< Псалми 146 >

1 Алилуя! Хвали Господа душе моя.
யெகோவாவைத் துதி. என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
2 Ще хваля Господа докато съм жив, Ще пея хваление на моя Бог догдето съществувам.
நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
3 Не уповавай на князе, Нито на човешки син, в когото няма помощ.
உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே.
4 Излиза ли духът му, той се връща в земята си; В тоя същий ден загиват намеренията му.
அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.
5 Блажен оня, чиито помощник е Якововият Бог, Чиято надежда е на Господа неговия Бог,
யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
6 Който направи небето и земята, Морето и всичко що е в тях, - Който пази вярност до века;
அவரே வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.
7 Който извършва правосъдие за угнетените, Който дава храна на гладните. Господ ръзвързва вързаните.
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார்,
8 Господ отваря очите на слепите; Господ изправя сгърбените; Господ люби праведните,
யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார்.
9 Господ пази чужденците; Поддържа сирачето и вдовицата; А пътят на нечестивите превръща.
யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார்.
10 Господ ще царува до века, Твоят Бог, Сионе, из род в род. Алилуя!
யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். யெகோவாவைத் துதி.

< Псалми 146 >