< Съдии 7 >
1 Тогава Ероваал (който е Гедеон) стана рано, и всичките люде, които бяха с него, та разположиха стана си при извора Арод; а стана на мадиамците беше на север от тях, в долината до хълма Море.
௧அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் அருகில் முகாமிட்டார்கள்; மீதியானியர்களின் முகாம் அவனுக்கு வடக்கில் மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.
2 И Господ каза на Гедеона: Людете, които са с тебе, са твърде много, за да предам мадиамците в ръката им, да не би да се възгордее Израил против Мене и да каже: Моята ръка ме избави.
௨அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: நான் மீதியானியர்களை உன்னோடிருக்கிற மக்களின் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்; என்னுடைய கை என்னை காப்பாற்றியது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீண்பெருமைகொள்ள வாய்ப்புண்டாகும்.
3 Сега, прочее, иди, прогласи на всеослушание пред людете тия думи: Който се страхува е трепери, нека се върне и си отиде от галаадската гора. И върнаха се от людете двадесет и две хиляди души, и останаха десет хиляди.
௩ஆகையால் பயமும் நடுக்கமும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து வேகமாக ஓடிப்போகட்டும் என்று, நீ மக்களின் காதுகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது மக்களில் 22,000 பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; 10,000 பேர் மீதியாக இருந்தார்கள்.
4 Но Господ каза на Гедеона: Людете пак са много; заведи ги при водата, и там ще ти ги пресея; и за когото ти кажа: Тоя да отиде с тебе, той нека отиде с тебе; а за когото ти кажа: Той да не отиде с тебе, той нека не отиде.
௪யெகோவா கிதியோனை நோக்கி: மக்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்; அங்கே அவர்களை சோதித்துப் பார்ப்பேன்; உன்னோடு வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வரட்டும்; உன்னோடு வரக்கூடாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வராதிருக்கவேண்டும் என்றார்.
5 И той, заведе людете при водата; и Господа каза на Гедеона: Всеки, който полочи с езика си от водата, както лочи куче, него да поставиш отделно, така и всеки, който се наведе на коленете си, за да пие.
௫அப்படியே அவன் மக்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்தான்; அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்குவதுபோல அதைத் தன்னுடைய நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியாகவும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியாகவும் நிறுத்து என்றார்.
6 И числото на ония, които полочиха, като поднесоха ръка до устата си, беше триста мъже; а всичките останали люде се наведоха на коленете си, за да пият вода.
௬தங்கள் கைகளால் அள்ளி, தங்கள் வாய்க்கு எடுத்து, நக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 300 பேர்; மற்ற மக்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.
7 Тогава Господ каза на Гедеона: Чрез тия триста мъже, които полочиха, ще ви избавя, и ще предам мадиамците в ръката ти; а всичките останали люде нека си отидат, всеки на мястото си.
௭அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த 300 பேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற மக்களெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகவேண்டும் என்றார்.
8 И тъй людете взеха храна в ръцете си, и тръбите си; и той изпрати всичките израилтяни, всеки в шатъра му, а тристата мъже задържа при себе си. А мадиамският стан беше под него в долината.
௮அப்பொழுது மக்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலர்கள் எல்லோரையும் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த 300 பேரைமட்டும் வைத்துக்கொண்டான்; மீதியானியர்களின் படை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.
9 И в същата нощ Господ му каза: Стани слез в стана, защото го предадох в ръката ти.
௯அன்று இராத்திரி யெகோவா அவனை நோக்கி: நீ எழுந்து, அந்த படையினிடத்திற்குப் போ; அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்.
10 Но ако те е страх да слезеш, слез със слугата си Фура в стана,
௧0போகப் பயந்தால், முதலில் நீயும் உன்னுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையினிடத்திற்குப் போய்,
11 и ще чуеш какво говорят; и след това ръцете ти ще се подкрепят, за да слезеш в стана. И тъй, той слезе със слугата си Фура до външните части на въоръжените в стана.
௧௧அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு படையினிடத்திற்குப் போக, உன்னுடைய கைகள் பெலப்படும் என்றார்; அப்படியே அவனும் அவனுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையின் முன்பகுதியிலே இரவுகாவல் காக்கிறவர்களின் இடம்வரைக்கும் போனார்கள்.
12 А мадиамците и амаличаните и всичките източни жители бяха разпрострени в долината по множество като скакалци; и камилите им по множество бяха безбройни, като пясъка край морето.
௧௨மீதியானியர்களும், அமலேக்கியர்களும், எல்லாக் கிழக்குப் பகுதி மக்களும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாகப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாக இருந்தது.
13 И като пристигна Гедеон, ето, един човек разказваше сън на другаря си, като говореше: Ето, видях сън, и ето, пита от ечемичен хляб, като се търкаляшие в мадиамския стан, дойде до шатъра и го удари, та падна; и прекатури го така, че шатърът се събори.
