< Matthew 16 >
1 Pharisee te Sadducee te pawlkhat taw Jesus kung ah hongpai uh a, maw a zon nop uh man in tungsang musakna laksak hi.
௧பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
2 Jesus in amate tung ah, Nitak sang in van hong san le, khuapha tu hi.
௨அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.
3 Taciang zingsang ciang in, van hong san in khua hong niim le khuasia tu hi, ci nu hi. Maw no a ki hitheamsak te, van en in khuahun omdan tu telthei napi, hun le ni i musakna te telthei ngawl nu ziam?
௩உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
4 Mi ngilo le tatsia tate in musakna zong napi; kamsang Jonah musakna simngawl a dang ki pia ngawl tu hi, ci in zo kik hi. Tua zawkciang amate nusia in paisan hi.
௪இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
5 Nungzuite ngalkhat ah hong thet uh ciang, anluum ken tu mangil uh hi.
௫அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
6 Taciang in Jesus in, Pharisee te le Sadducee te i tol pan in kidawm tavun, ci hi.
௬இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.
7 Amate in anluum i ken ngawl hang hi, ci in amate kikum uh hi.
௭நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
8 Tua thu Jesus in a heak ciang in, Maw no upna no te, anluum na ken ngawl uh hang hi, ci in banghang in kikum nu ziam?
௮இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
9 Anlum nga sia mihing tul nga in a neak zawkciang a val bawm bangza tawm nu ziam, ci he ngawl nu ziam?
௯இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
10 Anlum sali mihing tul li in a neakzawkciang, a val bawm bangza tawm kik, ci sia phawk nawn ngawl nu ziam?
௧0ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
11 Pharisee le Saducee te tol kidawm vun kong ci ciang, anluum thu ka son nop na hi ngawl hi, ci banghang in tel thei ngawl nu ziam? ci hi.
௧௧பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
12 Tasiaciang a nungzui te in, anluum sung a tol kidawm tu a cinopna hi ngawl a, Pharisee le Saducee te hilna hi zaw, ci sia tel kik hi.
௧௨அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
13 Jesus in Ceasaria Philippi khua kiim a thet uh ciang, a nungzui te kung ah, Ngual in mihing Tapa sia kua hong ci uh ziam? ci in dong hi.
௧௩பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14 Amate in, pawlkhat te in tuiphumpa John: pawlkhat te in Elijah; pawlkhat te in Jeremiah, a hibale kamsang khat papo, hong ci hi, ci uh hi.
௧௪அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
15 Jesus in, No ma na e, keima sia kua hi nong ci uh ziam? ci in dong hi.
௧௫அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
16 Simon Peter in zo a, Nangma sia a nungta Pathian Tapa, Christ na hihi, ci hi.
௧௬சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
17 Tasiaciang Jesus in, Jonah tapa Simon awng, thuphatoai na hihi: banghangziam cile, hi thu sia mihing cile sa le thisan in hong hesak thei ngawl hi, vantung a om Ka Pa in hong hesak hi.
௧௭இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
18 Keima in kong son hi, nang sia Peter ni hi, hi suangpi tung ah ka pawlpi ka phut tu hi; taciang hell ngam kongpi te in a zo zo batu hi. (Hadēs )
௧௮மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs )
19 Vantung kumpingam tawtang te kong pia tu hi: leitung ah na hen theampo vantung ah zong ki hen tu hi: leitung ah na tha theampo vantung ah zong ki tha tu hi, ci hi.
௧௯பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
20 Ama sia Christ kici Jesus a hi na sia kuama a son ngawl natu in nungzui te vaitha hi.
௨0அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
21 Tua hun panin, Jesus in a nungzui te tung ah, Jerusalem a pai natu thu, ulian te, thiampi lian te le thukhamhil te hang in a thuak tu tampi te le ki that tu a, ni thum ni ciang a thawkik natu thu te son kipan hi.
௨௧அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
22 Tasiaciang Peter in Jesus sia samtuam in tei hi, Topa awng, hi thu sia nangma taw ki khuala tahen a: na tung ah hong theng heak tahen, ci hi.
௨௨அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
23 Ahihang Jesus in le-et in, Peter kung ah, Satan, nang ka nung ah om in, kei hong khak in hongliksak na hihi: banghangziam cile Pathian thu sang in, mihing te thu kinzaw ni hi, ci hi.
௨௩அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
24 Tua zawkciang Jesus in a nungzui te kung ah, A kuamapo ka nung hong zui nuam peuma, ama le ama ki nial hen a, ama thinglamte pua in, hong zui tahen.
௨௪அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.
25 Banghangziam cile, kuamapo in, ama nuntakna a hun nuam sia sum tu a: keima atu in a nuntakna a sum peuma nuntakna mu tu hi.
௨௫தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
26 Mihing khat in leitung theampo a nga zong in, a tha nuntakna a sum le bang phattuamna om ziam? mihing in a tha nuntakna bang taw theak thei tu ziam?
௨௬மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
27 Mihing Tapa sia a Pa vangletna le Ama vantungmi te taw hongpai tu a; khatsim i a sep bang tek in thaman pia tu hi.
௨௭மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
28 A tatak kong ci ciang, hi lai ah a om pawlkhat te, mihing Tapa Ama kumpingam sung ah hongpaikik na mu uh dong thina a tep ngawl tu te omhi, ci hi.
௨௮இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.