< 啟示錄 10 >

1 以後,我看見了另一位強有力的天使,由天上降下,身披雲彩,頭上有虹,容貌像太陽,兩腿像火柱,
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவனைச் சுற்றியிருந்தது, அவனுடைய தலையின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினித் தூண்களைப்போலவும் இருந்தது.
2 手中拿著一卷展開的小書,右腳踏海,左腳踏地。
திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து,
3 他大聲呼喊,有如獅子怒吼。正當他呼喊時,就有七個雷霆發出說話的聲音。
சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல அதிக சத்தமாக ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
4 那七個雷霆說話以後,我正要寫出來,就聽見有聲音從天上說:「你應把七個雷霆所說的話,密封起來,不要寫出來。」
அந்த ஏழு இடிகளும் தங்களுடைய சத்தங்களை முழங்கினபோது நான் எழுதவேண்டுமென்று இருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் அவைகள் இரகசியமாக இருக்க முத்திரைபோடு என்று வானத்திலிருந்து சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
5 我看見的那位踏著海和踏著地的天使,向天舉起了右手,
கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் பார்த்த அந்த தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:
6 指著那創造天及天上的一切,地及地上的一切,海及海中的一切的萬世萬代的永生者起誓說:「時候不再延長了! (aiōn g165)
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
7 但當第七位天使將要吹號角發聲的日期,天主的奧秘必定完成,正如天主向自己的眾僕先知所宣告的。」
ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு நற்செய்தியாக அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்று,
8 我聽見那從天上來的聲音,又對我說道:「你去,從那踏著海和踏著地的天使手中,取過那卷展開的小書來!」
நான் வானத்தில் இருந்து கேட்ட சத்தம் மீண்டும் என்னோடு பேசி: கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையில் இருக்கும் திறக்கப்பட்ட சிறிய புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,
9 我便往那位天使跟前去,請他給我那卷小書。他就對我說:「你拿去吞下它罷!它必使你肚子發苦,但在你的嘴裏卻甘甜如蜜。」
நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான்.
10 我就從天使手中接過那卷小書來,吞下它,果然它在我嘴裏甘甜如蜜;但我一吃下去,我的肚子就苦起來了。
௧0நான் அந்தச் சிறிய புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைச் சாப்பிட்டேன்; என் வாய்க்கு அது தேனைப்போல இனிமையாக இருந்தது; நான் அதைச் சாப்பிட்டவுடனே என் வயிறு கசப்பானது.
11 隨後有聲音對我說:「關於諸民族、諸邦國、諸異語人民和諸君王,你應再講預言。」
௧௧அப்பொழுது அவன் என்னைப் பார்த்து: நீ மீண்டும் அநேக மக்களையும், தேசங்களையும், பல மொழிக்காரர்களையும், ராஜாக்களையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்றான்.

< 啟示錄 10 >