< গীতসংহিতা 100 >

1 স্তবার্থক সঙ্গীত। আনন্দে চিত্কার কর সদাপ্রভুুর উদ্দেশ্যে, সারা পৃথিবী।
நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சங்கீதம். பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள்.
2 আনন্দ সহকারে সদাপ্রভুুর সেবা কর; আনন্দগানের সাথে তার সামনে এস।
மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள், மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள்.
3 জানো যে সদাপ্রভুুই ঈশ্বর; তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা তার লোক এবং তার চারণভূমির মেষ।
யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள். அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்; நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.
4 ধন্যবাদ সহকারে তাঁর দরজায় ঢোকো এবং প্রশংসা সহকারে তার উঠানে ঢোকো। তাকে ধন্যবাদ দাও এবং তার নাম মহিমান্বিত কর।
அவருடைய வாசல்களில் நன்றியோடும், அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
5 কারণ সদাপ্রভুু মঙ্গলময়; তার বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী এবং তার বিশ্বস্ততা বংশপরম্পরা স্থায়ী।
யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது; அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.

< গীতসংহিতা 100 >