< Galati 5 >
1 Mamih kah poenghalnah ham Khrih loh n'loeih sak dongah khak pai lamtah sal kah hnamkun te koep ngai boeh.
௧ஆனபடியால், நீங்கள் மீண்டும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குக் கீழாகாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுதந்திர நிலைமையிலே நிலைத்திருங்கள்.
2 Kai, Paul loh nangmih taengah, “Yahvin na rhet uh pueng atah Khrih he nangmih ham a phu om mahpawh,” ka ti coeng he.
௨இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது, என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
3 Te phoeiah yahvin aka rhet hlang boeih tah olkhueng te boeih vai ham laiba om tila koep ka laipai.
௩மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனிதனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்று மீண்டும் அப்படிப்பட்டவனுக்கு உறுதியாக அறிவிக்கிறேன்.
4 Khrih lamkah naka nong tih olkhueng neh aka tang long tah lungvatnah na hlong coeng.
௪நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்தீர்கள்.
5 Mamih loh duengnah dongkah ngaiuepnah te tangnah mueihla neh n'lamtawn uh.
௫நாங்களோ நீதிகிடைக்கும் என்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
6 Te dongah Jesuh Khrih ah yahvinrhet khaw tloe pawh, pumdul khaw pakhat pataeng a tloe moenih. Tedae tangnah tah lungnah dongah pongthoo ta.
௬கிறிஸ்து இயேசுவிடம் விருத்தசேதனமும், விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் செய்கைகளைச் செய்கிற விசுவாசமே உதவும்.
7 Balh na yong uh tih oltak te ngaitang pawt ham unim nangmih aka mah.
௭நீங்கள் நன்றாக ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
8 Hloihhlamnah tah nangmih aka khue taeng lamkah moenih.
௮இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை.
9 Tolrhu thamap ca vaidam hlom boeih a rhoi sak.
௯புளிப்பான கொஞ்சம் மாவு பிசைந்த மாவு அனைத்தையும் உப்பப்பண்ணும்.
10 Kai loh Boeipa dongah nangmih kan pangtung thil te a tloe la poek uh boeh. Tedae nangmih aka hinghuen tah u khaw om mai saeh laitloeknah a phueih bitni.
௧0நீங்கள் வேறுவிதமாகச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாக இருக்கிறேன்; உங்களைக் குழப்புகிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தனக்குரிய தண்டனையை அடைவான்.
11 Tedae ka manuca rhoek aw, yahvinrhetnah ka hoe pueng atah balae tih vawk n'hnaemtaek. Te dongah thangkui long tah thinglam dongkah ni a hmil.
௧௧சகோதரர்களே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் எதற்காகத் துன்பப்படுகிறேன்? அப்படியென்றால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
12 Nangmih aka palet rhoek tah hlueng pataeng ka ngaih.
௧௨உங்களைக் குழப்புகிறவர்கள் உங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டால் நலமாக இருக்கும்.
13 Te dongah manuca rhoek, poenghalnah khuila nangmih n'khue. Tedae rhoidoengnah he pumsa rhoidoengnah dawk ham moenih ta. Lungnah lamloh khat neh khat salbi uh.
௧௩சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுதந்திரத்தை நீங்கள் சரீரத்திற்கேதுவாக அநுசரிக்காமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள்.
14 Olkhueng boeih he ol pakhat dongah soep coeng. Te khuiah, “Na imben te namah bangla lungnah,” a ti.
௧௪உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
15 Tedae khat neh khat na nget uh tih na yoop uh thae atah ana noek uh, khat khat neh na hlawp uh thae mahpawt nim.
௧௫நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குவீர்கள் என்றால் அழிவீர்கள், அப்படி ஒருவரால் ஒருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
16 Te phoeiah Mueihla neh pongpa uh lamtah pumsa hoehhamnah te hoem uh loengloeng boeh ka ti.
௧௬பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், ஆவியானவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது சரீர இச்சையை நிறைவேற்றாமல் இருப்பீர்கள்.
17 Pumsa ngaih loh mueihla te a koek tih Mueihla loh pumsa te a koek. Te tah khat neh khat kingkalh uh. Te dongah na ngaih pawt te na saii uh.
௧௭சரீர இச்சை ஆவியானவருக்கு எதிராக செயல்படுகிறது. ஆவியானவர் சரீர இச்சைக்கு எதிராக செயல்படுகிறார்; நீங்கள் செய்யவேண்டியவைகளைச் செய்யாதபடி, இவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கிறது.
18 Tedae Mueihla loh m'mawt atah olkhueng hmuiah na om uh pawh.
௧௮ஆவியானவரால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் இல்லை.
19 Pumsa kah khoboe tah mingpha la om coeng. Te rhoek tah Cukhalnah, rhongingnah, omthenbawn,
௧௯சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20 Mueibawknah, rhunsi khuehnah, thunkhanah, tohhaemnah, kohlopnah, thinsanah, koevoeinah, paekboenah, buhlaelh,
௨0விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21 uethnetnah, rhuihahnah, omngaihlawn he ni. Hekah phek la om. Tekah te thui tangtae bangla te bang kho aka boe rhoek loh Pathen kah ram pang mahpawh tila nangmih taengah ka thui.
௨௧பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என்று முன்னமே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22 Tedae Mueihla kah a thaih tah lungnah, omngaihnah, rhoepnah, thinsennah, rhennah, boethennah, tangnah,
௨௨ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
23 muelhtuetnah, kuemsuemnah ni. Tebang te olkhueng loh a kingkalh om pawh.
௨௩சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை.
24 Tedae Jesuh Khrih kah rhoek long tah pumsa patangnah neh hoehhamnah te hmaih a tai coeng.
௨௪கிறிஸ்துவினுடையவர்கள் தங்களுடைய சரீரத்தையும் அதின் ஆசைகளையும் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
25 Mueihla neh n'hing uh atah Mueihla lamloh m'vai uh van ni.
௨௫நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம்.
26 Hoemdawk la khat neh khat takloh neh, khat neh khat uethnet neh om uh boel sih.
௨௬வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருப்போம்.