< 路加福音 3 >

1 凱撒提庇留執政第十五年,般雀比拉多作猶太總督,黑落德作分封侯,他的兄弟斐理伯作依突勒雅和特辣曷地方的分封侯,呂撒尼雅作阿彼肋乃分封侯,
திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும்,
2 亞納斯和蓋作大司祭時,在荒野中有天主的話,傳給匝加利亞的兒子若翰。
அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது.
3 他遂來走遍約旦河一帶地方,宣講悔改的洗禮,為得罪之赦。
அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,
4 正如依撒意亞先知預言書上記載的:『在荒野中有呼號者的聲音:你們當預備上主的道路,修直祂的途徑! 』
பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
5 一切深谷要填滿,一切山丘岳邱陵要剷平,彎曲的要修直,崎嶇的要開成炟途!
மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,
6 凡有血肉的,都要看見天主的救援。』
அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
7 於是,他對那些前來要受他洗禮的群眾說:「毒蛇的種類! 誰指教你們逃避那就要來的忿怒?
அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
8 那麼,結與悔改相稱的果實吧! 你們心裡不要以為:我們有亞巴郎為父。我給你們說:天主能從這些石頭中給亞巴郎興起子孫來。
மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
9 斧子已放到樹根上了;凡不結好果子的樹,必被砍倒,投入火中。」
இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.
10 群眾向他說:「那麼,失們該作什麼呢?
௧0அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
11 他答覆他們說:「有兩件內衣的,要分給那沒有的;有食物的,也應照樣做。」
௧௧அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான்.
12 稅吏也來受洗,並問說:「師傅,我們該作什麼呢? 」
௧௨வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள்.
13 他向他門說:「除給你們規定的外,不要多徵收! 」
௧௩அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
14 軍人也問說:「我們該作什麼呢? 」他向他門說:「不要勒索人,不要敲詐;對你的糧餉應該知足! 」
௧௪போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான்.
15 那時,百姓都在期待(默西亞),為此人人心中推想:也許若翰就是默西亞。
௧௫யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது,
16 若翰便向眾人說道:「我固然以水洗你們,但是比我強的一位要來,就是解祂的鞋帶,我也不配。祂要以聖神和火洗你們。
௧௬யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
17 木欣已放在祂手中,祂要揚淨自己的禾場,把麥粒收在倉內;至於糠秕,卻要用不滅的火焚燒。」
௧௭தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
18 他還講了許多別的勸言,給百姓傳報喜訊。
௧௮வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
19 分封侯黑落德卻為了自已兄弟的妻子黑落狄雅,並為了本人所作的一切惡事,受了若翰的指謫,
௧௯தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
20 又在一切的惡事上加了這一件:即把若翰囚在監中。
௨0ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான்.
21 眾百姓受洗後,耶穌也受了洗;當祂祈禱時,天開了;
௨௧மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது;
22 聖神藉著一個形像,如同鴿子,降祂上面;並有聲音從天上說:「你是我的愛子,我因你喜悅。」
௨௨பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.
23 耶穌開始傳教hapi 時候,大約三十歲,人都以祂為若瑟的兒子:若瑟是赫里的兒子,赫是瑪塔特的兒子,
௨௩அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
24 瑪塔特是肋未的兒子,肋未是默爾希的兒子,默爾希是雅乃的兒子,雅乃是約色夫的兒子,
௨௪ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
25 約色夫是瑪塔提雅的兒子,瑪塔提雅是阿摩斯的兒子,阿摩斯是納洪的兒子,納洪是厄斯里的兒子,厄斯里是納革的兒子,
௨௫யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
26 納革是瑪哈特的兒子,瑪哈特是瑪提雅的兒子,瑪特提雅是史米的兒子,史米是約色黑的兒子,約色黑是約達的兒子,
௨௬நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
27 約達是約哈南的兒子,約哈南是肋撒的兒子,肋撒是則魯巴貝耳的兒子,則魯巴貝耳是沙耳提耳的兒子,沙耳提耳是乃黎的兒子,
௨௭யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
28 乃黎是默耳希的兒子,默耳希阿狄的兒子,阿狄是科散的兒子,科散是厄耳瑪丹的兒子,厄耳瑪丹是厄爾的兒子,
௨௮நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
29 厄爾是耶蘇的兒子,耶蘇是厄里厄則爾的兒子,厄里厄則爾是約楞的兒子,約楞是瑪塔特的兒子,瑪塔特是肋未的兒子,
௨௯யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
30 肋未是西默盎的兒子,西默盎是猶達的兒子,猶達是約色夫的兒子,約色夫是約南的兒子,約南是厄耳雅金的兒子,
௩0லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன்.
31 厄耳雅金是默肋阿的兒子,默肋阿是門納的兒子,門納是瑪塔塔的兒子,瑪塔塔是納堂的兒子,納堂是達味的兒子,
௩௧எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
32 達味是葉瑟的兒子,葉瑟是敖貝得的兒子,敖貝得是波阿次的兒子,波阿次是撒拉的兒子,撒拉是納赫雄的兒子,
௩௨தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேத்தின் குமாரன்; ஓபேத் போவாஸின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
33 納赫雄是阿米納達的兒子,阿米納達是阿得明的兒子,阿得明是阿爾的兒子,是阿爾是赫茲龍的兒子,赫茲龍是培勒茲的兒子,培勒茲是猶大的兒子,
௩௩நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
34 猶大是雅各伯的兒子,雅各伯是依撒格的兒子,依撒格是亞巴郎的兒子,亞巴郎是特辣黑的兒子,特辣黑是納曷爾的兒子,
௩௪யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
35 納曷爾是色魯格的兒子,色魯格是勒伍的兒子,勒伍是培勒格的兒子,培勒格是厄貝爾的兒子,厄貝爾是舍拉的兒子,
௩௫நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
36 舍拉是刻南的兒子,刻南是阿帕革沙的兒子,阿帕革沙是閃的兒子,閃是諾厄的兒子,諾厄是拉默客的兒子,
௩௬சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
37 拉默客是默突舍拉的兒子,默突舍拉是哈諾客的兒子,哈諾客是耶勒得的兒子,耶勒得是瑪拉勒耳的兒子,瑪拉勒耳是刻南的兒子,
௩௭லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன்.
38 刻南是厄諾士的兒子,厄諾士是舍特的兒子,舍特是亞當的兒子,亞當是天主的兒子。
௩௮ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.

< 路加福音 3 >