< 士師記 17 >

1 厄弗辣因山地有一個人,名叫米加,
எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான்.
2 他對自己的母親說:「有人拿去你那一千一百銀錢,對這事你曾起過誓,我也親自聽見你說:我要親手把這項銀錢奉獻給上主,為我兒做一尊神像。看,銀錢在這裏,是握拿了;如今還給你! 」
அவன் தன்னுடைய தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த 1,100 வெள்ளிக்காசு திருட்டுபோனதே, அதைக்குறித்து என்னுடைய காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.
3 他的母親就說:「願我兒蒙上主祝福! 」於是米加就把一千一百銀錢還給他的母親。
அவன் அந்த 1,100 வெள்ளிக்காசைத் தன்னுடைய தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டாக்க, நான் என்னுடைய கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முழுவதும் யெகோவாக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.
4 當他把銀錢還給他的母親以後,她的母親便拿出兩百銀子給了銀匠,請他製造一尊神像,安放在米加的家裏。
அவன் அந்த வெள்ளியைத் தன்னுடைய தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் 200 வெள்ளிக்காசை எடுத்து, கொல்லன் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் செய்தான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.
5 於是米加為這尊神像蓋了一座神廟。又做了「厄弗得」和「忒辣芬,」委派自己的一個兒子充任司祭。
மீகா, சிலைகளுக்கு ஒரு வீட்டை அறையை ஏற்படுத்தி வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும், சிலைகளையும் உண்டாக்கி, தன்னுடைய மகன்களில் ஒருவனை அர்ப்பணம் செய்தான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.
6 當時在以色列沒有君王,各人任意行事。米加收肋未為司祭
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்துவந்தான்.
7 當時有一個少年,他是個肋未人,從猷大白冷,即從猷大支派來到那裏作客。
யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊர்க்காரனும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்;
8 這人離開猷大白冷,想找一個可寄居的地方;當他旅行的時候,來到厄弗辣因山地,米加的家旁,
அந்த மனிதன் எங்கேயாவது போய்த் தங்கும்படி, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பயணம்போகும்போது, எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.
9 米加問他說:「你從那裏來﹖」他回答說:「我是個肋未人,由猷大白冷來,想找一個可寄居的地方。」
எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாவது போய்த் தங்கப்போகிறேன் என்றான்.
10 米加就對他說:「你住在我這裏罷! 作我的師傅和司祭,我每年給你十塊銀錢,還照管你的吃穿。」米加挽留那肋未人,
௧0அப்பொழுது மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாக இருப்பாய்; நான் உனக்கு வருடத்திலே 10 வெள்ளிக்காசையும், மாற்று ஆடைகளையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான்.
11 他遂同意住在米加那裏,他看待這少年好似自己的兒子。
௧௧அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவனுடைய மகன்களில் ஒருவனைப்போல் இருந்தான்.
12 米加又委任了這肋未人,這人遂作了他的司祭,住在米加家中。
௧௨மீகா அந்த லேவியனைப் புனிதமான வேலைக்கு அர்ப்பணம் செய்தான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான்.
13 於是米加說:「如今我知道上主必施恩於我,因為有位肋未人作了我的司祭。」
௧௩அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், யெகோவா எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

< 士師記 17 >