< 歷代志下 29 >
1 [希則克雅登極]希則克雅登極時年二十五歲,在耶路撒冷作王凡二十九年;他的母親名叫阿彼雅,是則加黎雅的女兒。
௧எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அபியாள்.
2 希則克雅行了上主視為正義的事,完全像他的祖先達味所行的一樣。[清除聖殿]
௨அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.
3 他作王元年正月,開了上主殿宇的門,再加以修理;
௩அவன் தன் அரசாட்சியின் முதலாம் வருடம் முதலாம் மாதத்தில் யெகோவாவுடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
௪ஆசாரியர்களையும் லேவியர்களையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
5 對他們說:「肋未人,請聽我的話! 現在你們應自潔,好清除上主你們祖先的天主的殿宇,將聖所內的污穢之物除去。
௫அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்: நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, உங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்தைப் பரிசுத்தம்செய்து, அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.
6 因為我們的祖先犯了罪,行了上主我們的天主視為不悅的事,離棄了他,並轉臉不顧上主的居所,所以背相向;
௬நம்முடைய முன்னோர்கள் துரோகம்செய்து, நம்முடைய தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரைவிட்டு விலகி, தங்கள் முகங்களைக் யெகோவாவுடைய வாசஸ்தலத்தைவிட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள்.
7 又封閉了廊門,熄滅了燈,未在聖所內給以色列的天主焚香,獻全燔祭。
௭அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்கு சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.
8 因此,上主的盛怒降於猶大和耶路撒冷,使之成為恐懼、驚駭、恥笑的對象,正如你們親眼所見的。
௮ஆகையால் யெகோவாவுடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் பார்க்கிறபடி, துயரத்திற்கும், திகைப்பிற்கும், கேலிக்கும் ஒப்புக்கொடுத்தார்.
9 並且我們的祖先因此死於刀下,我們的妻子兒女作了俘虜。
௯இதினிமித்தம் நம்முடைய முன்னோர்கள் பட்டயத்தால் விழுந்து, நம்முடைய மகன்களும், மகள்களும், மனைவிகளும் சிறையிருப்பில் பிடிபட்டார்கள்.
10 現在,我有意與上主以色列的天主立約,使他的烈怒轉離我們。
௧0இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடு உடன்படிக்கைசெய்ய என் மனதிலே தீர்மானித்துக்கொண்டேன்.
11 我的孩子們! 現在不要再怠慢,因為上主揀選了你們侍立在他面前,為奉事他,向他焚香。」
௧௧என் மகன்களே, இப்பொழுது அசதியாக இருக்கவேண்டாம்; நீங்கள் யெகோவாவுக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியம்செய்கிறவர்களும் தூபம்காட்டுகிறவர்களுமாக இருக்கவும் உங்களை அவர் தெரிந்து கொண்டார் என்றான்.
12 於是肋未人起來:刻哈特族中有阿瑪賽的兒子瑪哈特和阿匝黎雅的兒子約厄耳;默辣黎族中有阿貝狄的兒子克士和雅肋肋耳的兒子阿匝黎雅;革爾雄族中有齊瑪的兒子約阿黑和約阿黑的兒子厄登;
௧௨அப்பொழுது கோகாத் வம்சத்தாரில் அமாசாயின் மகன் மாகாத்தும், அசரியாவின் மகன் யோவேலும், மெராரியின் வம்சத்தாரில் அப்தியின் மகன் கீசும், எகலேலின் மகன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் மகன் யோவாகும், யோவாகின் மகன் ஏதேனும்,
13 厄里匝番的子孫中有史默黎和耶烏耳;阿撒夫子孫中有則加黎雅和瑪塔尼雅;
௧௩எலிசாபான் வம்சத்தாரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் வம்சத்தாரில் சகரியாவும், மத்தனியாவும்,
14 赫曼子孫中有耶希耳和史米;耶杜通子孫中有舍瑪雅和烏齊耳,
௧௪ஏமானின் வம்சத்தாரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் வம்சத்தாரில் செமாயாவும், ஊசியேலும் என்னும் லேவியர்கள் எழும்பி,
15 他們集合自己的弟兄,先行自潔,後照君王的吩咐,根據上主的命令,來清除上主的殿。
௧௫தங்கள் சகோதரர்களைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்செய்துகொண்டு, யெகோவாவுடைய வசனங்களுக்கு ஏற்ற ராஜாவினுடைய கற்பனையின்படியே யெகோவாவுடைய ஆலயத்தை சுத்திகரிக்க வந்தார்கள்.
16 司祭進入上主的殿宇裏面去清除,將上主殿內所有的污穢之物,移到上主殿宇的院內;肋未人接過來,運到城外的克德龍溪。
௧௬ஆசாரியர்கள் யெகோவாவுடைய ஆலயத்தை சுத்திகரிப்பதற்காக உள்ளே பிரவேசித்து, யெகோவாவுடைய ஆலயத்தில் கண்ட அனைத்து அசுத்தத்தையும் வெளியே யெகோவாவுடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டு வந்தார்கள்; அப்பொழுது லேவியர்கள் அதை எடுத்து வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டு போனார்கள்.
17 他們在正月一日開始清除,第八天清除到上主的殿。正月十六日清除完畢。
௧௭முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம் செய்யத்தொடங்கி, எட்டாம் தேதியிலே யெகோவாவுடைய மண்டபத்திலே பிரவேசித்து, யெகோவாவுடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்செய்து, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.
