< 帖撒羅尼迦前書 5 >

1 弟兄們;至論那時候與日期,不需要給你們寫什麼。
சகோதரர்களே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.
2 你們原確實知道,主的日子要像夜間盜賊來到。
இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.
3 幾時人正說:「平安無事,」那時滅亡會猝然來到他們身上,就像痛苦來到懷孕者身上一樣,決逃脫不了。
சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
4 但是你們,弟兄們,你們不是在黑暗中,以致那些日子像盜賊一樣襲擊你們;
சகோதரர்களே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளில் இருக்கிறவர்களில்லையே.
5 你們眾人都是光明之子和白日之子;我們不屬於黑夜,我們不屬於黑暗。
நீங்களெல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாக இருக்கிறீர்கள்; நாம் இரவிற்கும் இருளுக்கும் உரியவர்களல்ல.
6 所以我們不當像其他人一樣貪睡,卻當醒寤清醒,
ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம்.
7 因為人睡覺是黑夜睡覺,喝醉的人是黑夜喝醉;
தூங்குகிறவர்கள் இரவிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இரவிலே வெறிகொள்ளுவார்கள்.
8 但是我們做白日子之的應當清醒,穿上信德和愛德作甲,戴上得救的望德作盔,
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்புக்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம்.
9 因為天主沒有揀定我們為洩怒,而是藉我們的主耶穌基督為獲得拯救,
தேவன் நம்மைத் தண்டிப்பதற்காக நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
10 衪為我們死了,為叫我們不論醒寤或睡眠,都同衪一起生活。
௧0நாம் உயிரோடிருக்கிறவர்களானாலும், மரித்தவர்களானாலும், அவரோடு நாம் ஒன்றாகப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே.
11 為此,你們應互相安慰,彼此建樹,就如你們所行的。
௧௧ஆகவே, நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவளர்ச்சி உண்டாகும்படிச் செய்யுங்கள்.
12 弟兄們,我們還請求你們尊敬那些在你們中勞苦,在主內管理你們和勸戒你們的人,
௧௨அன்றியும், சகோதரர்களே, உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,
13 為了他們的工作,你們更因本著愛德,重視他們;你們要彼此平安相處。
௧௩அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாக நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாக இருங்கள்.
14 弟兄們,我們還規勸他們:要勸戒閒蕩的,寬慰怯懦的扶助軟弱的,容忍一切人。
௧௪மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள்.
15 要小心:人對人,不是以惡報惡,卻要時常彼此勉勵,互相善待,且善待一切人。
௧௫ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள்.
16 應常歡樂,
௧௬எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்.
17 不斷禱告,
௧௭இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள்.
18 事事感謝:這就是天主在基督耶穌內對你們所有的旨意。
௧௮எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
19 不要消滅神恩,
௧௯ஆவியை அவித்துப்போடாமலிருங்கள்.
20 不要輕視先知之恩;
௨0தீர்க்கதரிசனங்களை சாதாரணமாக எண்ணாதிருங்கள்.
21 但應考驗一切,好的,應保持,
௨௧எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
22 各種壞的,要遠避。
௨௨தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள்.
23 願賜平安的天主親自全化聖你們,將你們整個的神魂、靈魂和肉身,在我們的主耶穌基督來臨時,保持的無瑕可指:
௨௩சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
24 召你們的是忠信的,衪必實行。
௨௪உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
25 弟兄們,你們也要為我們祈禱。
௨௫சகோதரர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
26 你們要以聖吻問候所有的弟兄。
௨௬சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
27 我因主誓求你們,向眾弟兄朗誦這封書信。
௨௭இந்தக் கடிதம் பரிசுத்தமான சகோதரர்கள் எல்லோருக்கும் வாசிக்கப்படவேண்டுமென்று கர்த்தரின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28 我們的主耶穌基督的恩寵與你們同在。
௨௮நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

< 帖撒羅尼迦前書 5 >