< 2 Царе 20 >
1 А случи се да има там един лош човек на име Семей, Вихриевия син, вениаминец; и той засвири с тръбата и рече: Ние нямаме дял в Давида, нито имаме наследство в Иесеевия син! в шатрите си, Израилю, всеки човек!
௧அப்பொழுது பென்யமீன் மனிதனான பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள பிரச்சினைக்குரிய மனிதன் ஒருவன் தற்செயலாக அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்கு தாவீதிடம் பங்கும் இல்லை, ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலர்களே, நீங்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்குப் போய்விடுங்கள் என்றான்.
2 И тъй, всичките Израилеви мъже се оттеглиха от Давида и последваха Савея Вихриевия син; а Юдовите мъже останаха привързани към царя си, от Иордан до Ерусалим.
௨அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் தாவீதைவிட்டுப் பிரிந்து, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம் வரையுள்ள யூதா மனிதர்கள் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.
3 И Давид дойде у дома си в Ерусалим. И царят взе десетте си наложници, които бе оставил да пазят къщата, та ги тури в една къща под стража и хранеше ги, но не влизаше при тях; и те останаха затворени до деня на смъртта си, живеещи като вдовици.
௩தாவீது எருசலேமிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது, வீட்டைக்காக்க ராஜா வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வரவழைத்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்துப் பராமரித்தான்; அதன்பின்பு அவர்களிடம் அவன் உறவு வைத்துக்கொள்ளவில்லை; அப்படியே அவர்கள் மரணமடைகிற நாட்கள்வரை அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் விதவைகளைப்போல இருந்தார்கள்.
4 Тогава царят рече на Амаса: Събери ми Юдовите мъже в три дена, и тогава ти да се явиш тук.
௪பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனிதர்களை மூன்று நாட்களுக்குள்ளே என்னிடம் வரவழைத்து, நீயும் வந்து இருக்கவேண்டும் என்றான்.
5 И тъй, Амаса отиде да събере Юда; забави се, обаче повече от назначеното време, което бе му определил.
௫அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பதற்காக போய், தனக்குக் குறித்த காலத்தில் வராமல் தாமதித்தான்.
6 Затова Давид каза на Ависея: Сега, Савей Вихриевият син, ще ни стори по-голяма пакост от Авесалома. Вземи ти слугите на господаря си та го преследвай, да не би да си намери укрепени градове и избегне от очите ни.
௬அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைவிட பிக்கிரியின் மகனான சேபா, இப்பொழுது நமக்கு தீங்கு செய்வான்; அவன் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடி, நீ உன் எஜமானுடைய வீரர்களை அழைத்துக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.
7 Излязоха, прочее, подир него Иоавовите мъже, и херетците, фелетците и всички силни мъже излязоха от Ерусалим за да преследват Савея Вихриевия син.
௭அப்படியே யோவாபின் மனிதர்களும், கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும், எல்லா வலிமையான வீரர்களும் அவனுக்குப்பின்பாகப் புறப்பட்டு, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர்வதற்கு எருசலேமிலிருந்து போனார்கள்.
8 Когато стигнаха до голямата скала в Гаваон, Амаса дойде насреща им. А Иоав носеше препасана дрехата, с която беше облечен, а върху нея меч в ножницата му, вързан около кръста му с пояс; и като излезе той към него, мечът падна.
௮அவர்கள் கிபியோனின் பக்கத்தில் இருக்கிற பெரிய பாறை அருகில் வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிராக வந்தான்; யோவாபோ, தான் அணிந்துகொண்டிருக்கிற தன்னுடைய சட்டையின்மேல் ஒரு வாரைக் கட்டியிருந்தான்; அதில் உறையோடு ஒரு பட்டயம் அவன் இடுப்பில் தொங்கினது; அவன் புறப்படும்போது அது விழுந்தது.
9 И рече Иоав на Амаса: Здрав ли си, брате мой? И Иоав хвана Амаса за брадата с дясната си ръка за да го целуне.
௯அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என்னுடைய சகோதரனே, சுகமாக இருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தம்செய்யும்படி, தன்னுடைய வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து,
10 А Амаса не се предпази от меча, който беше в другата ръка на Иоава; и така Иоав го удари с него в корема, и изля червата му, на земята без да го удари втори път; и той умря. Тогава Иоав и брат му Ависей продължаваха да преследват Савея Вихриевия син.
௧0தன்னுடைய கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாக இல்லாமலிருந்தபோது, யோவாப் அவனை அவனுடைய குடல்கள் தரையிலே விழும்படி, அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் இறந்துபோனான்; அப்பொழுது யோவாபும் அவனுடைய சகோதரனான அபிசாயும் பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.
11 А един от Иоавовите момци застана при Амаса и казваше: Който благоприятствува на Иоава, и който е за Давида, нека върви подир Иоава.
௧௧யோவாபுடைய வாலிபர்களில் ஒருவன் இறந்தவன் அருகில் நின்று, யோவாபின்மேல் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதை ஆதரிக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போகட்டும் என்றான்.
12 А Амаса лежеше овалян в кръвта си всред пътя. И когато видя тоя човек, че всички люде се спираха, отвлече Амаса от пътя в нивата; и понеже видя, че всеки, който идеше при него, се спираше, хвърли върху него една дреха.
