< Исая 58 >
1 Извикай силно, не се щади; Издигни гласа си като тръба Та изяви на людете Ми беззаконието им, И на Якововия дом греховете им.
௧சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் மக்களுக்கு அவர்களுடைய மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்களுடைய பாவங்களையும் தெரிவி.
2 При все това те Ме търсят всеки ден И желаят да учат пътищата Ми; Като народ, който е извършил правда; И не е оставил постановлението на своя Бог, Те искат от Мене праведни постановления, И желаят да се приближат при Бога.
௨தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற தேசத்தாரைப்போல் அவர்கள் நாள்தோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதிநியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.
3 Защо постихме, казват, а Ти не виждаш? Защо смирихме душата си, а Ти не внимаваш? Ето, в деня на постите си вие се предавате на своите си удоволствия, И изисквате да ви се вършат всичките ви работи.
௩நாங்கள் உபவாசிக்கும்போது நீர் கவனிக்காமல் இருக்கிறதென்ன? நாங்கள் எங்களுடைய ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் ஆசையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாகச் செய்கிறீர்கள்.
4 Ето, вие постите за да се препирате и карате, И за да биете нечестиво с песници; Днес не постите така Щото да се чуе горе гласът ви.
௪இதோ, வழக்குக்கும் தர்க்கத்திற்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்களுடைய கூக்குரலை உயரத்திலே கேட்கச்செய்வதற்காக, இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசிக்காதீர்கள்.
5 Такъв ли е постът, който Аз съм избрал, - Ден, в който трябваше човек да смирява душата си? Значи ли да навежда човек главата си като тръстика, И да си постила вретище и пепел? Това ли ще наречеш пост и ден угоден на Господа?
௫மனிதன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் சணல் ஆடையிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் யெகோவாவுக்குப் பிரியமான நாளென்றும் சொல்வாய்?
6 Не това ли е постът, който Аз съм избрал, - Да развързваш несправедливите окови, Да разслабваш връзките на ярема, Да пускаш на свобода угнетените, И да счупваш всеки хомот?
௬அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணைப்புகளை தளர்த்துகிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும்,
7 Не е ли да разделяш хляба си с гладния, И да въведеш в дома си сиромаси без покрив? Когато видиш голия да го обличаш, И да се не криеш от своите еднокръвни?
௭பசியுள்ளவனுக்கு உன் உணவைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்தப்பட்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், ஆடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு ஆடை கொடுக்கிறதும், உன் உறவினனுக்கு உன்னை மறைக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்குப் பிரியமான உபவாசம்.
8 Тогава твоята светлина ще изгрее като зората, И здравето ти скоро ще процъфне; Правдата ти ще върви пред тебе, И славата Господна ще ти бъде задна стража.
௮அப்பொழுது விடியற்கால வெளிச்சத்தைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; யெகோவாவுடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
9 Тогава ще зовеш, и Господ ще отговаря! Ще извикаш, и Той ще рече Ето Ме! Ако махнеш насред себе си хомота. Соченето с пръст и нечестивите думи,
௯அப்பொழுது நீ கூப்பிடுவாய், யெகோவா மறுமொழி கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்வார். நுகத்தடியையும், குற்றம்சாட்டுதலையும், அநியாய வார்த்தைகளையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
10 Ако даруваш на гладния желаното от душата ти, И насищаш наскърбената душа, Тогава светлината ти ще изгрява в тъмнината, И мракът ти ще бъде като пладне;
௧0பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் இருள் மத்தியானத்தைப் போலாகும்.
11 Господ ще те води всякога, Ще насища душата ти в бездъждие, И ще дава сила на костите ти; И ти ще бъдеш като напоявана градина, И като воден извор, чиито води не пресъхват.
௧௧யெகோவா எப்பொழுதும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை பெலமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
12 И родените от тебе ще съградят отдавна запустелите места: Ще възстановиш основите на на много поколения; И ще те нарекат Поправител на развалините, Възобновител на места за население.
௧௨உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த இடங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
13 Ако отдръпнеш ногата си в събота, За да не вършиш своята воля в светия Ми ден, И наречеш събота наслада, света на Господа, почитаема, И Го почиташ като не следваш в нея своите си пътища, И не търсиш своето си удоволствие, и не говориш своите си думи,
௧௩என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்குப் பிரியமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு பிரியமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், யெகோவாவுடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக கருதுவாயானால்,
14 Тогава ще се наслаждаваш в Господа: И Аз ще те направя да яздиш по високите места на земята, И ще те храня в наследството на баща ти Якова; Защото устата Господни изговориха това.
௧௪அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிசெய்து, உன் தகப்பனாகிய யாக்கோபுக்குச் சொந்தமானவைகளால் உன்னைப் போஷிப்பேன்; யெகோவாவுடைய வாய் இதைச் சொல்லிற்று.