< ᏉᎳ ᎡᏈᏌ ᎠᏁᎯ ᏧᏬᏪᎳᏁᎸᎯ 3 >

1 ᎾᏍᎩ ᎢᏳᏍᏗ ᎠᏴ ᏉᎳ ᏥᏴᎩ ᏥᏌ ᎦᎶᏁᏛ ᎠᎩᏍᏛᏗᏍᎬ ᎥᎩᏴᎩᏅᎯ ᏂᎯ ᎨᏒ ᏗᏣᏓᎴᏅᏛ ᏅᏗᎦᎵᏍᏙᏗᏍᎬᎢ —
இதினிமித்தம், பவுலாகிய நான் யூதரல்லாதோர்களாக இருக்கிற உங்கள் பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாக இருக்கிறேன்.
2 ᎢᏳᏃ ᎰᏩ ᎢᏣᏛᎦᏅᎯ ᏱᎩ ᎤᏁᎳᏅᎯ ᎬᏩᎦᏗᏯ ᎤᏓᏙᎵᏍᏗ ᎨᏒ ᎠᏴ ᎥᎩᏁᎸᎢ ᎾᎿᎭᏗᎩᎸᏫᏍᏓᏁᏗᏱ ᏂᎯ ᎣᏍᏛ ᎢᏨᏯᏛᏁᏗᏱ;
உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தேவகிருபைக்குரிய ஒழுங்குமுறை இன்னதென்று கேட்டிருப்பீர்களே;
3 ᎾᏍᎩ ᎬᏂᎨᏒ ᏄᏩᏁᎸ ᎠᎩᎾᏄᎪᏫᏎᎸᎩ ᎤᏕᎵᏛ ᎨᏒᎢ, ᎦᏳᎳ ᎢᎸᏍᎩ ᎢᎧᏁᏨᎯ ᎬᏗ ᏥᏨᏲᏪᎳᏁᎸ,
அது என்னவென்றால் யூதரல்லாதவர்கள் நற்செய்தியினால் உடன்பங்காளிகளுமாக, ஒரே சரீரத்திற்கு உரியவர்களுமாக, கிறிஸ்துவிற்குள் அவர்பண்ணின வாக்குத்தத்தத்திற்கு உடன்பங்காளிகளுமாக இருக்கிறார்கள் என்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
4 ᎾᏍᎩ ᎢᏥᎪᎵᏰᎥᎭ ᏓᏦᎵᏍᏙᏔᏂ ᎪᎵᎬ ᎤᏕᎵᏛ ᎦᎶᏁᏛ ᎤᏤᎵᎦ;
இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.
5 ᎾᏍᎩ ᏧᏪᎫᏔᏅᏒ ᎥᏝ ᎬᏂᎨᏒ ᎢᎨᎬᏁᎸᎯ ᏱᎨᏎ ᏴᏫ ᏧᏁᏥ, ᎾᏍᎩᏯ ᎪᎯ ᎬᏂᎨᏒ ᏥᏂᎨᎬᏁᎭ ᏧᏤᎵ ᎨᏥᎸᏉᏗ ᎨᏥᏅᏏᏛ ᎠᎴ ᎠᎾᏙᎴᎰᏍᎩ ᎠᏓᏅᏙ ᎬᏗ;
அதை நீங்கள் படிக்கும்போது கிறிஸ்துவின் இரகசியத்தைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;
6 ᎾᏍᎩ ( ᎧᏃᎮᏍᎩ ) ᏧᎾᏓᎴᏅᏛ ᏴᏫ ᎤᏠᏱᏉ ᎤᎾᏤᎵ ᏂᎨᎬᏁᎲᎢ, ᎠᎴ ᎾᏍᎩᏉ ᎠᏰᎵ ᎠᏁᎯ ᎨᏒᎢ, ᎠᎴ ᎦᎶᏁᏛ ᎠᎬᏗᏍᎬ ᎤᏚᎢᏍᏔᏅ ᎤᏁᎳᏗᏍᏗᏍᎬᎢ, ᎣᏍᏛ ᎧᏃᎮᏛ ᎬᏔᏅᎯ ᎬᏂᎨᏒ ᎢᎬᏁᎸᎯ;
இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுக்குலத்திற்கு அறிவிக்கப்படவில்லை.
7 ᎾᏍᎩ ᎾᎿᎭᎠᏴ ᏗᎩᎸᏫᏍᏓᏁᎯ ᎠᏴᏋᏁᎸᎯ ᏥᎩ, ᎾᏍᎩᏯ ᎤᏁᎳᏅᎯ ᎬᏩᎦᏘᏯ ᎤᏓᏙᎴᏍᏗ ᎨᏒ ᎥᏆᎵᏍᎪᎸᏓᏁᎸᎯ ᏥᎩ ᎬᏩᏄᎸᏗ ᏂᎨᏒᎾ ᎨᏒ ᎤᎵᏂᎩᏗᏳ ᎨᏒ ᎢᏳᏩᏂᏌᏛ.