௧௨அமாசா நடுவழியில் இரத்தத்திலே புரண்டுகிடந்தபடியால், மக்கள் எல்லோரும் அங்கேயே நிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப்போட்டான்; அவன் அருகில் வருகிறவர்கள் எல்லோரும் அங்கேயே நிற்பதைக் கண்டு, ஒரு ஆடையை அவன்மேல் போட்டான்.
13 И като беше преместен от пътя, всички люде отидоха подир Иоава за да преследват Савея Вихриевия син.
௧௩அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பின்பு, எல்லோரும் கடந்து, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர, யோவாபுக்குப் பின்னேசென்றார்கள்.
14 А Савей мина през всичките Израилеви племена до Авел и до Вет-мааха; и всичките отборни момци, те също се събраха заедно та го последваха.
௧௪அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவான ஆபேல்வரையும், பேரீமின் கடைசிவரையிலும் வந்திருந்தான்; அந்த இடத்தார்களும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
15 Тогава дойдоха та обсадиха в Авел на Вет-мааха, и издигнаха могила против града, като я поставиха срещу вала; и всичките люде, които бяха с Иоава, удряха стената със стеноломи за да я съборят.
௧௫அவர்கள் போய் பெத்மாக்காவான ஆபேலிலே அவனை முற்றுகையிட்டு, பட்டணத்திற்குள் போகத் தடைச்சுவர்களைக் கட்டினார்கள்; யோவாபோடு இருக்கிற இராணுவத்தினர்கள் எல்லோரும் மதிலை விழச்செய்யும்படி அழிக்க முயற்சிசெய்தார்கள்.
16 Тогава една благоразумна жена извика от града: Слушайте, слушайте! Моля, кажете на Иоава: Приближи се тук, за да ти поговоря.
௧௬அப்பொழுது புத்தியுள்ள ஒரு பெண் பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடு பேசவேண்டும்; அவரை இங்கே அருகில் வரச்சொல்லுங்கள் என்றாள்.
17 И когато се приближи до нея, жената рече: Ти ли си Иоав? А той отговори: Аз. Тогава ме рече: Слушай думите на слугинята си. А той отговори: Слушам.
௧௭அவன் அவளுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பெண்: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.
18 И тя продума, казвайки: В старо време имаха обичай да говорят, казвайки: Нека се допитат до Авел, и така да решат работата.
௧௮அப்பொழுது அவள்: முற்காலத்து மக்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள்.
19 Аз съм от мирните и верните на Израиля; ти искаш да съсипеш град и даже столица в Израил. Защо искаш да погълнеш Господното наследство?
௧௯இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாக இருக்கும்போது, நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாக இருக்கிறதை அழிக்கவேண்டும் என்று பார்க்கிறீரோ? நீர் யெகோவாவுடைய சுதந்திரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
20 А Иоав в отговор каза: Далеч от мене, далеч от мене да погълна или да съсипя!
௨0யோவாப் மறுமொழியாக: விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாக இருக்கட்டும்.
21 Работата не е така; но един мъж от хълмистата земя на Ефрема, на име Савей Вихриевият син, е подигнал ръка против царя, против Давида; предайте само него, и ще си отида от града. И жената рече на Иоава: Ето, главата му ще ти се хвърли през стената.
௨௧காரியம் அப்படியல்ல; பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள எப்பிராயீம் மலையை சேர்ந்தவனாக இருக்கிற ஒரு மனிதன், ராஜாவான தாவீதுக்கு விரோதமாகத் தன்னுடைய கையை ஓங்கினான்; அவனைமட்டும் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தைவிட்டுப் போவேன் என்றான். அப்பொழுது அந்தப் பெண் யோவாபைப் பார்த்து: இதோ, அவனுடைய தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,
22 Тогава жената отиде при всичките люде та им говори с мъдростта си. И те отсякоха главата на Савея, Вихриевия син, та я хвърлиха на Иоава. Тогава той засвири с тръбата, и людете се оттеглиха от града, всеки в шатъра си. И Иоав се върна при царя в Ерусалим.
௨௨அவள் மக்களிடத்தில் போய் புத்தியாகப் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகனான சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடம் போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; எல்லோரும் பட்டணத்தைவிட்டுக் கலைந்து, தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடம் போகும்படி எருசலேமிற்குத் திரும்பினான்.
23 И Иоав беше над цялата Израилева войска; а Венаия Иодаевият син, над херетците и над фелетците.
௨௩யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் மகனான பெனாயா கிரேத்தியர்கள்மேலும் பிலேத்தியர்கள்மேலும் தலைவராக இருந்தார்கள்.
24 Адорам беше над данъка; Иосафат Ахилудовият син, летописец;
௨௪அதோராம் கடினமாக வேலை வாங்குகிறவனும், அகிலூதின் மகனான யோசபாத் மந்திரியும்,
25 Сева, секретар; а Садок и Авиатар, свещеници;
௨௫சேவா எழுத்தாளனாகவும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாகவும் இருந்தார்கள்.
26 също и яирецът Ирас беше първенец при Давида.
௨௬யயீரியனான ஈராவும் தாவீதுக்கு முதலமைச்சராக இருந்தான்.