< 出埃及記 40 >

1 上主訓示梅瑟說:「
யெகோவா மோசேயை நோக்கி:
2 正月初一,你要豎立會幕的帳棚。
“நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசஸ்தலத்தை பிரதிஷ்டைசெய்.
3 把約櫃安放在裏面,用帷幔將約櫃遮起。
அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
4 把供桌搬進,擺上當供之物;把燈台搬進,安放上燈盞。
மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதை சரியாக வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
5 把焚香的金壇安放在約櫃前邊,懸上帳棚的門簾。
பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்தின் வாசலின் தொங்கு திரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
6 把全燔祭壇安置在會幕門口,
பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
7 把盆安置在會幕和祭壇之中,盆裏放上水。
தொட்டியை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றி,
8 隨後豎立庭院四周的帷幔,懸上庭院的門簾。
சுற்று பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
9 以後拿傅禮的油,給帳棚和其中的一切器具傅油,祝聖帳棚和其中的一切器具,使之成為聖物:
அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்செய்து, அதையும் அதிலுள்ள எல்லாப் பணிப்பொருட்களையும் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது பரிசுத்தமாக இருக்கும்.
10 即給全燔祭及其一切用具傅油,祝聖祭壇,使之成為至聖的;
௧0தகனபலிபீடத்தையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், அபிஷேகம்செய்து, அதைப் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாக இருக்கும்.
11 給盆和盆座傅油,使之成聖。
௧௧தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்து.
12 以後叫亞郎和他的兒子們來近會幕門口,用水洗他們。
௧௨பின்பு ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் வரச்செய்து, அவர்களை தண்ணீரால் குளிக்கவைத்து,
13 給亞郎穿上聖衣,給他傅油,祝聖他作我的司祭。
௧௩ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவனை அபிஷேகம்செய்து, அவனைப் பரிசுத்தப்படுத்து.
14 再叫他的兒子們前來,給他們穿上長衣,
௧௪அவன் மகன்களையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
15 像給他們的父親傅油一樣,也給他們傅油,叫他們作我的司祭。給他們行傅油禮,表示他們世世代代,永遠盡司祭之職。
௧௫அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்செய்தபடியே, அபிஷேகம்செய்; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நிரந்தர ஆசாரியத்துவத்திற்கு ஏதுவாக இருக்கும் என்றார்.
16 梅瑟行了一切;上主怎樣吩咐他的,他就怎樣作了。梅瑟遵從上主的吩咐
௧௬யெகோவா தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
17 於是第二年正月初一,帳棚就豎立起來了。
௧௭இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் நிறுவப்பட்டது.
18 梅瑟豎立了帳棚,安上卯座,放上木板,安上橫木,豎起柱子。
௧௮மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,
19 將幕頂展開放在帳棚上,將幕頂的罩放在上面,全照上主向梅瑟所吩咐的。
௧௯வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, யெகோவா தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.
20 隨後取了約版放在櫃內,櫃旁穿上杠桿,將贖罪蓋安在約櫃上面。
௨0பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,
21 將櫃抬到帳棚內,懸上帳幔,遮住約櫃,如上主向梅瑟所吩咐的。
௨௧பெட்டியை வாசஸ்தலத்திற்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.
22 以後把供桌放在會幕內,放在帳棚北邊,帳幔以外;
௨௨பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாகத் திரைக்குப் புறம்பாக வைத்து,
23 在桌上於上主前擺上供餅,如上主吩咐梅瑟的。
௨௩அதின்மேல் யெகோவாவுடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.
24 把燈台安置在會幕內,對著供桌,在帳棚南面。
௨௪பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,
25 在上主前放上燈盞,如上主向梅瑟所吩咐的。
௨௫யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
26 把金祭壇安置在會幕內,帳幔的前邊。
௨௬பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக்கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
27 在壇上燃燒馨香的香料,如上主向梅瑟所吩咐的。
௨௭அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான்.
28 又懸起帳幔的門簾。
௨௮பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
29 將全燔祭台安放在會幕門口,在上面奉獻全燔祭和素祭,如上主向梅瑟所吩咐的。
௨௯தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.
30 將盆安置在會幕和祭壇之中,盆內放了水,為洗濯之用。
௩0அவன் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.
31 梅瑟亞郎和他的兒子們在盆中洗腳。
௩௧அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.
32 他們進入會幕或接近祭壇時,必先洗濯,如上主向梅瑟所吩咐的。
௩௨யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே நுழைகிறபோதும், பலிபீடத்தினருகில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
33 隨後在帳棚和祭壇四周,豎立了庭院的帷幔,懸起了庭院的門簾:這樣梅瑟完成了所有的工程。上主的榮耀遮蓋會幕
௩௩பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றி பிராகாரத்தை அமைத்து, பிராகாரத்தின் தொங்கு திரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாக மோசே வேலையை முடித்தான்.
34 那時雲彩遮蓋了會幕,上主的榮耀充滿了帳棚。
௩௪அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது.
35 梅瑟不能進入會幕,因為雲彩停在上面,上主的榮耀充滿了帳棚。
௩௫மேகம் அதின்மேல் தங்கி, யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையமுடியாமல் இருந்தது.
36 在以色列子民整個的行程中,雲彩一從帳棚升起,他們就拔營前行;
௩௬வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யப் புறப்படுவார்கள்.
37 雲彩若不升起,他們就安營不動,直等雲彩升起。
௩௭மேகம் எழும்பாமல் இருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பயணம் செய்யாமல் இருப்பார்கள்.
38 在他們整個行程中,上主的雲彩白天停在帳棚上,黑夜在雲中有火,,以色列全家都能見到。
௩௮இஸ்ரவேல் மக்கள் செய்யும் எல்லாப் பயணங்களிலும் அவர்களெல்லோருடைய கண்களுக்கும் நேரடியாக பகலில் யெகோவாவுடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது.

< 出埃及記 40 >