தேவனுடைய பலத்த வல்லமையினால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்த நற்செய்திப் பணிக்கு ஊழியக்காரன் ஆனேன்.
8 ᎠᏴ ᏭᏓᎪᎾᏛᏛ ᎠᏆᏍᏗᎧᏂ ᏥᎩ ᎾᏂᎥ ᎤᎾᏓᏅᏘ ᎨᏒ, ᎯᎠ ᎾᏍᎩ ᎬᏩᎦᏘᏯ ᎤᏓᏙᎵᏍᏗ ᎨᏒ ᎥᎩᏁᎸ, ᎾᏍᎩ ᎤᎬᏩᎸᎩ ᎠᏆᎵᏥᏙᏗᏱ ᏧᎾᏓᎴᏅᏛ ᏴᏫ ᎠᏁᎲ ᎬᎪᎵᏰᏗ ᏂᎨᏒᎾ ᎤᏪᎿᎭᎢᏳ ᎨᏒ ᎦᎶᏁᏛ;
பரிசுத்தவான்கள் எல்லோரையும்விட சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவில்லாத ஐசுவரியத்தை யூதரல்லாதவர்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
9 ᎠᎴ ᎾᏂᎥ ᏴᏫ ᎬᏂᎨᏒ ᎢᎦᏥᏴᏁᏗᏱ ᏄᏍᏛ ᎾᏍᎩ ᎤᏕᎵᏛ ᎨᏒᎢ, ᎾᏍᎩ ᏗᏓᎴᏂᏍᎬ ᎡᎶᎯ ᏅᏓᎬᏩᏓᎴᏅᏛ ᎬᏍᎦᎳᏅᎯ ᏥᎩ ᎤᏁᎳᏅᎯ ᎡᎲᎢ, ᎾᏍᎩ ᏂᎦᏗᏳ ᏧᏓᎴᏅᏛ ᎤᏬᏢᏅᏅᎯ ᏥᎩ ᏥᏌ ᎦᎶᏁᏛ ᎠᎬᏗᏍᎬᎢ; (aiōn g165)
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn g165)
10 ᎤᎬᏩᎸᎩ ᎾᏍᎩ ᎪᎯ ᎨᏥᎸᏉᏗ ᎨᏒ ᎠᎴ ᏧᎾᎵᏂᎩᏛ ᎨᏒ ᎦᎸᎳᏗᏳ ᏕᎨᏌᏗᏒᎢ, ᎤᏂᎦᏙᎥᎯᏍᏗᏱ ᎤᏣᏘ ᎢᏳᏓᎴᎩ ᎠᎦᏙᎥᎯᏍᏙᏗ ᎨᏒ ᎤᏁᎳᏅᎯ, ᎨᎬᏗᏍᎬ ᏧᎾᏁᏟᏗ ᎤᎾᏓᏡᎬᎢ;
௧0உன்னதங்களிலுள்ள ஆட்சிக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாக இப்பொழுது தெரியவரும்படி,
11 ᎾᏍᎩᏯ ᏅᏧᏓᎴᏅᎲᎾ ᎤᏓᏅᏖᎸᎢ, ᎦᎶᏁᏛ ᏥᏌ ᎤᎬᏫᏳᎯ ᎢᎦᏤᎵ ᏣᎬᏗᏍᎨ ᏧᏓᏅᏖᎴᎢ; (aiōn g165)
௧௧இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
12 ᎾᏍᎩ ᎢᏳᏩᏂᏌᏛ ᏂᏗᎾᏰᏍᎬᎾ ᎠᎴ ᎦᏰᏗᎷᏤᏗ ᏄᎵᏍᏔᏅ ᏔᎵ ᎤᏛᏗ ᎡᏓᎵᏍᎦᏍᏙᏛ ᏅᏗᎦᎵᏍᏙᏗᎭ ᎾᏍᎩ ᎡᏙᎢᏳᏒᎢ.
௧௨அவர்மேல் உள்ள விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடு தேவனிடம் சேரும் பாக்கியமும் உண்டாயிருக்கிறது.
13 ᎾᏍᎩ ᎢᏳᏍᏗ ᎢᏨᏔᏲᏎᎭ ᏗᏥᏩᎾᎦᎶᎢᏍᏗᏱᏉ ᏂᎨᏒᎾ ᎠᏴ ᎢᏨᎩᎵᏲᏤᎲ ᎢᏳᏍᏗ, ᎾᏍᎩ ᎦᎸᏉᏗᏳ ᎢᏨᏁᎯ ᏥᎩ.
௧௩ஆகவே, உங்களுக்காக நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாமலிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது.