18 於是他們去見希則克雅說:「我們已經將上主的殿宇、全燔祭壇、以及壇上所有的器具、供餅桌、以及桌上所有的用具,全部清潔了;
௧௮அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவிடம் போய்: நாங்கள் யெகோவாவின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதனுடைய அனைத்து தட்டுமுட்டுகளையும், சமுகத்து அப்பங்களின் மேஜையையும், அதின் அனைத்து தட்டுமுட்டுகளையும் தூய்மைப்படுத்தி,
19 並且連阿哈次王在位犯罪時,所丟棄的器具,我們都整理好,也都清潔了;現在都放在上主祭壇前面。」[獻祭贖罪]
௧௯ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதகத்தால் எறிந்துபோட்ட அனைத்து தட்டுமுட்டுகளையும் ஒழுங்குபடுத்திப் பரிசுத்தம்செய்தோம்; இதோ, அவைகள் யெகோவாவின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.
20 希則克雅清晨起來,召集城內的首領,上到上主殿內。
௨0அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலையிலேயே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, யெகோவாவின் ஆலயத்திற்குப் போனான்.
21 人們帶來了七隻牛犢,七隻公綿羊和七隻羔羊;此外,還有七隻公山羊,為國家,為聖殿,為猶大作為贖罪祭;王遂吩咐亞郎的子孫司祭奉獻在上主的祭壇上。
௨௧அப்பொழுது அரசாட்சிக்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் சந்ததியான மகன்களுக்குச் சொன்னான்.
22 祭殺了牛犢,司祭將血取來,灑在祭壇上;祭殺了綿羊,將血灑在祭壇上;祭殺了羔羊,也將血灑在祭壇上。
௨௨அப்படியே ஆசாரியர்கள் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்து பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்.
23 最後,將獻作贖罪祭的公山羊,牽到君王和會眾面前,他們將手按在公山羊身上,
௨௩பிறகு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.
24 司祭宰殺了,將血獻在祭壇上,作為贖罪祭,為以色列民眾贖罪,因為君王曾吩咐過:全燔祭和贖罪祭,應為以色列民眾奉獻。
௨௪இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர்கள் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பரிகாரம் செய்தார்கள்.
25 王又派定肋未人用鈸、瑟和琴,在上主殿內奏樂,有如達味、王的先見者加得和先知納堂所吩咐的,亦即上主藉先知所吩咐的。
௨௫அவன், தாவீதும், ராஜாவின் தரிசனம் காண்கிறவனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியர்களைக் யெகோவாவுடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படி செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது.
26 於是肋未人拿著達味的樂器,司祭拿著號筒,一起站著。
௨௬அப்படியே லேவியர்கள் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர்கள் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள்.
27 希則克雅遂下令在祭壇上奉獻全燔祭。全燔祭開始時,頌揚上主的歌聲和號聲,也在以色列王達味的樂器伴奏下,隨之開始。
௨௭அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அதை செலுத்த ஆரம்பித்த நேரத்தில் யெகோவாவை துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.
28 同時全會眾跪拜,唱歌的唱歌,吹號的吹號,這樣直到全燔祭獻完為止。
௨௮பாடலைப் பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கும்போது, சர்வாங்க தகனபலியைச் செலுத்தி முடியும்வரை சபையார் எல்லோரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.
29 獻完了祭,君王和所有同他自場的人,都屈膝跪拜。
௨௯பலியிட்டு முடிந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
30 此後,希則克雅王和眾首領,又吩咐肋未人用達味和先見者阿撒夫的詩詞,讚頌上主。他們便歡樂地讚頌了上主,隨即俯首朝拜。
௩0பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியர்களை நோக்கி: நீங்கள் தாவீதும் தரிசனம் காண்கிறவனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளால் யெகோவாவை துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடு துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
31 希則克雅又吩咐說:「你們既然奉獻了自己與上主,請近前來,將感恩祭祭物,送入上主殿內。」會眾便將感恩祭祭物,以及甘心獻的全燔祭獻上。
௩௧அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்செய்தீர்கள்; ஆகையால் அருகில் வந்து, யெகோவாவுடைய ஆலயத்திற்கு தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையாரில் விருப்பமுள்ளவர்கள் சர்வாங்க தகனபலிகளையும் மற்றவர்கள் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவந்தார்கள்.
32 會眾所獻的全燔祭犧牲總數為:牛犢七十隻,公山羊一百隻,羔羊二百隻,全獻給上主作全燔祭。
௩௨சபையார் கொண்டுவந்த சர்வாங்க தகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் யெகோவாவுக்கு சர்வாங்க தகனமாயின.
௩௩அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
34 由於司祭太少,不能剝盡全燔祭犧牲的皮,所以他們的弟兄肋未人前來協助,直到工作作完,直到司祭自潔完畢,因為肋未人自潔的誠心勝過司祭。
௩௪ஆனாலும் ஆசாரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவர்களால் அந்த சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாமலிருந்தது; அதனால் அந்த வேலை முடியும்வரைக்கும், மற்ற ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தம்செய்யும்வரைக்கும், அவர்களுடைய சகோதரர்களாகிய லேவியர்கள் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ள லேவியர்கள் ஆசாரியர்களைவிட மன உற்சாகமுள்ளவர்களாக இருந்தார்கள்.
35 此外,還有許多全燔祭、和平祭、脂油,及與全燔祭同奠的酒,等待處理。這樣,上主殿內的禮儀就全恢復了。
௩௫சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்கதகனங்களுக்குரிய பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இந்தவிதமாக யெகோவாவுடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம் செய்யப்பட்டது.
36 希則克雅和全民眾都很快樂,因為天主為人民準備,使此事迅速完成。
௩௬தேவன் மக்களை ஆயத்தப்படுத்தியதைக்குறித்து எசேக்கியாவும் மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்; இந்தக் காரியத்தை செய்வதற்கான யோசனை உடனடியாக உண்டானது.