< 約伯記 25 >

1 叔亞人彼耳達得發言說:
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
2 權能和威嚴為他所有,他在高天締造和平。
“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
3 他的隊伍,豈可勝數﹖他的光明升起,誰不蒙受照耀﹖
அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
4 人在天主面前,怎能自以為義﹖婦人所生的,怎能自稱潔淨﹖
இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
5 在他眼中,月亮都不明亮,星辰也不皎潔,
சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
6 何況像蟲的人,像蛆的人子!
புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.

< 約伯記 25 >