< 詩篇 108 >
1 【我要在萬民中讚美上主】達味的詩歌。 天主,我的心已準備妥當,我的心已準備妥當,我歌彈詠唱。
௧தாவீது பாடிய பாடல். தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; என்னுடைய மகிமையும் பாடும்.
2 我的心靈要醒起來!七絃和豎琴要奏起來!我要喚起曙光。
௨வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
3 上主,我要在萬民中讚美您;上主,我要在列邦中歌頌您。
௩யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
4 上主,您的慈愛高越諸天;上主,您的忠信直達霄漢。
௪உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.
5 上主,您在天上備受舉揚;上主,您在地上彰顯榮光。
௫தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6 上主,您給我們獲得救恩;上主,您以右手協助我們。
௬உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.
7 天主在自己的聖所說:我要凱旋,將舍根分離,將穌苛特的平原測量。
௭தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
8 基勒阿得地屬於我,默納協地也屬於我,我的頭盔就是厄法辣因,猶大成為我手中的權棍。
௮கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல்.
9 摩阿布是我的沐浴池,我向厄東投我的鞋隻,我還要戰勝培勒舍特。
௯மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
௧0வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
11 天主,莫非您已將我們拋棄,天主,難道不率領我們出擊?
௧௧எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
12 求您援助我們抵抗仇敵,因為人的援助盡屬虛無。
௧௨இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண்.
13 我們倚靠天主,奮勇行事。祂必要踏踐我們的仇敵。
௧௩தேவனாலே வெற்றி பெறுவோம்; அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.