< 撒母耳記上 29 >

1 培肋舍特人將軍隊全調集在阿費克,同時以色列人在依次勒耳附近的泉旁紮營。
பெலிஸ்தர்கள் தங்கள் இராணுவங்ளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் யெஸ்ரயேலிலிருக்கிற நீரூற்றின் அருகே முகாமிட்டார்கள்.
2 培肋舍特的莤長,有領一百人的,也有領一千人的,列陣在前;達味帶領自己的人同阿基士列陣在後。
அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள் நூறும் ஆயிரமுமான படைகளோடு போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் ஆகீசோடே பின் சென்றார்கள்.
3 培肋舍特人的將領說:「這些希伯來人作什麼﹖」阿基士回答培肋舍特人的將領說:「他不是以色列王撒烏耳的臣僕達味嗎﹖他已同我在一起有一二年了,從他歸順我那一天起,他已在他身上從未發現什麼過錯」。
அப்பொழுது பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: இந்த எபிரெயர்கள் எதற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருடங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.
4 培肋舍特將領向他大發憤怒說:「把這人打發回去,回到你給他指定的地方去,不要讓他同我們一起下去打仗,免得他他在戰爭中作出賣我們的細,他不借用我們這些人的頭,怎能獲得他主人的歡心﹖
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனிதன் நீர் குறித்த தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போகும்படி, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்கு எதிரியாய் மாறாதபடி, இவன் நம்மோடு யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனிதர்களுடைய தலைகளினால் அல்லவா?
5 人在舞蹈時歌詠說:「『撒烏耳殺了一千,達味殺了一萬』,不就是這達味嗎﹖」
சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று இந்த தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
6 阿基士就將艮召來,向他說:「願永生的天作證:你是可靠的人,你同我在軍中出入,我很滿意,因為自你投奔我那一天起,我在你身上並沒有發現什麼可指摘之事;但是莤長們不喜歡你。
அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ முகாமில் என்னோடே போக்கும் வரத்துமாக இருக்கிறது என்னுடைய பார்வைக்கு நல்லது என்றும், யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரை நான் உன்னில் ஒரு தீங்கும் காணவில்லை; ஆனாலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.
7 現今你回去,平安去吧! 免得培肋舍特人的茜長們厭惡」。
ஆகையால் பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் உன்மேல் சங்கடம் அடையாதபடி, இப்போது சமாதானத்தோடு திரும்பிப் போய்விடு என்றான்.
8 達味回答阿基士說:「我作了什麼不對﹖或是自我來服你那一天起,直到今日,你在你僕人人身上發現了什麼不對,竟不肯讓我同我大王的敵人交戰﹖」
தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய எதிரிகளோடு யுத்தம்செய்யாதபடி, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதல் இன்றுவரை உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.
9 阿基士回答達味說:「我知道你在我眼中,好像一位天主的使者,但培肋舍特的將領說:不許他同我們一起作戰!
ஆகீஸ் தாவீதுக்குப் பதிலாக: நான் அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என்னுடைய பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடு யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தர்களின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.
10 明早起來,你同你一起來的你主人的僕人,都往我給你指定的地方去,心中不要抱怨,我是喜歡你的,所以明天,天一亮,你們就動身回去吧! 」
௧0இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடு வந்த உன்னுடைய ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலை வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.
11 於是達味和他的人清早就起身,回培肋舍特地方去了。培肋舍特人上了依次勒耳。
௧௧அப்படியே தாவீது அதிகாலையில் தன்னுடைய மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தர்களின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோ யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

< 撒母耳記上 29 >