< 詩篇 87 >

1 詠【萬民的母親熙雍】 科辣黑子孫的詩歌。 上主喜愛自己的宮殿,是建在一切的聖山。
கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார்.
2 祂喜愛所有的城門,勝過雅各伯所有的帳棚。
யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், சீயோனின் வாசல்களை நேசிக்கிறார்.
3 天主的聖城!人們論到您,曾經說了許多光榮的事; (休止)
இறைவனின் நகரமே, உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன:
4 我要將辣哈布和巴比倫,列於認識我者的人群中:連培勒舍特、提洛和雇民,這些人都是在您那裏出生。
“என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடு நான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து, ‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்; பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.”
5 論到熙雍,人要稱她為母親,人人都是在她那裏出生;至高者要親自使她堅。
உண்மையாகவே சீயோனைக் குறித்து, “இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும், மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும்.
6 上主要在萬民戶籍上留名:這些人也都是在那裏出生。 (休止)
“இன்னார் சீயோனிலே பிறந்தார்” என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார்.
7 人們要在舞蹈時唱歌說:我的一切泉榞都在您內。
அவர்கள் இசை மீட்டும்பொழுது, “எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது” என்று பாடுவார்கள்.

< 詩篇 87 >