< 1 Thesalonika 2 >
1 Nawkamyanawk, nangcae khaeah kang zoh o haih hae, azom na ai ni, tiah na panoek o:
௧சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது பிரயோஜனமில்லாததாக இருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.
2 na panoek o baktih toengah, kaicae loe Filipi ah ang pacaekthlaek o moe, azat kaom ah ang sak o, toe paroeai angaekhaih hoiah nangcae khaeah kahoih tamthanglok to Sithaw ah misahoihaih hoiah ka thuih o thaih.
௨உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிப்பட்டணத்திலே நாங்கள் பாடுகள்பட்டு நிந்தையடைந்திருந்தும், மிகுந்த போராட்டத்தோடு தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.
3 Kaicae loe sakpazaehaih, ciimcai ai ah toksakhaih hoi alinghaih hoiah nangcae to tha kang paek o ai:
௩எங்களுடைய போதகம் வஞ்சகத்தினாலும் தவறான விருப்பத்தினாலும் உண்டாகவில்லை, அது தந்திரமுள்ளதாகவும் இருக்கவில்லை.
4 tamthanglok hoih pakuem hanah oepthok kami ah Sithaw mah tapom baktih toengah, kami koehhaih baktih na ai ah, Sithaw koehhaih baktiah ni ka thuih o.
௪தேவன் எங்களை நேர்மையானவர்கள் என்று நம்பி நற்செய்தியை எங்களிடம் ஒப்புவித்தார். நாங்கள் மனிதர்களுக்கு அல்ல, எங்களுடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
5 Na panoek o baktih toengah, kaicae loe amoekhaih lok ka thui o ai, kamthlai koeh hmoekhaih lok doeh ka thui o vai ai, tito Sithaw mah panoek:
௫உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருபோதும் முகத்துதியான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாக மாயம்பண்ணவும் இல்லை; தேவனே சாட்சி.
6 Kri mah patoeh ih kami ah ka oh o pongah, thoemto nangcae hanah loe hmuenzit ah doeh ka oh o thaih, toe kami pakoehhaih to ka pakrong o ai, nangcae mah pakoehhaih doeh ka pakrong o ai, kalah kaminawk mah pakoehhaih doeh ka pkrong o ai.
௬நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
7 Amno mah a caanawk pacah baktih toengah, nangcae salakah ka oh o naah, poeknaemhaih hoiah ni kho ka sak o:
௭பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்;
8 kang palung o parai pongah, Sithaw ih tamthanglok hoih thuih han ih khue na ai ah, nangcae palung kang nat o haih pongah, hinghaih paek han khoek to mataeng doeh ka koeh o.
௮நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம்.
9 Nang panoek o baktih toengah, nawkamyanawk, kaicae loe angpho qawthaih hoiah ni tok ka sak o: nangcae raihaih paek han ai ah aqum athun tok ka sak o moe, nangcae khaeah kahoih Sithaw tamthanglok to kang thuih o.
௯சகோதரர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம்.
10 Nang panoek o baktih toengah, nangcae tangcaanawk khaeah loe, coek koi kaom ai ciimhaih hoi toenghaih hoiah ni kho ka sak o, tito Sithaw mah doeh panoek:
௧0விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
11 ampa mah a caanawk khaeah sak ih baktih toengah, nangcae boih khaeah kawbangmaw thapaekhaih hoi monghaih lok kang thuih o, tito na panoek o,
௧௧மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக நடக்கவேண்டுமென்று,
12 Siangpahrang ah a uk ih prae hoi lensawkhaih thungah nangcae kawkkung, Sithaw mikcuk naakrak ah kho na sak o thai hanah lok kang thuih o.
௧௨தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும், பாராட்டுதலும், எச்சரிப்புமாகச் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
13 Kaicae khae hoi Sithaw lok na thaih o naah, kaminawk ih lok baktiah na talawk o ai, loktang, Sithaw ih lok baktiah ni na talawk o, nangcae tangcaanawk salakah tok ka sak o pongah, Sithaw khaeah boeng ai ah anghoehaih lawk ka thuih o.
௧௩ஆகவே, நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனித வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனம்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனாக இருக்கிறது.
14 Nawkamyanawk, nangcae loe Judah prae ah Kri Jesu to talawk moe, Sithaw hnukbang kricaabunawk mah, Judah kaminawk khae hoi pacaekthlaekhaih tongh o baktih toengah, nangcae doeh nangmacae kaminawk khae hoi ih pacaekthlaekhaih to na tongh o toeng:
௧௪எப்படியென்றால், சகோதரர்களே, யூதேயா நாட்டில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதர்களாலே எப்படிப் பாடுகள்பட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்களுடைய சொந்த மக்களாலே பாடுகள்பட்டீர்கள்.
15 Judahnawk mah Angraeng Jesu Kri hoi angmacae ih tahmaanawk to hum o, kaicae doeh ang pacaekthlaek o; nihcae mah Sithaw palung anghoe o sak thai ai, nihcae loe kami boih ih misa ah oh o:
௧௫அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்களுடைய தீர்க்கதரிசிகளையும், கொலை செய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும், மனிதர்கள் அனைவருக்கும் விரோதிகளுமாக இருந்து,
16 Gentelnawk mah pahlonghaih hnu o moeng tih, tiah a poek o pongah nihcae khaeah kahoih tamthanglok taphong hanah kaicae to ang pakaa o, to tiah angmacae zaehaih to koi o sak: to pongah hnukkhuem ah Sithaw palungphuihaih to nihcae nuiah krah tih.
௧௬யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடு பேசாதபடிக்குத் தடை செய்கிறார்கள்; இவ்விதமாக எக்காலத்திலும் தங்களுடைய பாவங்களை முழுமையாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபம் பூரணமாக வந்திருக்கிறது.
17 Toe nawkamyanawk, kaicae loe palung hoi na ai, taksa ah nangcae hoi nawnetta thung angthla ah ka oh o, nangcae kang poek o parai pongah, hnuk han kang koeh o parai boeh.
௧௭சகோதரர்களே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே, உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம்.
18 To pongah nangcae khae angzoh han ka koeh o, kai, Pawl doeh nangcae khae angzoh pacoengah, angzoh let han ka koeh vop, toe Setan mah kaicae to pakaa ving.
௧௮ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான்.
19 Aicae Angraeng Jesu Kri anghum naah angmah hmaa ah, nangcae ai ah loe mi maw ka oep o ih anghoehaih hoi anghoehaih sui lumuek ah kaom?
௧௯எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாக இருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;
20 Nangcae loe kaicae lensawkhaih hoi anghoehaih ah na oh o.
௨0நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள்.