< Yohans Dooshishiyo 15 >
1 «Ariko weyini k'ombo taane, mitwotsi goshtso tnihiye,
௧நான் உண்மையான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத்தோட்டக்காரர்.
2 Ti atse fa'o shuu shuraw jabjamwotsi tnih k'ut'de juuk'ritwe, shuu shuwitu jaabo ayide b́shuwitwok'o k'anzde'er s'ayintsitwe.
௨என்னில் கனிகொடுக்காதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்செய்கிறார்.
3 Itwere itsh tiaap'ts aap'atse tuutson and s'ayinwots itne.
௩நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாக இருக்கிறீர்கள்.
4 Taan beewere, taawere itn beetwe, jaabo weyini k'ombats kup'ar beeratse wotiyal biyal shuu shuwo b́falrawok'owa itwoor taan beyo itk'azal shuu shuwo falratste.
௪என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக கனிகொடுக்காததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
5 «Taa weyini k'ombo taane, itwere jaabwots itne, ti ats deshar beetwonat taawere bín t beetwoniye ay shuwo shuwitwee, eshe ti'aalo eegor k'alo falratste.
௫நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னை அல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.
6 Tiats deshar beerawo jaabwots uromaants juwere b́shuk'eti. Mank'o wottso jabwotsi kakude'er taawots juwere bomis'eti.
௬ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எரியப்பட்ட கொடியைப்போல அவன் எரியப்பட்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.
7 Taan itbeyink'e ti aap'tswotswere ititse bobeyink'ere itgeyiru jamo itk'onor daatsitute.
௭நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
8 Ay shuwo it shuwink'ere manatse tuutson t nih mangiyank'ee, itwere t danifwotsi it wottsok'o kitsiyank'te.
௮நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீடராக இருப்பீர்கள்.
9 Niho taan b́shuntsok'o taawere itn shunre, manshe tshunon beewere,
௯பிதா என்னில் அன்பாக இருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாக இருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
10 Taa t nih tzaziyo t kottsok'onat b́ shunon t beyirwok'o itwere ti tzaziyo it kotal t shunon beetute.
௧0நான் என் பிதாவின் கட்டளைகளைக் கடைபிடித்து அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
11 Jaman itsh tkeewiye tgeneeú'wo ititse wotar it geneúwo s'een b́wotishe.
௧௧என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
12 T tzaziyoniye taa iti t shuntsok'o itiwere it atsatseyo it shunetwok'owe.
௧௨நான் உங்களில் அன்பாக இருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கட்டளையாக இருக்கிறது.
13 Asho b́ kasho b́ mashots shegro beshide imoniyere bogts shuno deshatse.
௧௩ஒருவன் தன் நண்பனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.
14 Itwere ti imts tzaziyo it s'eentsiyal t mashots itne.
௧௪நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் நண்பர்களாக இருப்பீர்கள்.
15 Guutso doonzo b́finirwo b́danawotse, haniyere hakon guutswotso eraatse, s'uznmó tnihoke tshishts jamo itsh tkitstsotse t mashotsi etreitsha,
௧௫இனி நான் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லுகிறதில்லை, வேலைக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களை நண்பர்கள் என்றேன், ஏனென்றால், என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
16 Taana iti marat'dek'i bako it taan marat'de'atste, amr ay shuwo itshuwitwok'o, itshuwonwere beetk b́wotitwok'o itn tnaashiy. Manshe niho t shútson it k'onts jamo itsh imetwe.
௧௬நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கும்படி நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்களுடைய கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.
17 Eshe taa itin tiazazir it atsatsewo it shunetwok'owe.
௧௭நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
18 «Datsan itn b́ shit'al itiyere shino taan b́shit'tsok'o dande'ere.
௧௮உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
19 Datsank it wotink'ere datsan b́tokk wottswotsi shunak'e b́teshi. Ernmó datsank woto it k'aztsotsnat taa datsanatse iti marat' t dek'tsosh datsan itn shit'etwee.
௧௯நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
20 Guutso doonzoniyre bowatse etaat itsh t keewtso gawwre, taan bogiishitka wotiyal itnowere gishitune, ti aap'o bokotink'e it aap'ono kotetune.
௨0வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்.
21 Taan woshtso bodanawotse t jangosh jaman itats k'alitunee.
௨௧அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.
22 Taa waat boosh keewratse wotink'e morro boats woteratse b́teshi, ernmó and bo morrosh weebo deshatsne.
௨௨நான் வந்து அவர்களோடு பேசாதிருந்தால் அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுதோ தங்களுடைய பாவத்தைக்குறித்து சாக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.
23 Taan shit'irwo t nihnowere b́ shit'iri,
௨௩என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
24 K'osh ash fineraw fino bo dagotse fino tk'azink'ere morro boosh woteratse b́ teshi, andmó jaman bobek'iyakon taano t nihno shit'rne.
௨௪வேறொருவரும் செய்யாத செயல்களை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தால், அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் பார்த்தும், பகைத்தும் இருக்கிறார்கள்.
25 Hanwere b́ wottso ‹Ik jagalo taan shit'rne› ett nemotse guut'etso b́ s'eenetwok'owe.
௨௫காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது.
26 «Ernmó nihoke keshetwonat taawere nihoke itsh twoshitwo itn kup'itwo ari S'ayn shayiro b́ woor bí t jango gawitwe.
௨௬பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
27 Itwere baltson tuwat taanton it teshtsotse gawitute.
௨௭நீங்களும் ஆரம்பமுதல் என்னுடனே இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.