< 腓立比書 3 >

1 此外,我們弟兄們! 你們應喜樂於主;給你們寫一樣的事,為我並不煩難,為你們卻是安全。
மேலும், என் சகோதரர்களே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே மீண்டும் எழுதுவது எனக்கு வருத்தம் இல்லை, அது உங்களுக்கு நலமாக இருக்கும்.
2 你們要提防狗,要提防邪惡的丌人,要提防自行怍割的人。
நாய்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். விருத்தசேதனக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
3 其實,真受割損的人是我們,因為我們是以天主的聖神實行敬禮,在耶穌基督內自豪,而不信賴外表的人,
ஏனென்றால், சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இல்லாமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவிற்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
4 雖然我對外表也有可信賴的。如果有人以為自己能將信賴放在外表上,那我更可以:
சரீரத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இருக்க நினைத்தால் நான் அதைவிட அதிகமாக அப்படிச் செய்யலாம்.
5 我生第八天受了割損,出於以色列民族,屬於本雅民支派,是由希伯來人所生的希伯來人;就法律說,我是法利賽人;
நான் எட்டாம்நாளில் விருத்தசேதனம்பண்ணப்பட்டவன், இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;
6 就熱忱說,失曾迫害過教會;就法律的正義說,是無瑕可指的。
பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்தின் நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
7 凡以前對我有利益的事,我如今為了基督,都看作是損失。
ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன்.
8 不但如此,而且我將一怍都看作是損失,因為我只以認識我主基督耶穌為至寶;為了祂,我自願損失一切,拿一切當廢物,為賺得基督,
அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
9 為給合於祂,並非籍我因守法律獲得的正義,而是藉由於信仰基督獲得的正義。
நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாக இல்லாமல், கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருந்து, கிறிஸ்துவிற்குள் இருக்கிறவன் என்று தெரியும்படிக்கும்,
10 我只願認識基督和祂復活的德能,能參與祂的苦難相似祂的死,
௧0இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும்,
11 我希望也得到由死者中的復活。
௧௧அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன்.
12 這並不是說:我已經達到這目標,或已成為成全的人;我只顧向前跑,看看是否我也能夠奪得,因為基督耶穌已奪得了我。
௧௨நான் பெற்றுக்கொண்டேன் அல்லது முழுவதும் தேறினவனானேன் என்று நினைக்காமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்வதற்காக ஆசையாகத் தொடருகிறேன்.
13 弟兄們! 我並不以為我已經奪得,我只顧一件事:即忘盡我背後的,只向我在前面的奔馳,
௧௩சகோதரர்களே, அதைப் பிடித்துக்கொண்டேன் என்று நான் நினைக்கிறதில்லை; ஒன்று செய்கிறேன், கடந்தவைகளை மறந்து, வருகிறவைகளைத் தேடி,
14 為達到目標,為爭取天主在基督耶穌內召我向上爭奪的獎品。
௧௪கிறிஸ்து இயேசுவிற்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
15 所以,我們凡是成熟的人,都應懷有這種心情;即使你們另有別種心情,天主也要將這種心情啟示給你們。
௧௫ஆகவே, நம்மில் தேறினவர்கள் எல்லோரும் இந்தச் சிந்தையாகவே இருக்கவேண்டும்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறு சிந்தையாக இருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
16 但是,不拘我們已達到什麼程度,仍應照樣進行。
௧௬ஆனாலும் நாம் எதுவரைக்கும் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காக நடந்துகொண்டு, ஒரே சிந்தையாக இருப்போமாக.
17 弟兄們! 要一同效法我,也要注意那些按我們的表樣生活行動的人,
௧௭சகோதரர்களே, நீங்கள் என்னோடு பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்கிப் பாருங்கள்.
18 因為有許多人,我曾多次對你們說過,如今再含淚對你們說:他們行事為人,是基督十字架的敵人;
௧௮ஏனென்றால், அநேகர் வேறுவிதமாக நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களென்று உங்களுக்கு அநேகமுறைச் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
19 他們的結局是喪亡,他們的天主是肚腹,以羞辱為光榮,只恩念地上的事。
௧௯அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய வெட்கமே, அவர்கள் பூமிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
20 至於我們,我們的家鄉原是在天上,我們等待主耶穌基督我們的救主從那裏降來,
௨0நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
21 祂必要按祂能使一切屈服於自己的大能,改變我們卑賤的身體,相似祂光榮的身體。
௨௧அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்வதற்கு தம்முடைய வல்லமையான செயலின்படி, நம்முடைய அற்பமான சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

< 腓立比書 3 >