௧௩கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு கனவைச் சொன்னான். அதாவது இதோ ஒரு கனவுகண்டேன்; சுடப்பட்ட ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியர்களின் முகாமிற்கு உருண்டுவந்தது, அது கூடாரம்வரை வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.
14 И другарят му в отговор рече: Това не е друго освен сабята на Гедеона Иоасовия син, израилтянина; Бог предаде в ръката му Мадиама и цялото ни множество.
௧௪அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் மகனான கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியர்களையும், இந்த ராணுவம் அனைத்தையும், அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.
15 И като чу това Гедеон разказа на съня и тълкуването му поклони се; и като се върна в Израилевия стан, рече: Станете, защото Господ предаде в ръката ви мадиамското множество.
௧௫கிதியோன் அந்த கனவையும் அதனுடைய விளக்கத்தையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் முகாமிற்கு திரும்பிவந்து: எழுந்திருங்கள், யெகோவா மீதியானியர்களின் படையை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
16 И раздели тристата мъже на три дружини, и даде тръби в ръцете на всичките, тоже и празни водоноси, с факли във водоносите.
௧௬அந்த முந்நூறுபேரை மூன்று படையாக பிரித்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,
17 И рече им: Гледайте мене; и каквото правя аз, правете и вие подобно; и, ето, когато стигна при външните части на стана, то каквото направя аз, това да направите и вие.
௧௭அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் முகாமின் முன்பகுதியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும்.
18 Когато засвиря с тръбата, аз и всичките, които са с мене, тогава да засвирите и вие с тръбите от всяка страна на целия стан, и да извикате: За Господа и за Гедеона!
௧௮நானும் என்னோடு இருக்கும் அனைவரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் முகாமைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிடுவீர்களாக என்று சொன்னான்.
19 И тъй, Гедеон и стоте мъже, които бяха с него, дойдоха при външната част на стана, около началото на средната стража, тъкмо когато бяха поставили часовите; и засвириха с тръбите и строшиха водоносите, които бяха в ръцете им.
௧௯நடுஇரவின் துவக்கத்தில், இரவுக்காவலர்களை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடு இருந்த 100 பேரும் அந்த இரவின் துவக்கத்திலே முகாமின் முன்பகுதியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
20 Па и трите дружини зесвириха с тръбите и, като строшиха водоносите, държаха факлите в левите си ръце, за да свирят; и викаха: Сабя Господна и Гедеонова!
௨0மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,
21 Всеки застана на мястото си около стана; и целият стан се разтича, като викаха и бягаха.
௨௧முகாமைச் சுற்றிலும் அவரவர் தங்கள் இடத்திலே நின்றார்கள்; அப்பொழுது முகாமில் இருந்தவர்கள் எல்லோரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.
22 Защото, като засвириха с тристата тръби, Господ обърна сабята на всеки човек против ближния му в целия стан; и войската избяга до Ветасета към Зерерат, до околностите на Авелмеола при Тават.
௨௨300 பேரும் எக்காளங்களை ஊதும்போது, யெகோவா முகாமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக ஓங்கச்செய்தார்; ராணுவமானது சேரோத்திலுள்ள பெத்சித்தாவரை, தாபாத்திற்கு அருகிலுள்ள ஆபேல் மெகொலாவின் எல்லைவரை ஓடிப்போனது.
23 Тогава израилтяните от Нефталима, от Асира и от целия Манасия се събраха та преследваха Мадиама.
௨௩அப்பொழுது நப்தலி மனிதர்களும், ஆசேர் மனிதர்களும், மனாசேயின் எல்லா மனிதர்களுமாகிய இஸ்ரவேலர்கள் கூடிவந்து, மீதியானியர்களைப் பின்தொடர்ந்து போனார்கள்.
24 И Гедеон прати вестители по цялата Ефремова хълмиста земя да кажат: Слезте против Мадиама и ловете пред тях водите на Иордан до Вет-вара. И тъй, всичките ефремци се събраха та заловиха водите на Иордан до Вет-вара.
௨௪கிதியோன் எப்பிராயீம் மலைகள் எங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியர்களுக்கு எதிராக இறங்கி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் நதி வரை வந்து, அவர்களுக்கு முந்தித் துறைமுகங்களைக் கைப்பற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லச் சொன்னான்; அப்படியே எப்பிராயீமின் மனிதர்கள் எல்லோரும் கூடி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் வரை வந்து, துறைமுகங்களைக் கைப்பற்றிக்கொண்டு,
25 И хванаха двамата мадиамски началници, Орива и Зива, Орива убиха при скалата Орив, а Зива убиха при лина Зив. И гониха Мадиама. И донесоха главите на Орива и Зива на Гедеона оттатък Иордан.
௨௫மீதியானியர்களின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியர்களை துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடம் கொண்டுவந்தார்கள்.