< 箴言 4 >

1 孩子,你們要聽父親的教訓,專心學習明智,
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
2 因為我把好教訓授給你們,你們不要拋棄我的規勸。
நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.
3 我也曾在父親面前作過孝子,在我母親膝下是唯一的嬌兒。
நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
4 我父曾訓誨我說:你應留心牢記我的話,遵守我的命令,好使你生存;
அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
5 你應緊握智慧,握住明智,不要忘記,也不要離棄我口中的教訓:
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு.
6 你若不捨棄她,她必護佑你;你若喜愛她,她必看顧你。
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாக இரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
7 首先應爭取的是智慧,因此你應尋求智慧,應犧牲一切去爭取明智。
ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
8 你若顯揚智慧,智慧也必顯揚你;你若懷抱她,她也必光榮你:
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும்.
9 將華冠加在你的頭上,將榮冕賜給你。
அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
10 我兒,你若聽取我的訓言,你必延年益壽。
௧0என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும்.
11 我要教給你智慧的道路,引你走上正直的途徑:
௧௧ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
12 這樣,你若行走,你的腳決不會受阻礙;即便你奔馳,也決不致顛仆。
௧௨நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
13 你要堅持教訓,切勿把她拋棄;你應保存她,因為她是你的生命。
௧௩புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர்.
14 惡人的道路,你不要進去;壞人的途徑,你不要踏入;
௧௪துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
15 反應躲避,不經其上;遠遠離去,繞道他往。
௧௫அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ.
16 因為他們不作惡,不能入睡;不使人跌倒,就要失眠。
௧௬தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும்.
17 他們吃的是邪惡的餅,飲的是暴虐的酒。
௧௭அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
18 但是,義人的途徑,像黎明的曙光,越來越明亮,直至成日中;
௧௮நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.
19 惡人的道路,卻宛如幽暗,他們不知道,要跌在何處。
௧௯துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.
20 我兒,你要注意我的訓言,側耳傾聽我的教導;
௨0என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.
21 不要讓她離開你的視線,卻要牢記在心中。
௨௧அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.
22 因為,凡找著她的,必獲得生命;他整個身軀,必獲得健康。
௨௨அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
23 在一切之上,你要謹守你的心,因為生命是由此而生。
௨௩எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.
24 你應摒絕口舌的欺詐,遠避唇舌的乖謬。
௨௪வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
25 你的眼睛應向前直視,你的視線應向前集中。
௨௫உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.
26 你要修平你腳下的行徑,要鞏固你一切的路途。
௨௬உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும்.
27 你斷不可左傾右依,務使你的腳遠離邪惡。
௨௭வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.

< 箴言 4 >