< Hosea 5 >
1 Khosoih rhoek he he ya uh lamtah Israel imkhui loh hnatung uh. Manghai imkhui long khawhnakaeng laeh. Mizpah ah pael la na om uh tih Tabor ah lawk na phuel dongah nangmih ham laitloeknah om.
௧ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
2 Boekoek ngawnnah dongah muelh uh tih te boeih te kai loh thuituennah ka khueh.
௨நெறிதவறினவர்கள் அதிகமாக வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லோரையும் நான் தண்டிப்பேன்.
3 Ephraim khaw ka ming tih Israel khaw kai lamloh a thuh thai moenih. Ephraim loh na cukhalh neh Israel a poeih coeng.
௩எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ வழிவிலகிப்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
4 A Pathen taengla mael ham khaw a khoboe te a voeih uh moenih. Pumyoihnah mueihla loh amih kotak ah om tih BOEIPA te ming uh pawh.
௪அவர்கள் தங்கள் தேவனிடத்திற்குத் திரும்புவதற்குத் தங்கள் செயல்களை சரிசெய்யமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; யெகோவாவை அறியார்கள்.
5 A maelhmai ah Israel kah hoemdamnah a doo dongah Israel neh Ephraim khaw amamih kathaesainah dongah paloe uh. Te vaengah amih taengkah Judah khaw paloe.
௫இஸ்ரவேலின் அகந்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறி விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறி விழுவான்.
6 A boiva neh, a saelhung neh BOEIPA tlap hamla cet uh dae amih lamloh a khoe uh coeng dongah hmu uh mahpawh.
௬அவர்கள் யெகோவாவை தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
7 Halh ca a cun uh tih BOEIPA taengah hnukpoh uh dongah amih te hlasae neh a khoyo a yoop pah pawn ni.
௭யெகோவாவுக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்திற்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே அழிக்கப்படுவார்கள்.
8 Gibeah ah tuki neh Ramah ah olueng ueng uh. Benjamin nang hnukah Bethaven yuhui saeh.
௮கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள்.
9 A cak la ka ming dongah Israel koca taengkah toelthamnah hnin ah Ephraim khaw imsuep la om ni.
௯தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாக வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன்.
10 Judah mangpa rhoek he rhi rhawt la a om uh dongah ka thinpom he tui bangla amih soah ka hawk ni.
௧0யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் கடுங்கோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன்.
11 Olrhi hnukah pongpa ham mulmet tih laitloeknah aka phop Ephraim te a hnaemtaek coeng.
௧௧எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்கி, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.
12 Te dongah kai he Ephraim taengah bungbo bangla, Judah imkhui ham keet la ka tlung pah ni.
௧௨நான் எப்பிராயீமுக்குப் பூச்சி அரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டிற்கு உளுப்பைப்போலவும் இருப்பேன்.
13 Ephraim loh amah kah tlohtat, Judah loh amah kah a hma te a hmuh vaengah Ephraim te Assyria la cet tih manghai Jareb te a tah. Tedae anih loh nangmih te hoeih sak ham noeng pawt tih nangmih kah a hma te a toi moenih.
௧௩எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனிடம் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் முடியாமற்போனது.
14 Kai he Ephraim taengah sathuengca la, Judah imkhui taengah sathueng la ka poeh pah. Kai loh ka baeh vetih ka cet ni. Ka khuen vaengah khaw huul uh mahpawh.
௧௪நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே காயப்படுத்திவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டு போவேன்.
15 A boe nah rhi ah ni kamah hmuen la ka cet vetih ka mael eh. Amamih kah rhal khuiah ni ka maelhmai a tlap uh vetih kai n'toem uh eh.
௧௫அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடும்வரை நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாகத் தேடுவார்கள்.