< Esther 5 >

1 Ni thumto naah, Esther loe siangpahrang zu khukbuen hoiah amthoep moe, siangpahrang imthung longhma, siangpahrang hmaa ah angdoet; to naah siangpahrang loe angmah ih angraeng tangkhang pongah anghnut, imthung akunhaih thok bangah anghae.
மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜஉடை அணிந்துகொண்டு, ராஜ அரண்மனையின் உள்முற்றத்தில், ராஜா இருக்கும் இடத்திற்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரண்மனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் சிங்காசனத்திலே அமர்ந்திருந்தான்.
2 Siangpahrang mah a im longhmaa ah angdoe a zu Esther to hnuk naah, mikhmai pan moe, a ban ih sui cunghet to kalah bangah paqoi ving; Esther loe anih taengah anghnaih moe, sui cunghet tadong to sui pae.
ராஜா ராணியாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவனுடைய கண்களில் தயவு கிடைத்ததால், ராஜா தன்னுடைய கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் அருகே வந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
3 Siangpahrang mah, siangpahrang zu Esther, Timaw hnik han na koeh? Ka prae ahap mataeng doeh kang paek han, tiah a naa.
ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராணியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.
4 To pongah Esther mah, Siangpahrang koehhaih baktiah ka oh nahaeloe, vaihniah nang han ka sak ih poihkung ah Haman hoi nawnto angzo ah, tiah a naa.
அப்பொழுது எஸ்தர்: ராஜாவிற்கு விருப்பமானால், நான் தங்களுக்குச் செய்த விருந்திற்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.
5 Esther mah hnik ih baktih toengah sak hanah, Siangpahrang mah Haman to karangah kawk hanah lok a paek. To pongah siangpahrang hoi Haman loe Esther mah sak ih buhraenghaih poihkung ah caeh hoi.
அப்பொழுது ராஜா எஸ்தர் சொன்னபடியே செய்ய, ஆமானை விரைவாக வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்திற்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.
6 Misurtui naek o nathuem ah, siangpahrang mah Esther to lokdueng let, Tih tahmenhaih maw nang hnik? Kang paek han; timaw nang hnik? Ka prae ahap mataeng doeh kang paek han, tiah a naa.
விருந்திலே திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரைப் பார்த்து: உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.
7 Esther mah, Tahmen kang hnik ih hmuen loe hae tiah oh;
அதற்கு எஸ்தர் மறுமொழியாக:
8 siangpahrang mikcuk naakrak ah ka oh moe, tahmen kang hnikhaih hoi kang hnik ih hmuen siangpahrang mah akoepsak hanah na koeh nahaeloe, khawnbang ka sak han ih buhraenghaih poihkung ah Haman hoi nawnto nang zoh ah; to naah ni siangpahrang mah dueng ih lok to ka thuih han vop, tiah a naa.
ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, என்னுடைய வேண்டுதலைக் கட்டளையிடவும், என்னுடைய விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவிற்குச் விருப்பமாக இருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்திற்கு வரவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுதலும் என்னுடைய விண்ணப்பமுமாக இருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.
9 To pacoengah Haman loe anghoehaih hoi poeknawmhaih hoiah caeh; toe siangpahrang ih khongkha ah, anih azat paek hanah angdoe ai, anih khingyahaih tawn ai Mordekai to a hnuk naah, Mordekai nuiah paroeai palungphui.
அன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுடனும் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற மொர்தெகாய் தனக்கு முன்பு எழுந்திருக்காமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் கடுங்கோபம் அடைந்தவனானான்.
10 Toe Haman loe angsum moe, imthung ah caeh; angmah ih ampuinawk hoi a zu Zeresh to a kawk.
௧0ஆனாலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, தன்னுடைய நண்பர்களையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,
11 Nihcae khaeah a tawnh ih hmuenmae kawng, kapop parai a caanawk kawng, siangpahrang mah kalah siangpahrang ih angraengnawk hoi anih ih tamnanawk pongah, anih hanah kasang araengh paekhaih kawngnawk to a thuih.
௧௧தன்னுடைய ஐசுவரியத்தின் மகிமையையும், தன்னுடைய பிள்ளைகளின் எண்ணிக்கையையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் வேலைக்காரர்கள்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.
12 To pacoengah Haman mah, Ue, siangpahrang zu Esther mah buhraenghaih sak ih poihkung ah siangpahrang hoi kai khue ni ang pacae; khawnbang doeh siangpahrang hoi nawnto caeh hanah ang pacae bae vop.
௧௨பின்னும் ஆமான்: ராணியாகிய எஸ்தரும் தான் செய்த விருந்திற்கு ராஜாவுடன் என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடன் நான் விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்.
13 Toe siangpahrang ih khongkha toep, Judah kami Mordekai ka hnuk naah poek ka nawm thai ai, tiah a naa.
௧௩ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணும்போது அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்றான்.
14 A zu Zeresh hoi ampuinawk boih mah anih khaeah, Dong quipangato kasang tung to sah ah loe, to tung pongah Mordekai to bangh hanah, khawnbangah siangpahrang to dueng ah; to pacoengah siangpahrang hoi nawnto poihkung ah caeh ah loe nawm hoi ah, tiah a naa o. To tiah thuih ih lok mah Haman to poeknawmsak moe, tung to a saksak.
௧௪அப்பொழுது அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவிற்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாக ராஜாவுடன் விருந்திற்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாகத் தெரிந்ததால் தூக்குமரத்தைச் செய்தான்.

< Esther 5 >