< 詩篇 56 >

1 達味金詩,交與樂官。 天主,求你憐憫我,因為人要謀害我,時時處處有人欺壓我。
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
2 我的仇敵終日謀害我,攻擊我的人實在眾多。
என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.
3 至高者!恐惶侵襲我的時日,我只有全心仰賴你。
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
4 我全心倚賴天主,並歌頌祂的許諾;我決不怕血肉的人,對我要做什麼。
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?
5 他們終日破壞我的生活,千方百計地想加害於我;
எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது.
6 他們群集埋伏,窺伺我的行徑,他們等待時機,謀圖我的性命。
அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்; என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
7 天主,求你審判他們的罪行;求你在盛怒中將異民敉平。
அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும்.
8 我多次流離失所,你都知悉,我的眼淚聚在你皮囊裏;豈不是也寫在你的書卷內?
என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
9 我幾時呼號你,我的仇敵便退卻,從此我也全知道,天主常扶助我。
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
10 我全心倚賴天主,歌頌祂的許諾;
௧0தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
11 決不怕脆弱的人,對我要做什麼。
௧௧தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
12 天主,我必遵守向你所許的願,我必要向你償還頌謝的祭獻。
௧௨தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன்.
13 因為你救我脫離死亡,使我的腳免於跌仆,使我能在活人的光明中,在天主的面前行走。
௧௩நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?

< 詩篇 56 >