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் பிடித்திருக்கிறவனை அஸ்கலோனிலும் இல்லாதபடி அழித்து, பெலிஸ்தர்களில் மீதியானவர்கள் அழியும்படி என்னுடைய கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 耶和华如此说: 泰尔三番四次地犯罪, 我必不免去她的刑罚; 因为她将众民交给以东, 并不记念弟兄的盟约。
௯மேலும்: தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்களுடைய சகோதர்களின் உடன்படிக்கையை நினைக்காமல், சிறைப்பட்டவர்களை முழுவதும் ஏதோமியர்கள் கையில் ஒப்புவித்தார்களே.
௧0தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரண்மனைகளை அழித்துவிடும் என்று யெகோவா சொல்லுகிறார்.
11 耶和华如此说: 以东三番四次地犯罪, 我必不免去她的刑罚; 因为她拿刀追赶兄弟,毫无怜悯, 发怒撕裂,永怀忿怒。
௧௧மேலும்: ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் தன்னுடைய சகோதரனைப் வாளோடு பின்தொடர்ந்து, தன்னுடைய மனதை இரக்கமற்றதாக்கி, தன்னுடைய கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன்னுடைய கடுங்கோபத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே.
௧௨தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
13 耶和华如此说: 亚扪人三番四次地犯罪, 我必不免去他们的刑罚; 因为他们剖开基列的孕妇, 扩张自己的境界。
௧௩யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்களுடைய எல்லைகளை விரிவாக்க கீலேயாத் தேசத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே.
14 我却要在争战呐喊的日子, 旋风狂暴的时候, 点火在拉巴的城内, 烧灭其中的宫殿。
௧௪ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புயலாகவும் அதின் அரண்மனைகளை அழிக்கும்.
15 他们的王和首领必一同被掳去。 这是耶和华说的。
௧௫அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.