14 ᎾᏍᎩ ᏅᏗᎦᎵᏍᏙᏗᎭ ᏕᏥᏯᎵᏂᏆᏅᏁᎭ ᎤᎬᏫᏳᎯ ᎢᎦᏤᎵᎦ ᏥᏌ ᎦᎶᏁᏛ ᎤᏙᏓ,
௧௪இதற்காக நான் பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள எல்லாக்குடும்பத்திற்கும் பெயரிட்ட சிருஷ்டிகராகிய,
15 ᎾᏍᎩ ᏗᎨᎪᏍᏔᏅᎯ ᏥᎩ ᎾᏂᎥ ᏏᏓᏁᎸᎯ ᎨᏒᎢ, ᎦᎸᎶ ᎠᎴ ᎡᎶᎯ ᎠᏁᎯ,
௧௫நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,
16 ᎾᏍᎩ ᎢᏣᎵᏍᎪᎸᏓᏁᏗᏱ, ᎾᏍᎩᏯ ᎤᏪᎿᎭᎢᏳ ᎨᏒ ᎦᎸᏉᏗᏳ ᎨᏒ ᎤᎲᎢ, ᎾᏍᎩ ᎤᏣᏘ ᏗᏣᎵᏂᎪᎯᏍᏙᏗᏱ ᏕᏣᏓᏅᏛᎢ ᎤᏓᏅᏙ ᎤᏮᏙᏗᏱ;
௧௬நீங்கள் அவருடைய ஆவியானவராலே உள்ளானமனிதனில் வல்லமையாகப் பலப்படவும்,
17 ᎾᏍᎩ ᎦᎶᏁᏛ ᎤᏁᎳᏗᏍᏗᏱ ᏗᏥᎾᏫᏱ ᎪᎯᏳᏗ ᎬᏙᏗ ᎨᏒᎢ; ᎾᏍᎩ ᏂᎯ ᎠᏓᎨᏳᏗ ᎨᏒ ᏗᏣᎵᎾᏍᏕᏝᏗᏍᏔᏅᎯ ᎠᎴ ᏗᏣᎵᏍᏓᏱᏗᏍᏔᏅᎯ ᎨᏒᎢ,
௧௭விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்களுடைய இருதயங்களில் குடியிருக்கவும், நீங்கள் அன்பிலே வேர் ஊன்றி, நிலைபெற்றவர்களாகி,
18 ᎾᏍᎩ ᏂᎯ ᎠᎴ ᎾᏂᎥ ᎤᎾᏓᏅᏘ ᏰᎵᏉ ᎨᏦᎵᏍᏗ ᎢᏳᎵᏍᏙᏗᏱ, ᎾᏍᎩ ᎾᏯᏛᎥᎢ ᎠᎴ ᏂᎦᏅᎯᏒᎢ, ᎠᎴ ᎾᎭᏫᏂᏴᎢ, ᎠᎴ ᏂᎦᏛᎢ;
௧௮எல்லாப் பரிசுத்தவான்களோடும் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் என்னவென்று உணர்ந்து;
19 ᎠᎴ ᎢᏥᎦᏙᎥᎯᏍᏗᏱ ᎦᎶᏁᏛ ᎤᏓᎨᏳᏗ ᎨᏒᎢ, ᎾᏍᎩ ᎠᎦᏙᎥᎯᏍᏗ ᎨᏒ ᏥᎦᎶᏒᏍᏗᎭ, ᎾᏍᎩ ᎡᏥᎧᎵᎢᏍᏙᏗᏱ ᎾᏍᎩ ᏂᎦᏛ ᎠᎧᎵᎢ ᎤᏁᎳᏅᎯ ᎤᏤᎵᎦ.
௧௯அறிவிற்கு எட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய எல்லாப் பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படி, உங்களுக்கு ஆசியருளவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
20 ᎾᏍᎩᏃ Ꮎ ᏰᎵᏉ ᎢᎬᏩᏛᏁᏗ ᏥᎩ, ᎤᏣᏘ ᎤᎶᏒᏍᏗ ᎢᎦᎢ ᎢᏗᏔᏲᎯᎲᎢ, ᎠᎴ ᎢᏓᏓᏅᏖᏍᎬᎢ, ᎾᏍᎩᏯ ᎤᏠᏱ ᎤᎵᏂᎩᏛ ᎨᏒ ᏥᏚᎸᏫᏍᏓᏁᎭ ᎠᏴ ᏕᎦᏓᏅᏛᎢ,
௨0நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படி, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
21 ᎾᏍᎩ ᎬᏩᎸᏉᏙᏗ ᎨᏎᏍᏗ ᏧᎾᏁᎶᏗ ᎤᎾᏓᏡᎬᎢ, ᎦᎶᏁᏛ ᏥᏌ ᎢᏳᏩᏂᏌᏛ, ᏂᎪᎯᎸ ᏕᎨᏌᏗᏒᎢ, ᎠᎵᏍᏆᏗᏍᎩ ᏂᎨᏒᎾ ᎨᏒᎢ. ᎡᎺᏅ. (aiōn g165)
௨௧சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)

< ᏉᎳ ᎡᏈᏌ ᎠᏁᎯ ᏧᏬᏪᎳᏁᎸᎯ 3 >