< Awicyih 18 >
1 Thlang mi haiben ham ak maa ak thlang ing amah ak kawngaih kawi sui nawh, cyihnaak ak thyym boeih ce thaih boeih hy.
௧பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.
2 Thlakcyi ing cyihnaak awh am zeel nawh, amah kawpoek ngaihnaak doengawh awmhly hy.
௨மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
3 Thekhanaak a awmnaak awh hepnaak awm nawh, ming seetnaak a awmnawh awh chahphyinaak awm hy.
௩துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.
4 Thlang am kha awhkawng ak cawn awi taw tui amyihna dung nawh, cehlai cyihnaak taw tuihamyihna phyt hy.
௪மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்.
5 Laitlyknaak awh thlakdyng thawlh lu khqoeh sak hamna, ak bo mikhai toek am leek hy.
௫வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல.
6 Thlakqaw am kha ing thlang hqo pe nawh, am lai ing khqah qunaak khy hy.
௬மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்.
7 Thlakqaw am kha taw a qeengnaak kawina awm nawh, a huui taw a hqingnaak ham thaangna awm hy.
௭மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி.
8 Theet awi ve buh tui ant tui amyihna thlang kawlung a dungnaak dy lut hy.
௮கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.
9 Bibi ak vaatsam thlang taw ak hqeekung ciingnapaca na awm hy.
௯தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.
10 Bawipa ming taw zingnaak vawngchung na awm nawh, thlakdyng ing zing na nawh a loetnaak ni.
௧0யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.
11 Mangpa ham a khawhkham taw ang zingnaak na awm nawh, amah ak poeknaak awh vawngchung ak sang soeih na ngai hy.
௧௧செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.
12 Thlang kawlung ak oe qu ing thihnaak lam benna mang nawh, kawlung neemnaak ingtaw kyihcahnaak benna ni.
௧௨அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
13 Ngaih zaak qu kaana thlak awi thuung maa taw qawnaak ingkaw chahphyihnaak ni.
௧௩காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.
14 Thlang a tloh awh kawlung ing am thin cak sak hy, cehlai kawlung ak tlo ingtaw ikawmyihna ang yh hly thai pai?
௧௪மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?
15 Ak zaaksimthai lingbyi ing zaaksimnaak thai ta nawh, thlakcyi ang haa ing simthainaak sui khawi hy.
௧௫புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.
16 Thlang a kutdo ing a lam khui sak nawh, boei a haina ceh pyi hy.
௧௬ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
17 Ak cangnaak lammaana ak kqawn ing thlakdyng amyihna dang seiawm, a imceng ing law nawh, awi suu tlaih nawh pho khawi hy.
௧௭தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.
18 Cung zyknaak ing awi dip sak nawh, ak tlung qawi awm hqaa sak qawi hy.
௧௮சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும்.
19 Amamik qoep cingnapaca taw khawk chungnaak vawng ak cak lakawh kyi ngai nawh, awipungnaak taw qal tlung a awmnaak vawng chawh ing myih hy.
௧௯பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும்.
20 Thlang ing am lai thaih ai nawh ak phyn phyi sak nawh; a hui am lai phu ing ak kaw qeep sak hy.
௨0அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
21 Thlang am laiawh thihnaak ingkaw hqingnaak awm nawh, ak lungnaak thlang ing ak thaih qah ce ai kaw.
௨௧மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள்.
22 Zu ak lo taw theem leek ak hu thlang ni, Khawsa venna kaw kawzeelnaak hu hy.
௨௨மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
23 Thlang khawdeng ing qeennaak thoeh nawh, mang ingtaw a tlung doena thlang voem hy.
௨௩தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான்.
24 Pyi khawzah taak taw plam thamnaak ni, cehlai cingna anglakawh lungnaak ak tlo ngai pyi awm hy.
௨௪நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.